ஹடயோகியின் வாக்கு மெய்.

181

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

31•05•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(335) மனிதனே புனிதன் —
ஹடயோகியின் வாக்கு மெய்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரு.APM.சாமி அவர்கள் தனது மகனைப் பற்றிய ஓர் உண்மையைக் கணித ஆசான் கூறக்கேட்டதும் திகைத்து நின்று விட்டார். அது, “சாமி உனது மகனைப் பற்றி எனது தந்தை மஹா ஹடயோகி திரு. தங்கவேல் தேவர் அவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். உன் மகன் மகா உத்தமன். அவனால் அநேக புனித காரியங்கள் நடைபெற உள்ளது. அவன் பலம் அவன் அறியாதவாறு இப்போது தெய்வீக அருளால் தடுக்கப் பட்டுள்ளது. இவனைப் பற்றி உலகம் புரிந்து கொள்ளும். இவனிடம் உண்மையான அன்பை மக்கள் செலுத்திக் பயன் பெறுவார்கள். குடும்பத்தினரால் விரும்பப்படாத ஓர் நல்லவன் எப்படி வெளியே வாழ முடியும்? ” என்று கேட்டார். அதற்குத் திரு.APM. சாமி அவர்கள் , “நல்லது வாத்தியார் ஐயா. எனது மகனை நான் சாதாரண மனுஷனாத்தான் பார்க்கிறேன். ஆனால் அவன் வித்தியாசமா நடந்து கொள்வதப் பார்க்க மனசு கேக்கல! ஆயிரம் குற்றங்குறைகளோட எல்லாப் பிள்ளைகளும் வாழறதப் பாரக்கறேன். எல்லாத்தையும் அனுபவிச்சு வாழாம இது என்ன கூத்து! கவனத்தை திருத்தவும். அதுக்கு வழியச் சொல்லுங்க” எனக் கூறிப் பிறகு தனது தலையைப் பிடித்தபடி தனியே சென்று அமர்ந்து கொண்டார். திரு.T.முருகானந்த வாத்தியார் சுவாமியின் தகப்பனாரை சமாதானப் படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

“எனது மகனை நல்லாப் படிக்க வச்சு ஆளாக்கி எப்படி யெல்லாம் கொண்டு வரணுமுன்னு கற்பனையை வளர்த்துட்டு வருகிறேன். இவன் என்றான்னா சாமியாராப் போயி என்ற பொழப்புல மண்ணள்ளிப் போட்டுடுவாம் போல இருக்கே” எனப் புலம்பினார். அது அவரது எதிர்பார்ப்பு. அதனைக் குற்றம் என்று யாரும் கூற முடியாது. அவரவர் மனம் போலதான் வாழ்க்கை என்பதனையும் எவராலும் மாற்ற முடியாது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற சீரிய எண்ணத்தை’ வளர்த்துக் கொண்டால் எதையும் தாங்கும் மனவலிமையை இறைசக்தியானது சமயத்தில் தந்து அருள் புரியும் என்பதும் உண்மை. நமது சுவாமி அவர்களின் வாழ்க்கையில் நடை பெற்ற சில சம்பவங்களை ஞாபகம் கொள்வதால், அதனின்றும் சில படிப்பினைகள் நமக்கு உதவிடும் என்பது நன்மை தான். கணித ஆசான் அவர்களும் திரு.APM.சாமி அவர்களும் வெகுநேரம் நமது சுவாமியின் தவமுறை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். தகப்பனார் இதனை ஏற்றுக் கொள்ள வில்லை. அப்போது வாத்தியார் ஒரு வழி முறை யைச் சொல்லித் தந்தார். அது என்னவென்றால், “அப்பா மைனர் சாமி, கொஞ்சம் கவனமாகக் கேட்கவும். உனக்குத் தான் சிலம்பாட்டம் தெரியுமே அதனைக் கற்றுக் கொடு. பாட்டு வாத்தியாரவச்சு உன் மகனுக்கும் பாட்டுப் சொல்லி வை. ஏதாவது மடை மாற்றம் ஏற்பட்டால் உனது மகன் உன் போல் வருவான். இனி ஞானியர்கள் வாக்கை அலட்சியம் செய்வதும் தகாதது. உனது முயற்சியில் நீ முன்னேறிச் செல்ல உனக்குத் தடையில்லை. எதற்கும் எச்சரிக்கை தேவை. “விநாச காலே விபரீத புத்தி ” என்பது போல் நடந்து கொள்ளாதே. உனது மகனை நான் கடுமை யாகத் தாக்கி விட்டேன். அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கி றேன் ” என்று கூறிவிட்டுப் போனார்.

ஆனாலும் மகனை ஒரு முறையேனும் அடிக்கா விட்டால் அவரது மனது ஆறுதல் அடையாது போலும். மேலும் திரு.APM.சாமி பிறந்த பிறகு தான் குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் அழிந்து விட்டதாக அவரது குடும்பப் பெரியவர்கள் அடிக்கடி கூறியது அவர் மனதில் பதிந்து, அவருக்கு ஒருவிதத்தில் விரக்தியை ஏற்படுத்தி விட்டது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற விடாத வைராக்கியத்துடன் செயல்படத் துவங்கினார். மற்றவர்கள் மேல் இயல்பாகத் தோன்றும் கருணை உணர்வு இல்லாமலும் போய் விட்டது. இருந்தாலும் தனது லட்சியப் பாதையில் எந்தவிதத் தடங்கல்கள் வந்தாலும் வென்று முன்னேறினார். நமது சுவாமி அவர்கள் நல்ல நிலையை அடைய இத்தகையை தடைகளும் தேவையாகத்தான் இருந்திருக்கின்றது. ஒரு நாள் சுவாமியின் பெற்றோர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகத்திக் கீரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். சிறுவன் சுவாமி பசியினால் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். பெற்றோர் முக்கியமான காரியம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த நேரம். தயாரின் தோளைப் பிடித்து அசைத்தபடி உணவு கேட்டு தொந்தரை செய்து கொண்டு இருந்தார். அந்த இடையூறினால் கோபம் கொண்ட தந்தை திரு.APM.சாமி அருகில் கிடந்த வாழைத் தண்டைக் கையில் எடுத்து சுவாமியின் தலைமீது அடித்து விட்டார். சுவாமி எந்த உணர்ச்சி யும் காட்டாமல் அப்படியே தரையில் அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்து போனார். இதனைக் கண்டதும் தகப்பனார் எழுந்து சென்று விட்டார். தாயார் மிகுந்த கவலை கொண்டார். குழந்தைக்கு அடிக்கடி இப்படி ஆவதையும், கணவர் கோபப்பட்டுப் பேசுவதை யும் கண்டவர் செய்வதறியாது திகைத்துப் போனார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button