யக்ஷன் என்பது உண்மையா?

266

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!

15•01•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(199) மனிதனே புனிதன் —
யக்ஷன் என்பது உண்மையா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இது ஓர் புதிரான தலைப்பு! நமது அறிவினுக்குத் தெரியாத, புலப்படாத விஷயங்களை நாம் ஒதுக்கி விடுகிறோம். நம்பத் தகுந்தவர்கள் கூறும்போது அது நம்பிக்கையான விஷயமா என்று எண்ணாமல், கூறுபவரை மரியாதை நிமித்தம் ஒப்புக்கொள்ள முயலுகிறோம். சிலர் இந்த விஷய ஆராய்ச்சியைத் தொடர எண்ணிச் செயல்படுகின்றனர்! ஆனால் சிலருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் இயற்கையாகவே, உண்மையின் சொரூபம் வெளிப்பட்டு விடுவதால், அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை! ஆனாலும் சில தீயசக்திகள் தங்களின் இச்சைக்கொப்பத் தங்களின் காரியங்களை நிறைவேற்றச் செய்திடும் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை. படித்துப் பாருங்கள் திரு.கோவிந்து அவர்களின் வாழ்க்கையின் அதிர்ச்சி தரும் உண்மைகளை!

திரு.கோவிந்து அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர். வறுமை காரணமாகச் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர். சுவாமியின் தகப்பனார் A.P.M.சாமி அவர்கள் சிற்றுண்டி விடுதி நடத்தி வந்த காலத்தில், சிறுவனாகக் கடையின் முன்பு நின்று பசியுடன் அழுது கொண்டு இருந்தவர். சுவாமியின் தாய்தந்தையர் அவரை வளர்த்து ஆளாக்கினர். வாலிப வயதில் திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். ஹோட்டல் தொழிலை நன்கு கற்று அதில் சிறந்து விளங்கி வந்தார். கருடன் காலில் இருந்து விலங்கை நீக்கிப் புத்தி பேதலித்துப் போன வயிற்றுச் சின்னவன், ஊரைச் சுற்றிவிட்டு தேநீர் சாப்பிடக் கடைக்கு அன்று விஜயம் செய்தார். கையில் பெரிய உருட்டுக் கட்டையுடன் வலம் வந்த அவரைக் கண்டு ஊரே நடுங்கியது. கோபம் வந்து விட்டால் எதிரில் இருப்பவர் கபாலத்தைப் பிளக்க முயற்சி செய்வார். அதற்குள் சம்பந்தப் பட்டவர் புத்திசாலியாக இருந்தால், விலகி ஓடித் தப்பித்துக் கொள்வார். அன்று வியாழக்கிழமை மாலை நேரம். கசாப்புக்கடை நடத்தி வந்த திரு.ஜப்பார் ராவுத்தர் தேநீர் சாப்பிட வந்தார். திரு.கோவிந்து அண்ணா தேநீர் தயாரித்து எடுத்து வந்து தருகின்ற நேரம், “ஏய் , நிறுத்து” என்று ஆணையிட்ட வண்ணம் வயிற்றுச் சின்னவன் அங்கு பிரசன்னமானார். கசாப்புக்கடை திரு.ஜப்பார் பாயைப் பார்த்து, “டேய், ஜப்பாரு! முந்தாபொள்ளாச்சி நேற்றைக்கு என்னிடம் செடிபீடி கடன் வாங்கினாய் அல்லவா! அதனை இப்பவே திருப்பிக் கொடு” என்று அழிச்சாட்டியம் செய்தார்.

எல்லோருடைய முன்னாலும் வயிற்றுச் சின்னவன் கேட்டதும் கசாப்புக்கடை பாய்க்குக் கோபம் வந்து விட்டது. “ஒரே ஒரு பீடி தானே வாங்கினேன். நாளைக்குப் திருப்பித் தாரேன்” எனக் கசாப்பு பாய் கூறியதும்,
” அது முடியாது! நீ ஓசிபீடி வாங்கி மூனுநாள் ஆகுது. அப்படீனா மூணு பீடி தரணுமாக்கும் ” எனக் கூறிப் பல்லை நறநறவென நெறித்தார்.
“அம்மாவாசை நெருங்கி விட்டது. இனி வயிற்றுப் பெரியவனக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம்” என எண்ணிச் சிலர் விலகிச் சென்றனர். நிலவரம் என்னவென்று புரிந்து கொள்ளாக் கோபத்தில் ஜப்பார் பாய், “நீ பன்றதப் பண்ணிக்கோ, ஆனா இனி பீடி உனக்குக் கிடைக்காது” எனக் கூறியதும், பீடி யின் மீது அபிமானம் கொண்ட வயிற்றுப் சின்னவன், “ஆஹா, உன்னை விட்டேனா பார் ” என்று சப்தமிட்டபடியே, கசாப்புக்கடை திரு.ஜப்பார் ராவுத்தர் மீது பாய்ந்து விட்டார். வீட்டின் பின்னால் உள்ள திண்ணையில் மீது அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்த நமது சுவாமியின் காதுகளில் கூக்குரல்கள் கேட்டன. தவத்திரு.நாகராஜன் சுவாமி சொல்லுக்குக் கட்டுப்படும், வயிற்றுச் சின்னவன் போக்கு அன்று எல்லைமீறிப் போய் விட்டது. சுவாமி செல்வதற்குள் கலவரம் நடந்தேறிவிட்டது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி!வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button