முத்துவின் தகப்பனார்.

164

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•11•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(134) மனிதனே புனிதன் —
முத்துவின் தகப்பனார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° °°°°°°°°°°°°°°
காலசூழ்நிலைகள் எல்லா நேரமும் எப்போதும் போல் விளங்கி வந்தாலும், நமது எண்ணத்திற்கு ஒப்பவே அதன் செயல் நிகழ்வும், விளைவும் நடைபெற்றிடவே, அது(?) கால ஓட்டத்தில் செயற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் பலா பலன்களை நமது செயலில் கண்டு, ‘இதுதான் நீ செய்த வினை’ என்று கூறுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலேசென்று மனம் போல் வாழ்வு என்றும் குறிப்பிடுவார்கள். ‘சுவாமி அவர்கள் சும்மா இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் சும்மா இருப்பதில்லை’ என்ற வாதத்தை சுவாமி அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார். “எனக்குள்ளேயே நடந்து முடிந்து விட்ட விஷயங்கள்தான் என்னைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருக்கிறது” என்பார். இதன் உண்மைகளைப் புரிந்து கொண்டு விட்டால், விதியைக்கூட வென்று விடலாம் என்று சித்தர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். முயன்றால் முடியாதது ஏதுமில்லை” என்பார்.

எந்த விஷயத்தையும் பிறர் சொன்னாலும் அதனை அப்படியே ஊருக்கு உபதேசம் செய்யலாம் என்று எண்ணுவதில் கூட மேன்மை அடைய முடியாது. யார், எந்த, எப்படிப்பட்ட செய்தியை நமக்குக் கூறினாலும், அதனைக் கடைப்பிடித்து உண்மைகளை உணர்ந்து கொண்டு, அவசியம் என்பன போன்ற செய்திகளை ஊருக்குச் சொல்வதால், சொல்லுபவர், கேட்பவர் ஆகிய இருவருக்குமே நன்மைகள் ஏற்படும். உலகின் இயல்புத் தன்மை பாதுகாப்பாக இருக்கும்” இப்படியாக திரு.கண்னையாவும்
சுவாமி அவர்களும் பேசிக்கொண்டு இருந்த போது, முத்துவின் தகப்பனார் ஜடா முடிகளோடு சுவாமி முன்னால் அமர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்து கொண்டார். எவ்வளவு நேரம் தான் இந்த வாய்பேசாக் கட்டுப் பாட்டில் அமர்ந்து இருக்க முடியும்?

” யாரோ வந்திருப்பது போலத் தோணுது! சந்தனத்தில் அத்தர் கலந்து பூசியிருப்பார் போல! வாடை கொஞ்சம் தூக்கலாக இருக்கு, அவரிடம் பேசுங்க சுவாமி ” என்றார் திரு கண்னையா. ” அவர் இடம் மாறி வந்து விட்டார் ஐயா! தவம் செய்து கொண்டு இருக்கிறார்” என்று சுவாமி சொல்லியவுடன், “அப்படியா? வாங்க போவோம் சுவாமி ! நமக்கு எத்தனை வேலைகள் இருக்கு” என்றபடியே எழுந்து கொண்டு விட்டார் திரு.கண்னையா.

“ஏ! பொறுமை, பொறுமை மக்களே! உன்னைத்தான் பார்க்க வந்தேன். கயிலாய நாதன் என்னை அனுப்பி வைத்தார், அமருங்கள்” என்றார் தவத்தைக் கலைத்துக் கொண்டே. “முதலில் உங்களுக்குக் கைலாச தீர்த்தம் தருகிறேன், பருகுங்கள்” என்றபடி வெற்றிலை மீது விபூதியை வைத்துப் பிடித்தபடி, அதில் வழியும் நீரை சாப்பிடச் சொன்னார். கண்னையா அவர்கள் நீரைப் பெற்றுக் கொண்டார். “உங்களுக்கு வேண்டாமா தீர்த்தம்?”என சுவாமியிடம் கேட்டார்.
“உங்களைப்பற்றி முதலில் தெரிந்து கொண்ட பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்றார் சுவாமி.

“பருகி விடாதீர்கள் ” என்று திரு. கண்னையாவின் காதில் சுவாமி மெதுவாகக் கூறினதும், தீர்த்தத்தை முகர்ந்து பார்த்து விட்டு, “ஆஹா! அப்படியா சேதி” என்றபடி கோபமாக மதுரைக்காரர் நாற்காலியை விட்டு எழுந்து நின்று, “படுபாவி, இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது” என்று ஜடாமகுட தாரியிடம் கூறிவிட்டுத் தீர்த்தத்தை அவர் இருக்கும் இடத்தை நோக்கி வீசி எறிந்தார். அது சரியாக அவர்மீதே தெளித்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button