வருமானத்திற்கு வழி?

231

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•10•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(96) மனிதனே புனிதன் —
வருமானத்திற்கு வழி ?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குழந்தை கோகுலகிருஷ்ணா கிராம வீட்டிற்கு வந்து விட்டார். மீனாம்பாள் நாச்சியார் மற்றும் பொன்னம்மாள் பாட்டி அவர்களின் ஆதரவில் நன்றாக இருந்தார். சாமியின் வீட்டினர் மட்டும் ஏதாவது குறைகள் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். மூத்த சகோதரியின் பிரசவம் காந்தி மண்டபத்திற்கு அருகே உள்ள மருத்துவ மனையில் நடந்தது. குழந்தை இறந்தே பிறந்தது. குடும்பமே துக்கத்தில் மூழ்கிக் கிடந்தது.

மூத்த மாப்பிள்ளையின் சோகம் அளவிட முடியாததாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு அவர்கள் குடும்பத்தில் பெண்குழந்தை பிறந்தது. இரண்டாவதாக ஆண் ஆண்குழந்தை பிறந்தது. சுவாமிமீது பற்றுடைய பிள்ளையாக வளர்த்தார். இவர் மிகவும் முக்கியமானவர்.எதிர் காலத்தில் குடும்பத்திற்கு தீராத சோகத்தைத் தந்து விட்டு, அமானுஷ்ய சக்தியாக மாறிவிடக் கூடியவர். இந்தக் குழந்தைகள் பிறந்த சமயங்களில் மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் காய்ச்சல், சளி, மூச்சடைப்பு ஏற்பட்டுக் கவனித்துக் கொள்ள யாருமற்ற நிலையிலும் ஜெபத்துடனேயே வாழ்ந்து வரலானார்.

அவரது குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவரைத் தருவித்தால் உதவிகள் கிடைக்கும் என்கிற நிலை. அப்படியே எல்லாம் நன்மையாக நடை பெற்றது. மீனாம்பாள் நாச்சியார் பிழைத்தது மறு ஜென்மம் என்று தான் கூற வேண்டும். இப்படி மூன்று முறைகள் வருடத்திற்கு ஒருமுறை நடந்தது. தெய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்தார்.இறையருள் சக்தி ஒவ்வொரு தடவையும் பக்கத் துணையிருந்து காப்பாற்றி வந்துள்ளது. இறையருளுக்கும், மனிதாபிமானத்துடன் உதவிகள் செய்தவர் களுக்கும், சுவாமி அவர்களும், மீனாம்பாள் நாச்சியார் அவர்களும் நன்றியுடன் பிரார்த்தனை செய்து
கொண்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

பலசரக்குக் கடையின் பொருட்கள் எல்லாம் கவனிக்க ஆள் இன்றி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட கட்டை வண்டி நிறைய சரக்குகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, பொள்ளாச்சியில் இருந்து வரும். வண்டியோட்டி வரும்போதே தேவையானவற்றைக் களவாடிக் கொள்வார். மீதம் வருவதில் சுவாமியின் தாயார் தனது மகள் வீட்டிற்கும், சொந்த உபயோகத்திற்கும் எடுத்தது போக, மீதம் என்ன தான் இருக்கும்? கடைக்கு விரைவில் மூடுவிழாவை நடத்தத் திட்டம் உறவினர்களிடம் உதயமாகி, சுவாமியின் தாயின் மூலம் நிறைவேற்றக் காரியங்கள் நடந்தன.

தகப்பனார் மிகவும் கண்டிப்பானவர். அவர் கடைக்குச் செய்த கொள்முதலை இருப்புக் கணக்கு எடுக்கும் போது யார் பதில் சொல்வது? சுவாமியின் தாயாருக்கும் பயம் வந்து விட்டது. கடைசியில் மனதை ஒரு வகையில் தேற்றிக் கொண்டு நமது சுவாமியைக் கைகாட்டி விடுவது என்றும் முடிவே செய்து விட்டனர். பிறகு தினமும் சுவாமியின் தகப்பனாரிடம், “உங்கள் மகன் ஊதாரித்தனமாகச் செலவு செய்கிறார். கடைப்பணம் வீணானது புரியவில்லையா? குடும்பச் செலவிற்கு எங்களுக்கு இனி என்னதான் வழி? ” என்ற போது அவர், “சரி, கணக்கு வழக்குகளைப் சரிபார்ப்போம்” என்றதும் பீதியில் உறைந்து போயினர். சுவாமி வழக்கம் போல் தனது பணிகளை இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

தம்பனவசியனின் குடும்பத்தில் சிலர் ஜென்மம் பகையைத் தீர்த்துக்கொள்ளச் சுவாமியின் தகப்பனாரின் அண்ணன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவது பற்றிச் சற்குருநாதர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அமானுஷ்யங்களிடம் தீயசக்தியைப் பெற்றவர்கள். உடுமலையருகே உள்ள ஆண்டிபட்டி மலை அடிவாரத்தில், சிலர் தீய மாந்திரீகக் காரியங்களைச் செய்து வந்தனர். அங்கு ஒரு குடும்பத்தினர் இவர்களுக்கு உதவியாக இருந்தனர்.

வெள்ளைப் பூண்டு விளைச்சல் அங்கு அமோகமாக விளையும்.
சாப்பிடும் உணவில் மருந்து வைத்து ஆளை வசியம் செய்து விடும் காரியங்களையும் செய்து வந்தனர். பாவப்பட்ட இந்தக் கர்ம வினைகளையும் இரக்கமற்றுக் கூசாமல் செய்து வந்தனர். அவர்களின் பிடியில் நமது சுவாமியின் தாயார் அகப்பட்டுக் கொண்டார். “மகனையும், மருமகளையும் வீட்டை விட்டுத் துரத்து” இதுதான் அவர்கள் இட்ட கட்டளை. அதன்படியே காரியங்கள் நடை பெறத் துவங்கின!

நமது சுவாமி திருமணமான புதிதில் தனது மூத்த மைத்துனருடனும், பொள்ளாச்சி ரத்தினம் லாரி புரோக்கர் ஆபீசில் கூடும் தேங்காய் வியாபாரிகளுடனும், வட இந்திய யாத்திரை சென்று வந்தார். ஸ்பெஷல் பேருந்தில் துவங்கியது. முதலில் கோவா செல்ல அனைவரும் விரும்பினர். மைசூருக்கு சத்திய மங்கலம் வழியே செல்ல முடிவானது. இந்தப் பயணம் வடமாநிலங்களுக்குத் தேங்காய் வியாபாரம் செய்ய ஏதாவது நல்ல வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதாகத்தான இருந்தது. இவர் தெய்வீக பக்தி உடையவர் எனத் தெரிந்து கொண்டதும், ஒரு சிலரைத் தவிர எல்லோரும் விலகியே இருந்தனர்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button