மீண்டும் குருநாதரின் தரிசனம்!

191

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•05•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(307) மனிதனே புனிதன் —
மீண்டும் குருநாதரின் தரிசனம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பண்ணாரியில் விழா இனிதாக நிறைவடைந்தது. ஆனால் தியான அன்பர்களுக்கு சில விஷயங்கள் புலப்படவில்லை. ஞானகுரு அவர்கள் பக்தர் களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டும் ஆசீர்வாதம் செய்து கொண்டுமிருந்தார். இது ஞானவழியில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு மிகவும் வித்தியாச மாக இருந்தது. ஆலயங்களில் விபூதியைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் காட்சியாகத் தென்படச் சிலர் இது பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர். என்னதான் ஞானவழி காட்டினாலும் அன்பர்களும் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள இஷ்ட்டப்பட வில்லை என்பதையே இது காட்டியது. விபூதியை மந்திரித்து வாங்கினால் தங்கள் காரியங்கள் உடனே நடந்து விடும் என்றும் எண்ணியிருக்லாம். இந்த நிகழ்வு பற்றி ஞானகுரு அவர்களிடம் கேட்க எண்ணியிருந்தோம். நெற்றிப் பொட்டில் சூரியனை எண்ணி தியானம் செய்ய வேண்டும் என்றும் , ஓம் ஈஸ்வரா குருதேவா என்று ஜெபம் செய்வதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டு அவரைச் சந்தித்தோம். அதற்கு அவர் கூறிய விளக்கம், “பிரபஞ்சம் அனைத்தும் தூசிப் படலத்தில் இருந்து தான் அனைத்தும் உருவாகிறது. மீண்டும் தமது மூலநிலையை அடைகிறது. இடைவெளியில் ஏற்படும் நமது அனுபவங்களில் ஈஸ்வரரை மறவாத எண்ணமுடன் வாழ வேண்டும். எந்த எண்ணத்துடன் விபூதியை அணிகின்றோமோ அந்த எண்ணம் செயல்படத் துவங்கி விடும். மனிதனின் எண்ணத்தை வலுவாக்கவே நான் விபூதியை அபிமந்திரித்துத் தருகிறேன் . நம்பிக்கை உள்ளவர்களது எண்ணங்கள் பலிதமாகும் ” என்று புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார்.

நமது சுவாமி அவர்களும், திரு.சண்முகசுந்தரம் அவர்களும் பொள்ளாச்சி திரும்பினார்கள். சற்குரு நாதரை சந்தித்து சில முக்கிய விவரங்களைக் கேட்க நமது சுவாமிக்கு எண்ணம் உண்டாயிற்று. பண்ணாரி விழா பற்றி முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ள தவயோகினி திருமதி.சுந்தராம்பாள் அம்மையார் விரும்பினார். அத்துடன் நமது சுவாமி அவர்களுக்கு சற்குரு நாதர் தரும் பாடங்களை, வேண்டி விரும்பிப் படித்து தனது மனதில் பதிய வைத்துக் கொள்வார். தனக்கும் சற்குரு நாதர் மற்றும் தியான மெய்யன்பர்களுக்கும் ஜென்ம வாசனைத் தொடர்பு உண்டு என்பது அவரது நம்பிக்கை. “தற்போது நேரடியாக சற்குரு நாதரின் தொடர்பில் இருப்பவர் நமது தவத்திரு. ஸ்ரீ நாகராஜன் சுவாமிகள் மட்டுமே. நமது சுவாமி அந்த தெய்வீக உண்மைகளை நிச்சயமாக கேட்டறிந்து இருப்பார். மற்றவர் தனது தவத்தினால் அதனை அறிந்து கொள்ள முடியும். கையில் வெண்ணெய் இருக்க நெய்யிக்கு அலைவானேன்” என்று கூறுவார். அதற்கு நமது சுவாமி பவானி சங்கத்தில் தனக்கு முக்கிய பணி இருக்கின் றது என்றும், அப்பணி நிறைவேறியதும் திரும்பி நமது ஊர் வந்து சேர்ந்த பிறகு அந்த தெய்வீக உண்மைகளைக் கூறுவதாகவும் சொல்லி வந்தார். அதன்படியே தவயோகினி அவர்கள் அவைகளை அறிந்து கொண்டதுடன், சற்குருவை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை யும் நமது சுவாமியினால் அடைந்து ஆனந்த வெள்ளத்தில் திழைத்தார். உண்மையாகவே இறையருள் சக்தியுடன் கலந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருப்ப வர். அது தவிர ஆன்மயாத்திரை பற்றி நமது சுவாமிகளிடம் உபதேசம் பெற்று, முறையாகப் பயின்று அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் தவயோகினி சுந்தரம்மாள் அவர்கள் என்றால் மிகையாகாது.

நமது தவத்திரு.ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் சற்குரு நாதரை அவரது உத்தரவின் பேரில் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் உள்ள சுவாமியின் தோட்டத்தில் மீண்டும் சந்தித்தார். அப்போது இச்சை, கிரியை, ஞானம் பற்றிய கருத்துக்களை உலக வாழ்வின் நடைமுறையில் எப்படி அவைகள் செயல்படுகின்றன? என்றும், அவைகளைத்தான் மனிதன் ” மெய்ஞானம்” என்று உலகில் கூறுவதாகப் போதித்தார். அங்கு சிலம்பு விளையாட்டுக் கற்றுக் கொள்ள வருபவர்கள் வந்து சென்றபிறகு சுவாமி தோட்டத்துச் சாளையின் திண்ணையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டார். அவரது கனிந்த பார்வை மனதினுக்கு இதமாக இருந்தது. நமது சுவாமி அவர்களுக்கு ஞானபோதனை யை முதலில் துவக்கும் முன்பு தியானத்தில் ஆழ்த்தி விடுவார். சற்குரு நாதர் கண்விழித்தபடி தவம் புரிபவர். இங்கே தவம் என்பது மற்றவர்களுக்கு அனுக்கிரஹம் செய்வது என்று பொருளாகும். மனதினுள் சுருங்கச்சொல்லி விளக்கும் ஆற்றல் அவருக்குக் கைவந்த கலையாகும். உலகினுக்குக் போதுமானது நிகழ்காலத்தினை கவனித்தல் என்றும், அதனால் மெய்ஞானம் மெய்யறிவுடன் திகழும் ” என அறிவுறுத்தினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button