ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.
வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
(3)
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ விநாயகர் துதி :–
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகடசக்கரத் தாமரை நாயகன்
அகடசக்கர விண்மணி யாவுரை
விகடசக்கரம் மெய்ப்பதம் போற்றுவாம்.
உலகினில் மிகச்சிறந்த ஆற்றல்:-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நிலவுலகினில் மிகவும் சிறந்த இரண்டு அம்சங்கள் உண்டு என்று அறிவின் சிறந்த ஞானியர்கள் கருதுகிறார்கள். அவை எதுவென்றால், முதலில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களை யும், ஜீவர்களையும் தனதாக ஆக்கிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் தெய்வீக அம்சமாகிய ஆற்றல் சக்தி! இரண்டாவது உலகத்தில் படைக்கப்பட்ட, உலோக, அலோக, ஜடப் பொருட்கள் மற்றும் சகல உயிர்த்தொகைகள் அத்தனையும் தனது அருள் ஆட்சியின் உயர்ந்த தன்மைக்குள் அடக்கியே ஆளுமை செய்து வரும் சிறப்பான அம்சம்! பராபரமாகிய இறைவன் இவ்விரண்டு செயல்களால் அறிவினில் விளக்கம் செய்து எல்லா ஜீவர்களின் வாழ்வையும் வழி நடத்திக் கொண்டு செல்கின்றார். இவ்விரண்டு அம்சங்களும் வேறு வேறல்ல! இரண்டும் ஒரே பராபரத்தின் சிறப்புக்கள் தான். அத்தகைய ஆண்டவனாகிய பராபரம் பிரபஞ்சத்தில் உள்ள அகிலலோகங்களிலும் வியாபிக்கும் மகா சக்தி சொரூபியாக விளங்குகிறார். பராபரமாகிய அவ்வாண்டவனின் அம்சமாக, மனிதவடிவில் மேன்மையான அவதாரமாகத் தோன்றியவரே ஸ்ரீ ராம பிரான்.
ராவணன் பெற்ற வரம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராவணேஸ்வரன் தவம் செய்து இறைவனிடம் இறவாத வரத்தைக் கேட்கின்றான். ஆண்டவன் படைப்பில் பிறப்பும், இறப்பும் இயல்பு. வேறொரு வரம் கேட்டப் பணிக்கின்றார். மனிதனைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தைக் கேட்டுப் பெறுகிறார் ராவணேஸ்வரன். காரணம் தன்னை மானுடன் எதிர்க்கத் துணியமாட்டான் என்கிற அகம்பாவம் கொண்டு அவ்வரம் கேட்க, இறைவனும் தந்து விடுகின்றார். அந்த வரம் பெற்ற சிவபக்தனாகிய ராவணேஸ்வரனும் தனது அரசாட்சியை நிலை நிறுத்த, தனது படைகளுடன் திக்கு விஜயத்தை மேற்கொள்கிறான். இறையருள் சக்தி ராவணனை சம்ஹாரம் செய்திடவே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் எடுக்கின்றார். எந்த மானுட ஜென்மத்தை இகழ்ந்து அவமரியாதையாக ராவணன் எண்ணினானோ, அவனை வதம்புரிய தெய்வீக சக்தி மனிதனாக உலகினுக்குத் வந்தே விட்டது. தேவர்கள் பூசாரி பொழிந்து வாழ்த்தினர்.
ராவண ரகசியம் :–
°°°°°°°°°°°°°°°°°°°°°°
தசகண்ட ராவணன் மிகச்சிறந்த சிவபக்தனாவான். அவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறிக் கொண்டு சிவயோகி ஒருவர் இருந்தார். மனித அவதாரம் எடுத்த பகவான் ஸ்ரீ ராமன் கரங்களால் ராவணேஸ்வரன் மரணமடைய வேண்டும் என்ற தெய்வீக ரகசியத்தை அறிந்து கொண்டவர் அவர். ராமனின் மரண விதியை நகர்த்துவதற்குச் சென்ற அவர் வேறு யாருமல்ல சாட்சாத் ஆஞ்சநேயரே தனது உருவை மாற்றிக் கொண்டு சிவ யோகியாக ராவணேஸ்வரன் அருகாமையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் நரகத்திற்கு திக்கு விஜயம் செய்திட உடன் வருமாறு கேட்டுக் கொண்டான். ஆலோசனைகள் கேட்ட ராவணனிடம் சில விஷயங்களைக் கூறி அங்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் பிடிவாத குணமுடைய ராவணன் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தான். உடன் வரமறுத்த ஆலோசகரான சிவயோகியை ராவணன் நிந்தனை செய்தான். அவரும் அதைக் கேட்டு மெளனமானார்.
சொர்கத்தில் நளமகா முனிவரின் சந்திப்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° தசகண்ட ராவணன் நரகத்திற்கு திக்கு விஜயம் செய்யும் பயணத்தை ஒத்தி வைத்து விட்டு, சொர்கலோகம் சென்றான். அங்கு நளமகா முனிவரை சந்திக்கும்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணித்துத் துல்லியமாகக் கூறும் அவரது ஆற்றலைக் கண்டு பிரமித்தான். சிவபக்தனான தனது ஆயுள் பற்றிக் கணித்துக் கூறும்படி வேண்டிக் கொண்டான். ஊழ்வினை வந்துறுத்த அந்த ரகசியத்தை நளமகா முதியவரிடம் கேட்டு அறிந்து அதிர்ச்சி உற்றான். இறப்பிற்குப் பிறகு தனக்கு நரகலோகத்தில் தண்டனை உறுதி என்பதை அறிந்த பிறகு கடும் கோபமுற்றான். அந்த இடத்தையே அழித்து விடுகிறேன் என மனதிற்குள் கருவிக் கொண்டான். நளமகா முனிவரைத் தன்னுடன் நரகலோகம் வந்து அந்த இடத்தைக் காண்பித்திட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். தனது ஆசானாக விளங்கும் சிவயோகி தனது மரண ரகசியம் அறிந்தும், தன்னிடம் கூறாத காரணம் என்ன? எண்றெண்ணி அவரை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்று கோபத்தில் துடிதுடித்தான். அதனை உணர்ந்து கொண்ட நளமகா முனிவர், சிவயோகியைக் காப்பாற்ற வேண்டும் என்றெண்ணி ராவணனுடன் இலங்காபுரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வளம் பெருக! அருள் பெறுவோம்!
(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
அருளாசிகள்,
தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி,
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.