யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

213

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•06•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(359) மனிதனே புனிதன் —
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகில் ஏதாவதொரு சாதனை புரிய எண்ணும் மனிதன் அதற்குரிய பக்குவம் பெற வேண்டும் என்று எண்ணினால் அதற்குரிய ஆற்றலைப் பெற்ற வனாக அவன் திகழ வேண்டும். இறைவனை எண்ணித் தன் உணர்வுடன் முழு நம்பிக்கையை மனதில் கொண்டு பிரார்த்தனை யில் ஈடுபட்டு, தன்னுள்ளே உயர் மின் நுண்ணிய ஆற்றல் சக்தி களை மிக மிக எளிதாக விழிப்ப டையச் செய்து கொள்கிறான். தெய்வீகப் பிரார்த்தனைகள் மூலம் இறைசக்தியை எண்ணி எண்ணி அவ் ஆற்றலைத் தன்னுள்ளே வளர்த்துக் கொள்கிறான். மனிதனின் உள்ளே பிரார்த்தனைகள் வழியே வெளிப்படும் இறைவன் அருள் சக்திகளானது, செல்வச் சிறப்பு மற்றும் கல்வியறிவின் மேம்பாடு இவைகளை உருவாக்கும். சுய தேவைகள் நிமித்தமும் உயர் ஆற்றல் சக்தி யைப் பெற முடியும். பெற்ற செல்வச் சிறப்பு மற்றும் கல்வியறிவின் மேம்பாடு இவைகளை பிறர் நலத்திற்காக வும் தனது கருத்தில் கொண்டு செயற்பட்டு, அன்புடன் பிறருக்கு உதவிடும் போதுதான் மனிதன் புனிதன் நிலையை அடைய இறைவன் ஆசீர்வதிக்கின்றார். ஆலயங்களில் செய்யப்படும் யாகங்களை உள்ளன்புடன் கவனித்துப் பார்ப்பவர்களுக்குச் சில உண்மைகள் புலப்படும். ஞானக்கல்வியான வேதமந்திர உட்பொருளில் ஆகுதியை (பெற்றதைச் திருப்பித் தருவது) செலுத்தப்படும் போது அது உலகில் அனைவருக்கும் பேதா பேதமின்றிப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. இறைவனால் படைக்கப்பட்ட தெய்வங்கள் முதற் கொண்டு சகல ஜீவராசி கள் அனைவருக்கும் அது உயர் மின் நுண் காந்த சக்திளாகமாறிப் பயணித்துச் சென்று சேர்கிறது. இத்துடன் உலக நன்மைகள் வேண்டிப் பிரார்த்தனைகளும் சேரும் போது, தீமைகள் விலகி உலகின் அனைவருக்கும் இறை ஆற்றல் சக்தி அருள் கிடைக்கி றது.

இதனால் உலகில் உள்ள அனைவருக்கும் இறைவனது அறிவின் ஒளி கிடைக்கிறது. எல்லாம் வல்ல அழிவற்ற பரம் பொருளாய்த் திகழும் இறைவ னைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகின்றது. இறைவன் அருள் கிடைக்கப் பெறுவதால் உடல் ஆரோக்கியம் அடைகிறது. மனம் கட்டுப்பாட் டில் இயங்குகிறது. புலனடக்கம் ஏற்படுகிறது. ஒழுக்கம் மிகுந்த வாழ்வு மலர்கிறது. பஞ்சேந்திரி யங்கள் நன்கு தொழில் படுகிறது. நன்மையானவற்றைக் கேட்க வும், இனிமையானவற்றைப் பேசவும் உதவுகிறது. நினைவின் ஆற்றல் பெருகுவதால் கற்ற கல்வியின் அறிவு என்றும் மறவாமல் இருக்கும். இறைவ னைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவதோர் நாதம், உலகப் பொருட்களைப் பற்றிய அறிவால் மறைக்கப்பட்டுள்ளது. அதனை விலக்கிக் கொள்ளும் ஞானியர்களால் இறைவனைப் பற்றியும், இறைவன் வெளிப்ப டும் தன்மை பற்றியும் உணர்ந்து இறையருளில் நிலைபெற்றிருப் பார்கள். இறை சக்தியுடன் மனிதன் இணையும் ஐக்கிய உணர்வு ஏற்படும். அதனால் ஏக்க நிலை உண்டாகி, எங்குமே பரவிப் படர்ந்துள்ள இறை சக்தியுடன் மனிதன் இணைந்து விடும் போது, மனித வாழ்க்கை யை இறைமயமானதாக ஆக்கிக் கொள்ளும் போதுதான் மனிதன் புனிதன் ஆகின்றான்.

நமது வேதங்கள் நமது வாழ்வுக்கு என்றும் ஒளி மயமான நல்ல வழிகளை காட்டும் ஆசானாகவே இருந்து வந்துள்ளது. மாற்றம் நம்முள் நிழ்ந்து கொண்டிருக்கும் விந்தையை அது உணர்த்துகி றது. குழந்தை, வாலிபன், தந்தை, வயோதிகன் நால்வரும் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நால்வரும் இந்த உலகத்தை எண்ணிப் பார்க்கின்ற உணர்வு நிலைகள் வேறு வேறாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரும் காண்கின்ற உலகம் வேறு வேறாகத்தான் இருக்கும். காரணம் இந்த மாற்றத்தைக் தருவது அவ ரவர்களின் உணர்வு நிலையே. உணர்வுகள் மாற மாற, அவர்கள் உலகைக் காணும் பார்வையின் கோண மும் மாறுபடுகிறதாம். உணர்வு நிலைகள் மாற மாற ஏற்படும் மாற்றமும் விரிவடைகின்றதாம். எப்படி? குடும்பத்தினரை மட்டுமே நேசித்து வந்த நாம், நமது உணர்வுகள் விரிவடைய விரிவடைய, சுற்றம், நட்பு, நாடு, உலகம் என்று நேசிக்கத் துவங்கி விடுவோம். இப்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எந்தவித மாற்றமும் எற்படுவதும் இல்லையாம். மாற்றம் நமக்குள்ளே நிகழ்ந்து, நமது உணர்வு விரிவடைந்ததாம் என்று நமது வேதம் மனிதனின் அகநிகழ்வின் உண்மைகளைப் பற்றி பளிச்சென்று விவரித்து, வேதக்கருத்துக்களின் வழியே இறைவனது அனுக்கிரகம் விஸ்வரூபம் எடுக்கின்றது. நமது உணர்வுகள் விரிவடையும் போது அது ஒளித் தன்மையை அடைகின்ற போது எல்லாமே உள்ளது உள்ளபடிக்கு மனதில் தெளிவாகத் தெரிகிறது. இந்த உலகம் இறைவனது படைப்பில் எதுவோ அது அதுவாகத் தெரியத் துவங்குகிறது. சற்குருநாதர் நமது சுவாமியை இப்போது அழைத்துக் கொண்டு கொழுமம் – குமரலிங் கம் அருகே ஓடும் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தத்தாத்ரேயா் சுவாமி அதிஸ்டானத்திற்கு அழைத்துச் சென்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button