ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•06•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(343) மனிதனே புனிதன் —
ஸ்ரீ தத்தாத்ரேயர் உருவாகுதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ நாராயணன் ஆகிய ஸ்ரீ மஹா விஷ்ணு கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீ ருத்ரன் கூறுகின்றார். “தெய்வீகப் பக்தர்களே! திரு மூர்த்தி மலையில் எங்கள் தவம் பூரணமாகும் போது, திரிமூர்த்தி சக்திகளும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ தத்தாத்ரேயா உருவாக்கப்படு வார். அவர் அத்திரி மலையில் புத்திரபாக்கியம் வேண்டித் தவம் புரிந்து வரும் உங்களுக்குப் புத்திரனாய்ப் பிறந்து வளர்ந்து வருவார். திருமூர்த்தி மலையில் இவரது சாநித்தியம் வெளிப்பட்டு திருமூர்த்தி ஆண்டவர் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு நலமும் வளமும் பெறுவார். உலக மக்களுக்கு அநேக நன்மை களைச் செய்து கொழுமம் என்ற இடத்தில் அதே அமராவதி ஆற்றங்கரையில் ஜீவசமாது அடைந்து பெருவாழ்வில் நிலைப்பார்” எனக் கூறினார். அதன்படியே தத்தாத்ரேயர் அவதாரம் செய்தார். இல்லறம் ஏற்காத துறவியானார். திரு நாராயணபுரத்தில் உள்ள வேத புஷ்கரணி தீர்தத்தில் குளித்து விட்டுப் பெருமாள் சந்நிதியில் துறவறம் பூண்டார் என்று சொல்வார் உண்டு.இவர் வீரமே வடிவெடுத்தவர், கவலைகள் சிறிதும் அற்றவர், பரமாத்ம ஜீவாத்ம ஐக்கிய நிலையில் நின்றவர். தத்தாத்ரேயர் ஒரு அவதூதர் என்பது அவர் கூறியுள்ள தத்துவக் கருத்துக்க ளில் இருந்து தெரிய வருகிறது.
“புலன்களின் பொருள் என்பதே ஒலி, ஒளி ஆகியவையாகும்.
இவற்றால் பஞ்சேந்திரியங்க ளான, கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவை செயற்படும். பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், ஸ்பரிசித்தல் இவைகளால் உடல் ஜீவனுக்கு வாய்க்கின்றது. இதுவே பிறப்பு எனப்படுகிறது. இந்த உடலானது நசிந்து விடுவது இறப்பு. இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. இந்த உலகமும் ஐம்புலன்களின் பொருள் தான். இதற்கு வசப்பட்டு விடுவதே பந்தம் எனப்படுகிறது. இந்த இக்கட்டில் இருந்து விடுபடுவதைத்தான் மோட்சம் என்றும் முக்தி என்றும் கூறுவர். பந்தம் கெடுதல் மிகவும் நல்லது. மோட்சம் கிடைத்தல் மிகமிக நல்லது. இந்த இரண்டிற்கும் காரணமே மனம் தான். மனம் புலன்களால் அறிவு பெற்று எண்ணமிடுவதாகும். மனம் ஐம்பூதக் கலப்பாலும், உலகின் தத்துவத்தாலும் உண்டானதா கும். உலக இயல்பினில் ஜீவனுக்கு உண்டானதுதான் உலகியல் வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் வந்த உடலுக்கும், வடிவத்திற்கும் ஒரு பெயர் உண்டு. இவையனைத்தும், “ஜீவனாகிய நீ இந்த உலகத்தைப் சேர்ந்தவனில்லை” எனக் கூறுவதே ஜீவனின் உண்மை நிலையாகும். “நான் இந்த பிரக்ருதியான உலகத்தைச் சேர்ந்தவனில்லை” என்பதை விடுத்து, “நான் கடவுளைச் சேர்ந்தவன், அவரைச் சரணடை கிறேன்” என்கின்ற எண்ணம் வலுக்கொண்டதும், எல்லாம் நம்மை விட்டுப் போய் விடுகிறது.”
“அப்போது ஜீவனுக்கு உடலில்லை.அதனால் ஜீவனுக்குப் பெயரும், உருவமும் இல்லாமல் போகிறது. இறப்பும் , பிறப்பும் இல்லாமல் போய் வாழ்க்கையும், மனமும் இல்லா தொழிகின்றன. ஆகவே நல்லது, கெட்டது, பந்தம், மோட்சம் கூட இல்லை என்றாகின்றன.பிறகு கண்ணீர் விடவேண்டிய அவசியம் இல்லை. ஜீவன் தன் இயல்பில், ஒளி மயமானவனாக, முழு ஞானத்துடன், புலன் நூகர்ச்சிக்கான உடல் இன்றி, இறைவனின் திருமேனி யாக, உயிராக, இறைவனைக் கொண்டு எப்போதும் இருக்கி றான். இந்தநிலையில் உலகின் தொடர்பால் வரும் எதுவும் அவனைப் பாதிப்பதில்லை.” தத்தாத்ரேயர் ஒரு அவதூதரே என்பது அவர் கூறிய கருத்துக் களில் இருந்தே புலப்படுகிறது. முற்றும் துறந்த ஞானியர்கள் இதனைக் கடைப்பிடித்து துறவு நிலைக்கும் மேல் உள்ள நான்காவது நிலையாகிய அவ தூதர் நிலையை அடைந்து விடுவது திண்ணம்.
பிரம்மச்சரியம், இல்லறம், துறவு என்னும் வானப்பிரஸ்தம், இம்மூன்றுமே உலக மக்களுக்கு வேத நெறி வகுத்த வழிகளாகும்.
அவதூதர்கள் உடல் நினைவு இன்றி , ஆசைகள் துளியுமின்றி, மனமே இல்லாமல், முக்குணங் களை முழுமையாகப் கடந்த நிலையில், கவலைகள் இல்லா மல், ஆச்சாரமின்றி, மதச்சின்னம் ஏதுமின்றி, ஆடைகள் எதுவும் உடுத்திடாமல் திரிந்து கொண்டி ருப்பார்கள். இவர்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கி வசதிகளை யோ, பாதுகாப்பையோ தேடி வாழ நினைக்காதவர்கள். எளிதாக எல்லோராலும் எட்ட முடியாத நிலை என்று கூறுகிறார் ஸ்வாமி.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.