ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
01•01•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(185) மனிதனே புனிதன் —
வேதாந்த ரஹஸ்யம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடப்பை பரமஹம்ஸ ஸ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் என்கிற மகான் ஒருவர் “ஜீவப் பிரம்மைக்கய வேதாந்த ரஹஸ்யம்” என்ற தலைப்பைக் கொண்டு ஓர் அரிய பொக்கிஷமான நூல் ஒன்றினைப் படைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையில் தவத்தினால் பெற்ற அனுபவத்தினைக் கொண்டு, ஆன்மிக உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார். பரம்பொருள ஒவ்வொரு ஆத்மாவிலும் உறைகிறான் என்ற உண்மையை, எப்போது மனிதன் அறிகின்றானோ, அந்தக்கணமே, பிறப்பு, இறப்பு என்கிற பந்தங்களிலிருந்து விடுபட்டு, “விடுதலை” என்கின்ற “வீடு பேறை” அடைகிறான் என்றார்.
கடப்பை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஆன்மிகத்தில் நிறைவு பெற்றவராக வாழ்ந்து கொண்டு, ஏழை, எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பேருதவிகள் செய்து வந்துள்ளார். மோட்சம் எனப்படும் பேரின்ப நிலைகளைக் கல்வி கற்ற அறிவாளிகள் மட்டுமல்லாது, சாதாரண அறிவு பெற்ற சாமானிய மக்களும் மோட்சம் அடைவதற்கான வழி வகைகளை, ஸ்ரீ பரமஹம்ஸ் சச்சிதானந்த யோகீஸ்வரர் மிகவும் எளிமையாக வழிகாட்டுகிறார். “ஸ்தூலமாயுள்ள தத்துவங்களை யெல்லாம் முன்னதாய்ச் சொல்லி, அதன்பிறகு அணுவிலும் அணுவாயிருக்கும் பரப்பிரம்மத்தைக் குறித்து பின் சொல்லப் போவது, ஆசார்யப் பிரசாதம் போன்றதாயிருந்து, சூக்ஷும சொரூபமாயிருக்கும் பரப்பிரம்மத்தையே உபதேசிக்கிறது” என்று கூறுகிறார்.
இவரது வேதாந்த ரகசியம் பற்றிய பல உண்மைகளையும் கற்றறிந்து அதனை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கம் சொல்லக் கூடிய தகுதி சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. ஆனால் ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் அநேக தெய்வீக ரகசியங்களைப் பாமர மக்கள், எத்தனை முறைகள் சந்தேக வினாக்கள் தொடுத்தாலும், அத்தனை முறைகள் மிகுந்த பொறுமையுடன், குழந்தைகளுக்கும் புரியும் படியாகப் போதித்து வந்தார். அதனால் அவரைச் சுற்றிலும் எப்போதும் ஞானதாகம் உடையவர்கள் கூட்டம் கூட்டமாகத் தேடி வந்து அருள் உபதேசம் பெற்றுச் சென்றனர்
பொள்ளாச்சி கடைவீதி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வீதியில் இருக்கும், தலைவர் திரு.ராமசாமி அண்ணார் வீட்டில் நடந்த தியானக் கூட்டத்திலும் சரி, அன்று மாலை தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திலும் சரி, நமது சுவாமி நாகராஜன் அவர்களை ஞானகுரு கண்டு கொள்ளவே இல்லை. ஆனாலும் அடிக்கடி கவனித்துக் கொண்டுமிருந்தார். அவர் ஓய்வாக மாடிக்குச் சென்றாலும் அங்கேயும் கூட்டம் பின் தொடர்ந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.