ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•12•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(159) மனிதனே புனிதன் —
வெற்றியும்! தோல்வியும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேச்சியம்மனின் அருள் வாக்கில் வந்தபடியே தீமை செயல் புரியும் மாந்திரீகன், கூடுதுறைக் காளியம்மனை முதலில் கோயிலை விட்டு வெளியேற்ற கெடுதலான காரியங்களில் இறங்கினான். பெண்களின் மாதாந்திர விலக்குத் தீட்டுத் துணிகளைக் கோயிலின் வெளியே, படிக்கட்டுகள் செல்லும் பகுதிகளில் புதைத்து வைத்தான். காளியம்மன் கோயில விட்டு வெளியேறிச் சென்று அருகில் உள்ள நீரேற்று நிலையத்தின் அருகில் தங்கி இருந்ததாகவும், ஸ்ரீ எந்திரத்தை விட்டு விலகியதும் காளியை அவன் சுலபமாக அவனது உபாசனா ஜெபத்தில் அகப்படச் செய்தான்.
அவள் அவனது மாந்திரீக வசத்தில் நெருங்கி வந்து விட்டாள் என்றும், பிறகு சுலபத்தில் அவளது சக்தியைப் தனது உள்ளங்கையில் அகப்படுத்தி, நடந்து மேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்” என்று கூறிவிட்டு, மாந்திரீகன் காளி கோயிலில் புதைத்து வைத்திருந்த அவன் பொருட்களை எடுத்து வெளியில் வீசி எறிந்தார் பேச்சியம்மாள். இதனை அநேகர் நேரிடையாகப் பார்த்தனர்.
பேச்சியம்மனின் வாக்கின்படி கேரளா எல்லைப் பகுதியில், ஒரு விவசாய பூமியின் வழியே காளியம்மனை, மாந்திரீகன் கொண்டு செல்லும் போது ராஜநாகம் அவனைத் துரத்திச் தீண்டியது. கைகளை விரித்தபடி தீயவன் மல்லாந்து மாண்டு விழுந்து விடக் காளி அம்மன் விடுதலை பெற்றாள். பிறகு தூய்மை இழந்துவிட்ட கூடுதுறைக் காளியம்மன் கோயிலானது எல்லாம் மகிமையும் இழந்தது. இப்போது அங்கே யாரும் செல்வதுமில்லை.
தனது சற்குருநாதர் காளியின் ஆசியைப் பெற வழி கூறுகிறேன் என்றதும் சரி என்று கூறினார். சற்குருநாதர் கேரளவனப் பகுதிக்குள் புறப்பட்டுப் போனார். அவர் எங்கே செல்கிறார்? எதற்காகச் செல்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. அவரது வரவைநாடி அநேக ஞானியர்கள் காத்திருப்பார்கள் என்பது நமது சுவாமிக்கு நன்கு தெரியும். அவர் மக்களுக்குச் செய்த உதவிகள் போன்று ஏதாவதுஉதாரணம் சொல்வதென்றால், அவருக்கு ஈடு அவர்தான்.
ஒரு முறை அவரது பிரதம சீடர், பழநி தவத்திரு. நடராஜா சுவாமிகளைத் திருமூர்த்தி மலை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். பற்பல சித்தர்கள் பற்றிய செய்திகளை அவருக்கு உபதேசம் செய்து இருக்கின்றார். அங்கு கோயிலுக்கு வந்த மக்கள் சற்குரு நாதரின் முக விலாசத்தால் கவரப்பட்டு, காணிக்கைகளை அள்ளித் தந்து இருக்கின்றார்கள். அவைகளை எல்லாம் திருமுர்த்தி மலை அணைக்குள் வீசி எறிந்தவர் குருநாதர். பழநி பிரதமசீடர் தவத்திரு.நடராஜா சுவாமி அவர்கள் முன்பாக, அநேக நோயாளிகளைத் தொட்டுக் குணப்படுத்தி வாழவைத்து இருக்கின்றார். அவரைப்பார்த்து விட்டு அந்த நொடிநேரத்தில் குணம் பெற்றவர்கள், அள்ளிக்குவித்த செல்வங்களை நீரினுள் போட்டவர் சற்குருநாதர். தெய்வங்களால் “தந்தையே” என்றும் அழைக்கப்பட்டவர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.