ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•07•2016,
சனிக்கிழமை!
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(20)
மனிதனே புனிதன் —
வழியை மறிக்கும் அமானுஷ்யம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆட்களைக் கூலி வேலை செய்ய அழைத்துப் போகும் நபரைக் கொத்துக்காரர் என அழைப்பது கிராம வழக்கம். மாலையில் வயல் வேலை செய்து விட்டு வந்தவர்கள் வாரம் ஒரு நாள் கூலிப்பணம் பங்கிடுவார்கள்.
சுவாமியின் தகப்பனார் ஹோட்டல் முன்பு அல்லது பிள்ளையார் கோயில் அரசமரத்தடியில் பங்கீடுசெய்து கொத்துக்காரர் தருவார்.
பங்கீடு முடிந்த பிறகு வயல் வெளிகளுக்கு சாப்பாடு கொண்டு செல்லும் போது அதை வழிப்பறி செய்து கொள்ளும் ஓர் அமானுஷ்யத்தைப் பற்றி கதை கதையாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
சுவாமி அவர்கள் பசிக்கு உணவு வேண்டி வேலை செய்ய விரும்பாத போக்கிரியின் வேலை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? என்ற கேள்வியைக் கூறினார்.
அந்த ஏதோ ஒன்றிடமிருந்து தப்பி பயந்து வந்தவர்கள் கோபத்தை சுவாமியிடம் காட்டினர்.சுவாமி மட்டும் அங்கு சென்று வந்தால் ஒரு பக்கத்து மீசையை எடுத்து விடுகிறேன் என்ற படி மனம் போன போக்குக்கு சவடால் பேசினார்கள்.
வருகிற அமாவாசை அன்று காட்டுப் பாதையில் உள்ள ஒத்தை மரம் இருக்கும் இடத்தில் பொழுது விடியும் வரையில் அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்றனர்.
அப்படியே சுவாமி சென்ற பொழுது பின்னால் வந்து கூச்சலிட்டு பயங்காட்டினர். விடியும் வரை அதே மரத்தின் கீழே அமர்ந்து தியானத்தில் இருந்தார்.
ஏகாந்தத்தில் அமரத் தனக்குச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிய உள்ளுர் மக்களுக்கும், ஏன்? கண் காணாத அந்த அமானுஷ்யத்திற்கும் நன்றியறிதலைக் கூறினார்கள்.
எறும்புகளைச் சாப்பிடும் அலங்கு என்ற பிராணி அங்கு சுற்றித் திரிந்து விட்டு சுவாமி அருகே வந்து முகர்ந்து பார்த்து விட்டு அதுவும் அங்கேயே அமர்ந்து விட்டது.
இதனைக் கண்டுதானா பயந்து போய் அத்தனை அமர்க்களம்!
அதிகாலையில் வந்து பார்த்து உண்மை தெரிந்த பிறகு அனைவரும் சமாதானம் அடைந்தனர்.
உண்மையில் அமானுஷ்யங்கள் இவர்களைப் போன்று பயப்பட மாட்டார்கள்!
அதிகப்படியான மிரட்டும் தொனியைக் கேட்டால் விலகிச் செல்வார்கள்.
தியானம் செய்பவர்களிடம் நெருங்காமல் கவனிப்பார்கள்.
பாதுகாப்பாக தியானம் செய்யும் முறையை சுவாமி எனக்குச் சொல்லி இருந்தார்கள். சக்தி அடைந்திருந்ததைக் கண்டு கொண்டால் அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் சந்தோஷமாகச் சொல்லித் தருவார்கள்.
தவறுகளைத் திருத்தி தியானம் செய்யும் படி ஊக்கம் தந்தவர். லட்சியங்களை அடைய சிறிது அன்புமனம் கொண்டு கண்டிப்பதும் வழக்கம். அதுவும் சிரித்தபடியே தான்.
சுவாமியின் தகப்பனார் வயல் அறுவடை சமயம் கதிர் அடிக்கும் இயந்திர மொன்றை வாடகைக்கு அமர்த்தினார். நமது சுவாமி இது வேண்டாம் வேறு இயந்திரம் கொண்டு வாருங்கள் என்றார்.
தகப்பனாரின் ஏன்? என்ற வினாவிற்கு நமக்கு இது துன்பத்தையும் வீண் சிலவுகளை யும் கொடுக்க வந்துள்ளது என்று கூறினார். எல்லோரும் சுவாமியை வீட்டிற்குச் சென்று விடுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
சுவாமியும் எல்லாம் நல்லதற்காகவே நடை பெறுகிறது. இவர்கள் வாழ வழி அருளுங்கள் என்று பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது. இயந்திரத்தை இயக்கியதைக் கண்டு பேசாமல் திரும்பி வீடு போனார்.
அந்த இயந்திரத்தை இயக்கிய அதன் உரிமையாளரின் வலது கரம் முழங்கையின் மேல் பகுதிவரை இழந்து போனது. உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
சுவாமியின் தகப்பனார் அவருக்கு எல்லா உதவிகளும் செய்து வந்தார்கள். குணம் பெற்று வந்தவர் பார்க்க விரும்பியது சுவாமி அவர்களைத்தான.
தந்தைக்கோ அதிர்ச்சி! சுவாமியைப் பார்த்தபடி பேசாமல் அமைதியாக இருந்தார். பிறகு இவன் வாயை வைத்துக் கொண்டு பேசாமல் இருந்திருந்தால் தனக்கு இத்தனை செலவுகள் வந்திருக்குமா? என்று கேட்டார்.
உண்மையை அவருக்கு உணர்த்தும் காலமும் வந்தது!
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.