வாழ்வே நிதர்சனம்.

246

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
02•09•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(55) மனிதனே புனிதன் —
வாழ்வே நிதர்சனம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்களின் திருமணம் சோமனூரில் பெண் வீட்டாரின் அருகில் இருந்த மீனாம்பிகா என்ற சினிமா தியேட்டரில் நடைபெற்றது. திருமண காரியங்கள் அனைத்தையும் திரு.வெள்ளிங்கிரி ஐயா அவர்களின் மூத்த மருமகன் எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகக் பொறுப்பு ஏற்றுக் கொண்டு முடிந்தவரை அவரது பங்கை நல்ல முறையில் நிறைவேற்றி இருந்தார். சுவாமி வீட்டாரிடம் பற்றுக் கொண்ட கிராம மக்கள் தனிப் பேருந்து ஏற்பாடு செய்து கொண்டு சுவாமியின் அபிமான நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். “சுவாமி யார்? கல்யாணம் பண்ணிக்கப் போனாரு! குடும்பஸ்தன் ஆனாரு!”என்று திண்டுக்கல் ஜியாவுத்தீன் பேருந்தில் கலகலப்பாக பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தார். பொள்ளாச்சி ஐயப்பபக்தர் பத்மநாபன் குருசாமி மற்றும் எல்லா பக்தர்களும் மனம் உவந்து சந்தோஷமாக வந்திருந்தனர். சோமனூர் மீனாம்பாள் தியேட்டர் வாசலில் பேருந்து நின்றது. திருமண ஏற்பாட்டை கவனித்து வந்தவர்கள் யாரும் அங்கே இல்லை.

பெண்வீட்டிற்குச் சென்று மூத்த மருமகப் பிள்ளையிடம் சென்று தங்குமிடம் கேட்டனர். “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நீங்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். எல்லோருக்கும் அதிர்ச்சி! சுவாமியின் இன்னொரு நண்பர் கேரளா திரு.கண்ணன் நாயர் அவர்களின் புதல்வன் திரு. சுப்பிரமணியன் மற்றும் திரு.ஜியாவுதீன் இருவரும் ஊரில் விசாரித்து “காளியம்மன் கோயில் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சுவாமியை அங்கு குளிக்க அழைத்துப் போகலாம்” என அழைத்துப் போனார்கள். அருகில் உள்ள வீட்டில் இருந்து வாளி சொம்பு எல்லாம் தந்து உதவினர்.

நட்டநடு வீதியில் ஊர் மக்கள் முன்னிலையில் நமது சுவாமி மகிழ்வுடன் ஸ்நானாதி பானங்கள் சிறப்புடன் செய்து கொண்டார். நடுவீதியில் உடுப்பு மாற்றிக் கொண்டார். சுவாமியின் சகோதரி கணவர் திரு.தண்டபாணி அவர்கள் மாலை மரியாதை செய்விக்க, எவ்வித ஆடம்பரமின்றி மேளதாளமின்றி சுவாமி அவர்கள் ஜெபம் சொல்லியபடி, தனது குருநாதனைக் கண்கள் தேடியபடி இருக்க அமைதியாக நடந்து போனார்.

நாமாக இருந்தால் இப்படிச் செய்வோமா என்ற வினா எனது மனதில் உதயமானது. பக்குவப்பட்டு விட்ட மனது எதனையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் என்பதை அன்று தான் எல்லோரும் கண்டார்கள். ஜாதி மத வேற்றுமைகள் எதனையும் கருதாதவர் நமது சுவாமி மட்டுமல்ல, ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உடனிருந்த அவரின் நண்பர்கள் அனைவருமே சுவாமியின் நற்குணத்தைக் கொண்டிருந்தனர். இது இறைவனின் வரமாகத்தான் கருத வேண்டும்.

சுவாமிக்குப் பெண் கொடுப்பதை பெண் வீட்டாரின் மிக நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு இஷ்டமில்லை. அதனால் அவர்கள் சற்று கடுமையாக நடந்து கொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். இருப்பினும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு சுவாமிக்கேதான் பெண்ணைக் கொடுப்போம் என்பதற்கான சம்பவம் ஒன்று நிச்சயதார்த்தம் நடை பெற்ற பிறகு நடந்தது. மணப்பெண்ணின் சகோதரன் S.V.பிரகாஷ் என்றழைக்கப்படும் ஞானப்பிரகாஷ் திடீரென வயிற்று நோவு கண்டு துடித்த போது கோவை K G மருத்துவ மனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு படுத்து இருந்தார். இதனைக் கேள்விப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆறுதல் தேறுதல் சொல்லி நலம் விசாரித்து வந்தனர். இது பெண்ணைப் பெற்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்தது. இவர்கள் நம்மைக் கடைசி வரையிலும் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தினால் சுவாமிக்குப் பெண் தருவதில் ஆர்வம் காட்டினர். ஆனால் சொந்த பந்தங்கள்,” பெண் பார்க்க வந்த நேரம் சரியில்லை. இந்தப் பையனுக்குப் பெண்ணைத் தர வேண்டாம். வந்த உடனே உன் மகன் ஆஸ்பத்திரி போனான். வெட்டிச் செலவு வேறு. பையன் பட்டிக்காட்டானைப் போல் இருக்கிறான். இந்த சம்பந்தம் வேண்டாமே” என்று பவ்யமாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். பெண்ணைப் பெற்றவர்களைத் தவிர சொந்த பந்தங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் அவமரியாதையை காட்டித் தங்களின் உள்ளத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். உபசரிப்பது, உணவு பரிமாறுவது என்று எல்லா வகையிலும் தங்களின் குணத்தைக் காட்டிப் படித்த மேதாவிகள் என்று தங்களைப் பரைசாற்றிக் கொண்டிருந்தனர். சுவாமிகளின் கிராம மக்கள் இதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

ஓதுவார் தமிழ்த் திருமறைகள் ஓதினர். ஒரு நீண்டபெரிய இருக்கையில் மாப்பிள்ளை பெண்ணையும் அமர வைத்து உள்ளூர் பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆசியருள மாங்கல்ய தாரணம் செய்வித்தனர். தவத்திரு நாகராஜன் சுவாமி அவர்கள் தவத்திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்கு மங்கல நாண்சூட்டித் திலகமிட்டு, மாலை மாற்றிக் கொண்டு தம்பதிகள் ஆனார்கள். தெய்வீக ஆசி யும் பெற்றனர்.

– ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button