ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
13•06•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(348) மனிதனே புனிதன் —
மீண்டும் தீமயின் பிடியில்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவன் என்ற சொல்லுக்கு விளக்கம் பிரபஞ்ச இயல்பில் உருவாகிய, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வாழ்க்கை யின் கோட்பாடு என்ற நீண்ட உண்மையான விளக்கத்தை நமது வேதநூல்கள் இயம்பு கின்றன. இறைவனது படைக்கும் ஆற்றலில், சக்தியும், வலிமை யும், திறமையும், சகல குணங்க ளும், பண்பின் தன்மையும் நிரப்பிக் கிடக்கின்றன. அதனை ஒவ்வொரு அறிவால் பெறப்பெற ஜீவனின் பகுத்தறியும் ஆற்றல் மேம்படுகிறது. நாம் உலகில் காணும் அனைத்தும் இறைவ னின் பேரறிவின் ஆற்றலால் வெளிப்படுபவையே. இதனை அறிந்து கொண்ட ஞானியர்கள் இறைவனின் பேரறிவு வெளிப்ப டும் வழிவகைகளை அவன் அருளால் பெற்றனர். இறைவன் மேல் உறுதியான நம்பிக்கையை அதிகப்படுத்திய ஞானியர், தங்களது ஆன்மசக்தியைப் பெருக்கி அதனை உத்வேகப் படுத்தினர். அதனைத் தனது உணர்வுகளில் மேலும் மேலும் கூட்டி அதனுடன் கலந்து வாழும் பாக்கியத்தைப் பெற்றனர். ஞானியர்கள் எக்காரியத்திலும், ஆகக் பூர்வமாகவும், நியாயமாக வும், அறிவாளிகளாகவும், அதனைப் பயன்படுத்திக் கொண்டனர். அதனை அவர்கள் இறைவன் தங்களை வழிநடத்தி அருள்வதாகவே எண்ணி நன்றியினைக் கூறிக் கொண்ட னர். அந்தப் பணிவு நிலையே அவர்களை உயர்த்தியது.
பழனி ஸ்ரீலஸ்ரீ நடராஜா சுவாமியின் வீட்டினுள் தனது உடலை ஆகாயத்தில் உயர்த்தி, புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு, ஒரு சிறு கயிற்றைக் படுக்கையாக்கி அதன் மீது குருநாதர் படுத்துக் கொண்டார். மனிதனுள் மறைந்து கிடக்கும் இத்தகைய திறமைகளை வெளிக்கொணரச் சக்தி இறை அருளாலே தான் கிடைக்கப் பெறுகிறது. இத்தகைய குருக்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளும் சீடர் களுக்கு, அவர்களது மன மகிழ்ச்சியிலும், அறிவின் வளர்ச்சியிலும், மெய்ஞானத்தின் வெற்றியிலும் முழுமையான பங்களிப்பை நல்குவார்கள். பேரானந்தப் பெரு நிலையை உடைய இவர்கள், மற்றவர் களுக்காகவே சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமிக்கு சற்குருநாதர் பற்பல அற்புதத் திருவிளையாடல்களைக் காட்டி, நாம் தேடுவது இதுவன்று எனக் கூறுவார். இறையருளைச் சுட்டி உணர்த்துவார். அன்று இரவில் எண்ணங்களைக் காட்சியாக உணர்த்துகின்ற ஜாலவேர் இறைவனின் படைப்பின் அற்புதத்தை வெளிப்படுத்த, அதற்கு நமது சுவாமி நன்றி யைக் கூறிக் கொண்டார். நடந்தது அனைத்தும் கனவாகத் தான் தெரிந்தது. காரணம் அதி காலையில் சுவாமி கண்விழித்து எழுந்த போது, இரண்டு நபர்கள் நமது சுவாமி யைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த இடம் பழனி ஆண்டவர் தேவஸ்தான சத்திரத் தின் தென்புறம் உள்ள ஆதி பராசக்தி, காளி கோவில் வெளி வாசல் படிக்கட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். சுவாமி யினால் பேசமுடியாததால் அவர்களைப் பார்த்ததும் ஓரளவு அடையாளம் கண்டு கொண்டார். மெல்லிய அதிர்ச்சி உடலெங்கும் பரவுவதை உணர்ந்து கொண்டு, ஜெபத்தில் ஆழ்ந்து போனார். ஐவர் மலைக் குகையில் சக்தி பெற வந்த மாந்திரீகத் தலைவ னும் , அவனது பிரதம சீடனுமே
அவர்கள்.
பிரதமசீடன் தான் நமது சுவாமி அவர்களைக் கத்தியால் இடது முழங்காலின் இடது பக்கத்தில் குத்தியவன். மாந்திரீகனின் சீடன், “குருவே, இந்த ஊமையன் எப்படியோ பிழைத்து வந்து இதோ உயிருடன் இருக்கிறான். நம்மைப் பார்த்துத் திருதிருவென விழிக்கின்றான். எப்படித் தப்பி னான்?” என்று பேசினான். சீடன் தனது குருவின் முகத்தைப் பார்த்தான். கடும்கோபம் அவர் முகத்தில் தோன்றியது. நமது சுவாமியின் அருகில் நெருங்கி உட்காரவும், சாராயநெடி வீசியது. நமது சுவாமி மூக்கைப் பொத்திக் கொள்ளவும், அதனால் கோபம் கொண்ட அந்த குரு சட்டென எழுந்து, நமது சுவாமி யின் சட்டையைப் பிடித்து மேலே தூக்கினார். அதிகாலை இருட்டு நேரம். கழுத்தில் துண்டைப் போட்டுச் சுற்றி இறுக்கி, இழுத்துக் கொண்டு போனார்கள். ஸ்ரீ ஈஸ்வர ஜெபம் செய்தபடியே செல்லும் சுவாமி அவர்களை அந்தச் சீடன் கழுத்தைப் பிடித்துத் தள்ளிச் சென்றார். அழகு நாச்சியார் கோவில் தாண்டிச் செல்லும் போது குதிரை வண்டி ஒன்று எதிரில் வந்தது. மூவர் ஊர்வலம் அருகில் வந்தவுடன், வண்டி நிற்கக் குதிரை ஓட மறுத்துச் சண்டித்தனம் செய்தது. ஜிப்பா அணிந்து கைப்பகுதித் துணியை சுருட்டி விட்டபடி , குதிரையை விரட்டத் தார்முள் பதித்த குச்சி வைத்த சாட்டையைக் கையில் பிடித்தபடி மூவர் ஊர்வலம் முன்பு வண்டிஓட்டி குதித்து இறங்கினார். குதிரை தனது வண்டியுடன் சென்று அம்மன் கோயில் மதில் அருகாமையில் நின்று கொண்டது. மூவரின் முன்பு நின்று குதிரை வண்டிக் காரர், சுமார் நடுத்தர வயது இருக்கும், “எங்கடா பையன இழுத்துட்டுப் போறீங்க. “டா” னாக்காரன் கிட்டப் புடிச்சுக் குடுக்கவா?” என எகிறினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.