ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.
வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
(22) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.
பூலோகம் ஆண்ட ராஜாவின் மகளா பூமி புத்திரி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அசுரராஜன் தேஜசஞ்சாரம் செய்து வரும் போது தனது புஷ்பக விமானத்தில் இருந்து, இளம் பிராயமுடைய யோகினி ஒருத்தி தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு மோகம் கொண்டான். ஈச்சங்கள் மாந்திப் பிதற்றியபடி மோகவெறியில், நெறிதவறி, முறையற்று, யோகினியின் கரங்களைப் பற்றி இழுத்த போது அவளின் கடும் சாபத்திற்கும் இலக்காகிப் போனான். அவள் பழியுணர்வுடன் நெருப்பினுள் பாய்ந்து, தனது இன்னுடலை தகனம் செய்தபோது, விருப்பமுறாத எந்தப் பெண்ணையும் ராவணன் தீண்டினால் அவனது சிரசு வெடியுண்டு இறந்து போகும்படியும், அவனது நாடும், நகரமும் நெருப்பினால் பஸ்பமாகுமாறு சாபமிட்டுக் கதறியழுதபடியே உயிரை விட்டாள். இறந்த அவளது எண்ணங்கள் இருள் மாயையாக உருவெடுத்து அலமந்து பழிபாவத்துடன் தவித்துக் கொண்டிருந்தது. ராவணனது மோகப்பித்து தலைக்கேறியதால் இறந்து எரிந்துபோன யோகினியின் உடற் சாம்பல் மீது படுத்துருண்டு, ஆசையாக அதனை உடல் எங்கணும் பூசிக்கொண்டு அரற்றி ஏங்கியழுதான். இதனைப் 17- ஆவது பாடத்தில் படித்திருந்தோம் அல்லவா? அதன் பிறகு நடந்த நிகழ்வுகள்அனைத்தும் ஆச்சரியமுறும்படியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், அது அசுர மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவையாய்த் திகழ்ந்தன! ராவணன் ஆரம்பகாலத்தில் சிறந்த சிவபக்தனாய் விளங்கியவனே! ஈஸ்வரப் பட்டத்தையும் அடைந்தவன்.
ஒருவன் ஈஸ்வரப்பட்டத்தை அடைய வேண்டும் என்றால் அதற்கென சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். உலகில் உள்ள சகல ஜீவர்களிடக்திலும் அன்புடன் கூடிய நற்குணங்கள் அவனிடம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அறிவுடையோன் – அறிவு குறைபாடு உடையோன், ஏழை – செல்வந்தன், நல்லோம் – தீயோன், உயர்ந்தோன் – தாழ்ந்தோன், பாவி – புண்ணியன் என்னும் பேதா பேதங்களின்றி அனைவரிடமும் சமமான பாவனைகளுடன் இருத்தல் வேண்டும். சக்தி, பண்பு, ஞானம், அழகு, அறிவு, பக்தி ஆகிய தெய்வீக குணங்கள் அமையப்பெற்று வாழ்பவன் ஈஸ்வரனைப் போல உலகினில் வீற்றிருப்பான். அனைத்துக் காரிய சித்தியும் ஏற்பட்டு, ஞான சக்தியுடன், வாக்கு சுத்தியும் பெற்று பாரோர் போற்றிடச் சிறப்பான். ஆனால் ராவணனுக்கு அசுர குணங்கள் மாறவே மாறாது அவனை ஆட்டிப்படைத்தன. எது எப்படியோ அசுரன் ராவணனின் தர்மபத்தினி மண்டோதரியிடம், அவனது உடலில் அணுவாகத் தங்கி இருந்த மாண்டு போன தவயோகினியின் மாயா இருள் சக்தி, சூல் கொண்டு உரிய காலத்தில் வளர்ந்து வரலானது. யோகினி ராவணனை சபித்த காரணமும் ராவண வதத்திற்குத் தேவையான ஒன்றாகிப் போனது. யேகினியானவள் ராவணனுக்கு மகளாகப் பிறந்தும் விட்டாள். பூமிபுத்திரி என்ற பெயர் நாமப் படுத்தப்பட்டாள், ராவணனது சகோதரி சூர்ப்பனகை என்பவள் செல்வச்செழிப்புடன் வாழும் மனையடி சாஸ்த்திரம் கற்றவள், தனது சகோதரன் அக்கினி மூலையில் சிவன் பூஜை செய்து வருவதால் அவன் குலம் அழிந்துபடும் காரணத்தை எடுத்துக் கூறினாள். பூஜை செய்யுமிட ம் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கூறினாள்.
ராவணேஸ்வரன் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் தனது மனைவி பெண் குழந்தையை ஈன்றெடுத்தபோது, யோகினி தனக்கு இட்ட சாபத்தை எண்ணித் துணுக்குற்றான். பிரம்ம தேவரை உடனே அழைத்து வரச் செய்து தனது மகளின் ஜாதக விஷேசத்தைக் கணித்துக் கூறும்படி கேட்டுக் கொண்டான். பூமி புத்திரியின் ஜாதகத்தைக் கணித்த பிரம்ம தேவர் பக்குவமாக அவனுக்கு எடுத்துக் கூறினார். “அக்கினி தோஷமுடைய குழந்தை இது. லங்கா தேசத்தில் உனது குலத்திற்கு இதனால் இடையூறுகள் உண்டாகும்” என்றார். அதனைக் கேட்டுக் கடுங்கோபமுற்ற ராவணன் குழந்தையைக் கொன்று விட வாளை உருவினான். சிசு ஹத்தி கூடாது என்று தடுத்த பிரம்மதேவர், “ராவணா நான் கூறுவதைச் சற்று செவிமடுப்பாய். நாவலந்தீவில் உள்ள மிதிலாபுரியை ஆளும் மன்னன் ராஜரிஷி ஜனகர் அரண்மைத் தோட்டத்தில் இக் குழந்தையைப் பூமிக்குள் புதைத்து விடவேண்டும். அதனால் உனக்கும் உனது தேசமும் அக்கினி தோஷத்தில் இருந்து விடுபடும். உனக்கொன்றும் இதனால் எவ்விதத் துன்பமும் ஏற்பட்டு விடாது” என்றார். பூமி புத்திரிஐைக் காப்பாற்றி விடும் நோக்குடன் இந்த ஆலோசனை கூறப்பட்டது. அதன்படியே அசுர வீரர்கள் காரியமாற்றினர். மிதிலையில் உழவுத் திருவிழா நடந்து கொண்டிருந்த சமயமது. ராஜரிஷி ஜனகமன்னன் முதல் உழவைத் துவங்கி நடத்தியபோது, படைச்சாலில் ஏர் முனை சிக்கிக் கொண்டது. பூமியை அகழ்ந்து பார்த்த போது ஒரு பேழை வெளிப்பட்டது.
(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!
வளம் பெருக! அருள் பெருவோம்;
அருளாசிகள்,
தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,
நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.