யக்ஷர்கள், ஆவிகள் செயல்

175

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•01•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(202) மனிதனே புனிதன் —
யக்ஷர்கள், ஆவிகள் செயல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு மனிதனுக்கு சந்திரன் தோஷமாக இருந்தால் மனநிம்மதி என்பது மருந்துக்கேனும் நிலை பெறாது. எவ்வளவு படித்திருந்தாலும் ஆணவம் உச்ச கதியை எப்படியிருக்க வாய்ப்புகள் உண்டு. சந்திர தோஷம் உள்ளவர்களுக்கு, சகல பூத கணங்களுக்குத் தலைவனாய் உள்ள கணபதி பகையாக மாறி இருப்பார். மற்றவர்களை மதிக்காமல் இவர்கள் கேலியும், கிண்டலும் செய்து அகம்பாவத்தினால், பணம் காசு சொத்துக்களை இழக்கும் வாய்ப்பை அவர்களே உண்டாக்கிக் கொள்வார்கள். கணபதி பகையினால் இப்படி நடைபெறும் போது மறைமுக சனி ஆதிக்கம் ஏற்படும். கேது வாழ்வின் முன்னேற்றத்தைக் தடை உண்டாக்குவதால், தன்னலை மறந்து எதிர் மறையாகப் பேசி உலகில் வலம் வருவார்கள்.

கேது தோஷமும், சந்திரதோஷமும், பிள்ளையார் பகையும் உள்ளவர்கள் துர்வாசனையை விரும்புவார்கள். தீய நண்பர்கள் வாய்க்கப் பெற்றுக் குலதெய்வம் பகையாகும். குலதெய்வக் கோயிலுக்குள் நுழையும் அருகதையும் இல்லாமல் போகும். மாந்திரீகப் பிடியில் தங்களை அறியாமல் சிக்குண்டு நல்ல தெய்வீக சிந்தனையை அறவே இழந்திருப்பார்கள். இறை நெறியாளர்களைப் பகைத்துக் குருதோஷமும் ஏற்பட்டிருக்கும். குடும்பப் பெண்களுக்குத் துரோகம் செய்திடும் எண்ணமுடன், பெண் இனத்தைத் தூஷிப்பவர்களாகவும் விளக்குவார்கள். சிலருக்கு நபும்ஸகனாக உடலில் மாற்றம் ஏற்பட்டு விடுவதும் உண்டு.

சரியான பரிகாரம் இவர்கள் காணாவிடில் வீடுபேறு அடையும் தகுதியை இழந்து, பாவவினையின் காரணமாக அரூபியான யக்ஷனாகப் பிறந்து பிறர் துன்பம் கண்டு சந்தோஷம் உறுவார்கள். இவர்களை மாந்திரீகர்கள் தங்களது ஏவல் பணிகளுக்கு, மூன்று வகையான மாவு வகைகளை ஒன்று சேர்த்துப் பாவைகள் செய்து, அதனுள் தன்னிடம் வசமாகும் யக்ஷனின் உயிரை அதனுள் தங்கச் செய்து விடுவார்கள். பிறகு அந்தக் கொடூர யக்ஷர்களை யாராலும் அழிக்க முடியாது. மாந்திரீக ஏவல் செய்பவன் ஏவும் பணிகளை நிறைவேற்றி வருவார்கள். குறிப்பிட்ட காலம் வரை ஏவல் பணிகளை நிறைவேற்றி விட்டு, மாந்திரீகனிடம் இருந்து சுதந்திரம் பெற்று தன்னிஷ்டம் போல் வாழ்வார்கள்.1. தெய்வீக வழிபாடுகளில் மனதினைச் செலுத்தி வாழ்பவர்களையும், 2.மனதில் தைரியம் உடையவர்களையும், 3. உரத்த சப்தங்கள் ஏற்படும் இடங்களையும், 4.கண்னிமையாது வாழும் தெய்வங்களையும், 5.மகாத்மாக்களையும் நெருங்க மாட்டார்கள்.

துஷ்ட ஆவி ஆத்மாக்கள்,
1.பயந்த சுபாவம் உள்ளவர்கள், 2.துக்கத்தில் வாழ்பவர்கள், 3.பிறருடைய துன்பம் கண்டு மகிழ்பவர்கள், 4.கொடிய பேராசை குணம் உடையவர்கள், 5.சத்திய தர்மத்தை மதிக்காதவர்கள், 6.எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள், 7.தூஷிப்பவர்கள், 8.கேலியும் கிண்டலுமாக வாழ்பவர்கள், 9.தெய்வ நிந்தனை செய்பவர்கள், 10.தீபதரிசனம் செய்யாதவர்கள் மற்றும் 11.குருத்துரோகம் செய்பவர்கள் ஆகியோரின் மனதினை மேலும் மேலும் கேடுறுத்தி, புத்தியை பேதலிக்கச் செய்து அறிவின் விருத்தியைத் தடுக்கும் செயல்களைச் செய்து, 12.ஒழுக்கமான வாழ்க்கையில் இருந்து பிறழச் செய்வார்கள். யக்ஷர்கள் மற்றும் தீய ஆவியாத்மக்கள் இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள். யக்ஷர்களாவது தங்களை ஏவினர்களை விட்டு விட்டு, மற்றவர்களைப் பிடித்து வைத்துப் பீடித்திருந்தால், உண்மையை உணர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தப்பிக்க ஏதாவது வழிவகைகளையாவது கூறுவார்கள். சாத்தான் வசமாக இருக்கும் கொடூரமான ஆவிகளைச் சாத்தான் பிறர் மீது ஏவி விட்டால் அவ்வளவுதான்! சாத்தானை தனது வசத்தில் வைத்துக் கொண்டிருக்கும் மாந்திரீகன் இரக்கப்பட்டால் தான் தப்பிக்க வழி பிறக்கும். அதற்குப் பணம் காசு மிக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். 13.சம்பாத்தியம் பிறர் கைகளுக்குச் சென்றுவிடும்.

இவற்றில் இருந்து தப்பிக்க வழிகளுண்டா?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button