ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோ/தியே சரணம்!
23•01•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(207) மனிதனே புனிதன் —
யக்ஷதாபம், மோகம், கோபம்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
செல்வி.தேவானைக்குத் தெய்வங்களிடம் வந்த கோபமும், யக்ஷன் கரிச்சான் ரக்கன் மீது கொண்ட ஆசையும், அதனால் வந்துற்ற மோகமும்,
மோகத்தினால் ஏற்பட்ட பாவமும், பாவத்தினால் ஏற்பட்ட தெய்வசாபமும் சேர்த்து மனதை வதைத்தது. யக்ஷனுக்கு செல்வி.தேவானைக்குத் தன்மீது அன்பு ஏற்பட்டதால் திரு.கோவிந்து அண்ணா அவர்களைத் திருமணம் செய்ய சம்மதம் தந்து விட்டது! யக்ஷன் அவளின் கண்களுக்குத் தெரியத் துவங்க எண்ணிய யக்ஷனும், தனது வடிவை அழகுடன் தோற்றம் காட்டினான். திருமணம் நடப்பதற்கு முன்பு அவள் உடலினுள் தான் நிரந்தரமாகத் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டான் யக்ஷன். தனக்கு ஜீவிதமான, தன்மீது அன்புடைய ஒரு பெண் உடல் கிடைத்து விட்டால், தான் மாந்திரீகன் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்ற ஆசைதான் காரணம். இந்த ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது?!
யக்ஷனின் மற்றோரு நிபந்தனை இருந்தது. அதாவது இனிமேல் தீபவழிபாட்டை செல்வி.தேவயானி தொடரக் கூடாது என்பது தான்!
இப்போது யக்ஷனின் தேவவடிவில் மயங்கிய அவள் அந்த நிபந்தனைக்குச் சம்மதம் தந்து விட்டாள். செல்வி. தேவானை இப்போது யக்ஷனை வசீகரித்துத் தன்னுள் ஆவாஹனப் படுத்தும் அதற்குரிய ஜெபத்தை யக்ஷனிடமே அறிந்து கொண்டு ஜெபம் செய்யத் துவங்கி விட்டாள். அவன் அவளது உள்ளம், உடல், உயிர், ஆன்மா அனைத்திலும் படர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டு ஐக்கியமாகி விட்டான். அவள் யக்ஷனாகவே மாறி விட்டாள். அவளது நடவடிக்கைகளில் ஆண்மைத் தனம் மிளிரத் துவங்கி விட்டது. ஆணின் பலத்துடன் சகல காரியங்களும் நிறைவேறுவதைக் கண்டு பயந்து போன பாட்டியம்மா, தனது உறவினர் திரு.கிருஷ்ணன் குட்டியிடம் தெரிவித்ததுடன், பேத்தியின் திருமணப் பேச்சையும் அவரிடம் மீண்டும் துவங்கினார். கேரளத்தை விட்டு வேறு எங்காவது திருமணம் செய்து கொடுக்க முடிவானது. இந்த முடிவுக்கும் பிறகு பொள்ளாச்சி சந்தைக்குப் பார மாட்டு வண்டியை ஓட்டி வரும் திரு.கிருஷ்ணன் குட்டிக்கு, அடுத்ததாக ஞாபகத்திற்கு வந்தது திரு.கோவிந்து அண்ணா மட்டுமே! அப்படித்தான் இந்தத் திருமணம் முடிவானது.
மிகவும் எளிய முறையில் பனங்காவு வீட்டில், மாவிலைத் தோரணங்களோடு, கேரளப் பாரம்பரிய பட்டு ஜரிகை உடைகள் அணிந்து, சூழ்ந்துள்ள சுற்றத்தார் குலவையிட, திரு. கோவிந்து அண்ணா அவர்கள் செல்வி. தேவானையின் கழுத்தில் மங்கல நாண் சூட்டித் திருமதி.தேவானை கோவிந்து என ஆக்கிக் கொண்டார். நமது சுவாமியின் கண்களுக்கு மணப்பெண் ஆணாகவும், பெண்ணாகவும் மாறிமாறிக் காட்சி தந்தாள். உண்மை நிலை புரிந்து விட்டது சுவாமிங்கு! திரு.கோவிந்து அண்ணா நல்ல சிவந்த நிறம் உடையவர் முகத்தில் சந்தோஷம் இல்லை. இனம் புரியாத ஏதோ ஒரு பயமும், மனக்கலக்கமும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நமது சுவாமி அவர்களைத் தனியே சந்தித்து சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெற நினைத்து இருந்தார். கேரள முறையில் விருந்து முடிந்ததும், வீட்டின் முன்புறத்தின் தாழ்வாரத்தில், சுவாமியும், திரு. கோவிந்து அண்ணாவும் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். திருமதி.தேவானை தாழ்வாரத்தின் தூணில் சாய்ந்து கொண்டு, நின்றபடியே இவர்கள் பேசுவதை உண்ணிப்பாய் கவனித்துக்கொண்டு இருந்தாள். முகத்தில் ஆக்ரோசமும், சந்தோஷமும் மாறி மாறிச் தென்பட்டது!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.