வீட்டில் கலசம் அமைத்தல் உண்மைகள்.

0 227

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•07•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(24) மனிதனே புனிதன் — வீட்டில் கலசம் அமைத்தல்
உண்மைகள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயில் கோபுரங்களில் கலசங்கள் அமைப்பது விண்ணில் இருந்து வரும் உயர் மின் நுண்காந்த சக்தி அலைகளை ஈர்த்து எடுத்து, கர்பகிரகத்தினுள் உள்ள எந்திரத் தகடுகளில் உள்ள வரிவடிவங்களில் பக்குவப் படுத்தப்பட்டு, மனிதனின் தெய்வீக எண்ணத்திற்கு (நேர்மறை எண்ணம்) கிடைத்து, வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, நமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட ஓர் உன்னத அறிவின் இயந்திர சாதனம்.

அதனை எப்படி உபயோகிப்பது என்பது பற்றிய அனேக விளக்கங்களும் நமக்குச் சுவாமிகளைப் போன்ற ஆன்றோர் பெருமக்களால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.அதனைக் கடைப்பிடித்தும் வருகிறோம்.

வீடுகளில் கலசம் அமைத்து அதே சக்தி அலைகள் கிடைக்கும் படி செய்து கொள்ளவும் முடியும். அதற்கு நம்பிக்கையும், மனதில் தெளிவும் அவசியம் வேண்டும். காரணம் அதில் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.

வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பும் கிடைக்கும். மற்றொன்று நமது குலத்தின் தெய்வம் வீட்டினில் இருந்தால், தங்குவதற்குச் சக்தி வாய்ந்த இடமாகக் கலசம் அமையும்.

சிலர் வீட்டின் நிலை வாசல்படியை மிதிப்பதை ஒரு வழக்கமான பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்த வீடுகளில் குலதெய்வம் குடியிருக்கும் நிலை இல்லாதிருக்கும்.

கலசம் வீடுகளில் அமைத்தால் நிம்மதி, சந்தோஷம், வருமானம் தங்குதல் மற்றும் நியாயமான சிலவினங்கள் மட்டுமே உண்டாகும். அரிசியோ மற்ற தானியங்களின் மீது கலசம் அமைப்பதில் தனித்தனியான பலன்கள் உண்டு.

சுவாமி அவர்கள் பற்பல பலன்களைத் தரும் கலசமுறைகள் கூறியுள்ளார். நமக்கு எத்தனையோ தேவைகள் உள்ளன. அது நிறைவேற்றிட வருமானம் அவசியம். அதனைப்பற்றிக் கூறுகிறேன். சுவாமி அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமிரம் அல்லது பித்தளை சிறிய குடம்.வாய்ப்பகுதி குறுகிய மாதிரி இருத்தல் நல்லது. இது மனித உடலைக் குறிக்கும். மஞ்சள் தடவிய நூல் கலசம் முழுவதும் இடம் வலமாக பின்னல் போல் சுற்றிலும் வரவேண்டும். மனித உடலின் நரம்பு மண்டலத்தைக் குறிக்கும்.

அதனுள் ஊற்றும் நீர் தூய கிணற்று நீராகவோ அல்லது மழை பெய்யும் பொழுது கண்ணாடி ஜாடிகளில் சேகரித்த நீரும் ஊற்றலாம்.உடலிலும் இருக்கும் நீர் சக்தியைக் குறிக்கும். கலசத்தில் தங்கம் அல்லது வெள்ளி உலோகம் இடலாம். அரசு முத்திரை இட்ட ஏதோ ஒரு நாணயம் போடலாம்.
ஆறு மாவிலை உடைய கொத்து ஒன்றைக் கலசத்தில் மீது வைக்கவும். நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிப்பிடும்.

நன்கு முதிர்ந்த தேங்காய் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.புதிய வெள்ளை நிறத் துணியில் ஏலம், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் முதலியன வைத்து, தேங்காயையும் வைத்து நன்றாக கட்டவும். அதை மாவிலை மீது வைக்க வேண்டும். இது மனிதனை ஆளும் வாசனைகளைக் குறிப்பிடும். கலசத்தின் மீது மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்திய புது வஸ்திரம் சுற்றவும்.சரீரத்தைக் காக்கும் மானாபிமானமாகும்.

ஒரு உலோகத் தட்டில் அரிசி வைக்க வேண்டும். அரிசி மனிதன் எண்ணத்தைக் குறிக்கும். மஞ்சள் பொடியினால் அரிசி மீது ஓம் என்று எழுதவும். ரூபாய் நாணயங்களை அரிசி மீது போட்டு அதன் மீது கலசத்தை அமைத்துக் கொள்ளவும். இரட்டை தீபங்கள் ஏற்றி வைத்து, அம்மா, அப்பா, குலதெய்வம், சற்குரு, இஷ்ட தேவதைகள் இவர்களின் துணை யும், ஆசியும் வேண்டி இறைசக்தியைப் பிரார்த்தனை செய்து வர வேண்டியது.

கலசம் அதிக சக்தி பெறவேண்டும் என்றால், காலையில் சூரியனைப் பார்த்து தாய் தந்தையை எண்ணி உலக அறிவு என்னுள் வளர்ச்சி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த உடனேயே வீட்டினுள் சென்று கலசத்தைப் பார்த்தால், கலசம் சூரிய சக்தியை நம்மிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனக்குள் கலச மையத்தினுள் சேமித்து வைக்கும்.

தினமும் செய்து வர கலசம் சக்தி பெற்று, வீடு முழுவதும் அதைப் பரவச் செய்து நமக்குப் பிரபஞ்ச சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

உணவுகளை கலசத்தின் முன்பு வைக்க உணவு தூய்மையும் சக்தியையும் பெறும். முன்னோர்கள் தோஷம் அகல நன்மையை வீட்டில் உண்டு பண்ணும். கையில் பணத்தை வைத்து கலசத்தின் முன்பு அமர்ந்து தியானிக்க பணவரவு ஏற்பட வழிபிறக்கும். இதற்கு தரும சிந்தனை வேண்டும்.

சுவாமியின் வரலாறு படிக்கும் போது இந்த மாதிரியான பாடங்களை நாம் தெரிந்து கொள்வதும் அவசியம் தான். நமக்கு தேவையில்லை என்றாலும்கூட பிறருக்கும் சொல்லி பயனடையச் செய்வதும் தருமம் அல்லவா?

மனித எண்ணச் செயல் பற்றியும், அதை ஞானம் பெற எந்த வகையில் உபயோகிப்பது என்று எனது மகன் அருணேஸ்வரராய் அவர்கள் சுவாமியிடம் கேட்டார். அதற்கு அற்புதமான விளக்கத்தைத் தந்தார். இனி சுவாமி அவர்களின் வரலாறு கொஞ்சம் படித்து விட்டு ஒலி ஒளித் தன்மையின் ஞான விளக்கத்தைப் படிப்போம்.

நன்றி! வணக்கம்!

– ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button