மும்முடிவரம் பாலயோகி.

272

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•01•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(187) மனிதனே புனிதன் —
மும்முடிவரம் பாலயோகி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தலைவர் ராமசாமி அண்ணாருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார். இவர்களின் தாயார் பெயரும் திருமதி.T.சுந்தரம்மாள் தான். தனது இளம் வயதிலேயே ஆதரவு தந்த கணவனை இழந்தவர். ராமலிங்க வள்ளலார் பக்தையாகிய அவர், மிகுந்த வைராக்கியத்துடனும்,
பெறுமையுடனும் தனது குழந்தைகளை தவவாழ்வில் ஆளாக்கியவர். தனது மகளை பெரிய வீட்டு திரு.காமாட்சி செட்டியார் அவர்களின் மூத்த புதல்வன் திரு.வரதராஜன் அவர்களுக்கு மணம் செய்து தந்திருந்தார். அந்த மூன்று ஆண்குழந்தைகளுக்கும், பெண்குழந்தை ராஜ ஜோதி லக்ஷ்மிக்கும் அருமைப்பாட்டி அவர். ஒருமுறை திருமதி.T.சுந்தரம்மாள் அவர்கள் பொள்ளாச்சி வள்ளலார் சங்கத்துப் பெண்களுடன் திருக்கோயில்களை தரிசித்துவர புறப்பட்டுச் சென்றார். பற்பல ஷேத்திரங்களில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலக் கோயில்களைத் தரிசித்து வரும் போது மும்முடிவரம் சென்றிருக்கின்றார். அந்த சமயம் பாலயோகியின் நேரடி தரிசனம் கிடைக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டு விட்டது.

அங்கேயே நாள் முழுவதும் தியானத்தில் ஆழ்ந்து போனார். உடன் சென்ற அனைவரும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்தும் திருமதி.T.சுந்தரம்மாள் அவர்கள் கண்களைத் திறக்காது ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியவரை, தக்க உதவியுடன் வாகனத்தின் உள்ளே அமரவைத்து, எப்படியோ பொள்ளாச்சி கொண்டு வந்து சேர்த்துத் தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டனர். ஒருமாத காலத்திற்குப் பிறகு கண்விழித்த அவர் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவரும் பயம் கலந்த உணர்வுடன் வியந்துதான் போனார்கள். தியானத்தில் அமர்ந்து விட்டால் பசி, தாகம், மற்றும் எந்த விதமான உணர்ச்சிகளும் இன்றி மெய்யுணர்வில் கலந்து அவர்கள் வாழ்ந்து வரலாயினர். தனக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?என்பதை அறிந்து கொள்ள ஆவல் மிகுத்திருந்தது. அதற்கான விடையை நமது சுவாமி தவத்திரு.நாகராஜன் அவர்களிடம் கேட்டு அறிவதற்கு ஆவலுற்றார்கள்!

திரு.V.சிவசண்முகம் அவர்களுக்கு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களின் சந்திப்புக்குப் பின்னர் ஆத்ம சுத்தியுடன் கூடிய தியானத்தில் நாட்டம் ஏற்பட்டிருந்தது. நடந்தவை, நடக்கப்போகும் நிகழ்வுகள், அமானுஷ்யங்கள் பற்றியெல்லாம் காட்சிகளாக வரத் துவங்கியிருந்தன. குடும்பத்தில் இறந்தவர் திதி வரும் போது படையல் போடும் வழக்கம் இருந்தது. இறந்தவரின் ஆவித் தோற்றமும், படையலை வந்து உண்ணும்போது கூறும் கருத்துக்களை எல்லாம் கேட்டு வீட்டினரிடம் சொல்லி விட்டார். இது மெல்ல மெல்ல பிறகு வேகமாக சூடுபிடித்து உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. உறவினர் வீட்டில் இறந்தவர் படையல் போடும் இடங்களில் எல்லாம் இவரை அழைத்துச் சென்று, அமானுஷ்ய செய்திகளைக் கேட்கத் துவங்கி விட்டனர். இது தவயோகினி திருமதி.M.சுந்தரம்மாள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இவரை மகாலிங்கபுரம் பாட்டி என்று தான் எல்லாக் குழந்தைகளும் அழைப்பார்கள்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button