வாழைத் தோட்டத்து ஐயன்

188

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•05•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(327) மனிதனே புனிதன் —
வாழைத் தோட்டத்து ஐயன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதன் மகானாக முடியும் என்று வாழ்ந்து காட்டித் தெய்வீக நிலையை அடைந்தவர் தான் “ஐயன்” என்று பக்தர்களால் பக்தியுணர்வுடன் அழைக்கப்ப டும் திரு.சின்னையன் அவர்கள். இவருக்கு உடன் பிறந்த மூத்தோர் எட்டுப்பேர் பெண்கள். இவர் குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாக வந்த அருளாளர் ஆவார். ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 18 – ந்தேதி, வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சம், ஏகாதசி திதியன்று விசாகம் நட்சத்திரத்தில் ஆங்கில வருடம் 1799 – ல் உதித்தவர். இயற்கையிலேயே அறிவு நிரம்பப் பெற்றவர். தெய்வீக குணங்களுக்குச் சொந்தக்காரர். பள்ளிக்கூடம் சென்றாலும் இறையருளால் கல்லாஞானம் கைவரப் பெற்று சகல கலைகளிலும் விற்பன்னராய்த் திகழ்ந்தவர். தனது 12 -வது வயதில் பயிர்த் தொழிலுடன் பசுக்களைப் பரிபாலனம் செய்வதில் வல்லவரானார். சிறு வயது முதற் கொண்டே இயல்பில் சிவனது பக்தராய்த் திகழ்ந்தவர். மாடுகளை மேயும் இடத்தில் சுயம்பு லிங்கம் இருப்பது கண்டு, கற்களினால் ஒரு மேடையை அமைத்து, அதில் சிவமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, ஓடை நீர் கொண்டு வந்து நீராட்டி, பசும் பாலால் அபிஷேகம் செய்வித்து, மலர்களால் அர்ச்சித்து, காய், கனி கொண்டு நைவேத்தியம் செய்வித்து, ஆடுவதும், பாடுவதும், இயற்கையைக் கண்டு வணங்கி வழிபடுவதும் என பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து இருந்தார். நாளுக்கு நாள் இறைவன் மீது மாறாத பக்தி ஊற்றுப் பெருகி தன்னை மறந்து ஆனந்தம் பரவசத்தில் ஆழ்ந்து விடுவது வழக்கமாக இருந்தது. சிவகுரு தன்னை ஆட்கொண்டு மந்திர உபதேசம் பொருள் வழங்கும் நாள் எந்நாளோ என்று தவமிருந்து வந்தார்.

இறைவனது சிந்தனை ஏக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தூங்காமல் தூங்கும் தவத்தில் மூழ்கி இருந்த பொழுது தனது குரு நாதனின் காட்சி கிடைகப் பெற்று அம்மகா சக்தி ஞானத்தை உபதேசித்து விட்டு மறைந்தது. அவரை நேரில் காண ஆவலுற்று தான் வழக்கமாகச் செய்து வரும் சிவ பூஜையின் பரமானந்தத்தில் நிஷ்டை கை வரப் பெற்றார். நிஷ்ட்டையில் இருந்து கண் விழித்த போது, சுயம்பு மூர்த்தி அமைந்துள்ள மேடையின் மீது தனக்கு ஓர் நாள இரவில் காட்சி தந்த சற்குருநாதர் அமர்ந்து ஆசி வழங்கிக் கொண்டு இருப்பதை நேரில் கண்டு பரவசத்துடன் பாதம் பணிந்து எழுந்து வணங்கி நின்றார். அப்போது கொடிய விஷமுடைய ராஜநாகம் ஒன்று அங்கே தோன்றி வேகமாக நகர்ந்து சென்றது. அப்போது குருநாதர், ” சின்னையா என் மீது ஆணை வைத்து ராஜ நாகத்தை அசையாமல் நிறுத்து” என ஆணையிட்டார். திரு.சின்னையனும் நமசிவாய மந்திரத்தை மனதில் எண்ணி, “சிவ பெருமானாகிய எனது குருவின் மீது ஆணை. நாகய்யனே அசையாது நில்” என்று கூறியதும் அவரது வாக்கு க்கும் கட்டுப்பட்டு ஆடாமல், அசையாமல் அங்கேயே நின்று விட்டது. சற்குருநாதரின் பாதத்தில் அமர்ந்து வணங்கி அவரது முகவிலாசத்தில் பெரு நிலையை அடைந்து மகிழ்ந்தார். சற்குருநாதர திரு.சின்னய்ய னிடம், “சின்னய்யா நாகத்தின் கட்டை அவிழ்த்து சென்று விடச் சொல்” என்றார். அப்படியே பஞ்சாட்சரம் மந்திரம் ஓதி நாகத்தை சென்று விடச் சொல்ல அதுவும் வணங்கிச் சென்றது. தனது குருவின் பாதம் பணிந்த திரு.சின்னய்யன், “ஆதிசிவமாகி வந்த சற்குரு நாதனே, இங்கு விஷ ஜந்துக்களி னால் அநேக துன்பங்கள் மக்களுக்கு நேருகின்றன. உலக மக்களைக் கொடிய விஷம் உடைய ஜீவன்களிடம் இருந்து காப்பாற்ற வழிவகைகள் அருள வேண்டும் ஐயனே” என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். உலகில் இறைபக்தி செழித்திட தனது சீடனாக சின்னய்யனை ஏற்றுக் கொண்டார். இல்லறத்தில் இருந்து கொண்டுதான் உலக மக்களுக்கு சேவை செய்திட வேண்டும் எனத் திரு.சின்னய்ய னைப் பணித்து விட்டு, “ஸர்வ விஷ சம்ஹார மந்திரம்” அதனைக் காதில் ஓதி, ” உடனே அது சித்திக்கும்” என ஆசி அருளினார்.

திரு.சின்னய்யன் தனக்கு தெய்வீக வழித்துணையாக வந்த ஆதிசித்தனை, ஸ்ரீ ஈஸ்வரரை தனது சற்குருவாக ஏற்றுக் கொண்டு, “நமது இல்லத்தில் எழுந்தருளி, அமுது உண்டு ரக்ஷிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார். அந்த ஆதிசித்தர் சற்குரு ஸ்ரீ ஈஸ்வர னும் மனமுவந்து, திரு.சின்னய் யன் இல்லத்திற்கு எழுந்தருளி னார். தனியறையில் சற்குரு நாதரை அமரவைத்து உபசரனை கள் செய்வித்த சின்னய்யன், அவரது உத்தரவு பெற்று உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகளை நிறைவாகச் செய்து முடித்தார். சற்குருநாதரை அழைப்பதற்குச் சென்ற திரு.சித்தய்யன் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயம் உற்றார். அறைக்குள் இருந்து வேத மந்திரங்களின் ஒலியும், சங்குநாதமும், அநேக வாத்தியங்களின் இன்னிசையும், பஞ்சாட்சர வாழ்த்துக்களும் கேட்கவே, ஆவல் மிகுந்து கதவு துவாரத்தின் வழியே தமது விழிகளைப் பொருத்திப் பார்த்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button