ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
24•12•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(177) மனிதனே புனிதன் —
ஸ்ரீ ஈஸ்வர பட் சமாதுபீடம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.நடராஜா சுவாமி அவர்கள் பழனியில் லைன்மேனாகப் பணியாற்றி வந்தார். பழனி நடராஜா அவர்கள் மென்மையான மனமும், இரக்க குணமும் கொண்டவர். யாருக்கேனும் துன்பங்கள் வந்தால் வலியப்போய் உதவிகள் செய்து வந்தார். எல்லோரிடத்திலும் பணிவு மிகுந்த பண்பாளராக நடந்து கொண்டவர். சிறிய குழந்தைகள் பேச்சுக்கும் மதிப்பளித்துப் பணிவோடு பதில் கூறுபவர். எப்போதும் புன்னகை புரியும் முகம். நமது நாகராஜன் சுவாமியும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இருவரும் எப்போது சந்தித்துக் கொண்டாலும் தங்களுடைய குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமிகள் பற்றித்தான் பேசிக் கொண்டும், அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டும் இருப்பார்கள்.
பரீட்சை எழுதாமல் மாணவன் தேர்ச்சி பெறமுடியாது! அதைப்போலவே அநேக சோதனைகளை தவத்திரு. நடராஜா சுவாமிகள் அடைந்து, தாங்கவொண்ணா வேதனைகளப் பெற்றவர். துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து, இனிமேல் உயிர்வாழவே கூடாது என்று கடுமையான நஞ்சை, கொடும் விஷத்தை சாப்பிட்டவர். மரணத்தருவாயில் அவரது உடலில் இருந்த விஷத்தை நீக்கி, சென்று விட்ட உயிரை மீண்டும் தவத்திரு. நடராஜா சுவாமியின் உடலில் மீட்டுத் தந்தவர் சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி என்ற கண்கண்ட தெய்வம் தான். உயிர் பெற்று மீண்டெழுந்த தவத்திரு. நடராஜா சுவாமி அவர்கள் முன்னைக் காட்டிலும், பலமும், ஆரோக்யத்தையும் சற்குருவால் அடைந்தவர். பற்பல சோதனைகளைச் செய்து அனுகிரகித்து நல்வழிகள் பற்பல காட்டித் திரு.நடராஜா சுவாமியை ஆட்கொண்டார் ஸ்ரீ ஈஸ்வர பட் குருநாதர்.
அவர்தான் தனது வாழ்வு என்று வாழ்ந்தவர் திரு.நடராஜா சுவாமி. 31•12•1993 – ல் சித்தரின் சித்துக்கள் என்னும் நூலில், “பின்னாளில் வந்த சித்தர்களில் ஒருவராக நமது ஈஸ்வரபட் சுவாமி இருக்கலாம் என எண்ண முடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றும், “யாவருக்கும் யாவற்றையும் நல்குபவர் நமது ஈஸ்வரபட் சற்குருநாதர் தாம்” என்றும், ” வைத்தியம், இரசவாதம், அறிந்தவர்; பிறருக்கு வாழ்வு வளம் தருபவர், வியாபார விருத்தியை ஏற்படுத்துபவர், தீராத நோய் தீர்ப்பவர், மனத்துயரத்தை நீக்குபவர், தோன்றாமல் தோன்றி உதவிகள் பல புரிபவர், நினைத்தவர்கள் நினைத்த வண்ணம் உதவிகள் பெற்று, இவரை மறக்காமல் வாழ்த்திக் கொண்டிருப்போர் ஏராளம்: பிறர் அவரிடம் பெற்ற அனுபவங்களைப் கேட்டு மனம் புல்லரிக்கின்றது. அந்த தெய்வத்தை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது ” எனக் குறிப்பிடுகின்றார்.
ஆனால் சற்குருநாதர் அவர்கள் நமது நாகராஜ் சுவாமியிடம் தன்னைப் பற்றி, “உலகின் முதல் ஆதி சித்தன் நான்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.