ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
31•12•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(184) மனிதனே புனிதன் —
மெய்ஞானியர்கள் வெற்றி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மெய்ஞானியர்கள் பற்றி தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்களின் கருத்து :
“ஞானிகள், மகரிஷிகள் தங்கள் தவ வலிமைகளினாலும், தியானங்களினாலும், பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மை நிலைகளைக் கண்டறிந்தனர். அந்தப் பேராற்றல்களின் உணர்வலைகளை, தங்களின் தப, தியானங்களின் ஆற்றல்களைக் கொண்டு, தங்களின் புலன்களின் அறிவால், உடல்களில் சேர்த்து் வளர்த்துக் கொண்டனர்.”
” சந்தர்ப்ப சூழ்நிலைகளால், புலன் அறிவுகளால் ஈர்த்த, தீய, கோப, குரோத, ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச் சுவாசிக்க நேர்ந்தால், அவைகளை மாய்த்து, தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டனர். அப்படி வளர்த்துக் கொண்டு, உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றிக் கொண்டனர். அந்த நிலையில், தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த பேராற்றல்கள், ஒலியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருக்கும் நிலையை உணர்ந்தனர். மேலும் தங்கள் உயிராத்மாவை ஒளியாய் மாற்றிக் கொண்டனர். உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து, சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும், அம்மண்டலங்களை இயக்கிக கொண்டும் இருக்கின்றார்கள். அவர்கள் அதிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும், ஒளி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள், பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.”
“மெய்ஞானிகள், மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒலியான உணர்வலைகளையும், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளது பரவெளியில் பரவி இருக்கும் ஒலி, ஒளியானது ஆற்றல் மிக்க உணர்வலைகளை நாம் பெற முடியும். அதற்கு நமது வாழ்க்கையில், நம்மையறியாது, நமது புலனறிவால் ஈர்க்கப்பட்டு, நாம் சுவாசித்த, தீய, கோப, குரோத, ஆத்திரமான குணங்களின் உணர்வலைகளை நாம் மாய்க்க வேண்டும். தீமை குணங்களை மாய்க்க நாம் “ஆத்மசுத்தி” செய்து கொள்ளும் வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் காந்தசக்தியைத் தியானத்தினால் தனக்குள் நாம் பெற வேண்டும். அதன் துணை கொண்டு ஞானிகள், மகரிஷிகள் வெளிப்படுத்தும், ஆற்றல் மிக்க ஒலியலையான உணர்வலைகளையும் நாம் பெற முடியும். தீய குணங்களின் உணர்வலைகளை மாய்த்து, நீங்கள் நலமும், வளமும் பெற்று உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெறவே எமது குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம் ” என்று ஞானகுரு தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்கள் கூறினார்கள்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.