மீசைக்கார மாப்பிள்ளை சுவாமி!

171

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•04•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(292) மனிதனே புனிதன் —
மீசைக்கார மாப்பிள்ளை சுவாமி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஜீவாத்மன் தனது தவவலிமை யினால் இறைசக்தியை அறிந்திடப் பக்குவமானபோது, தனது உண்மைநிலையைப் பக்தனுக்கு உயர்த்தித் தகுதி வாய்ந்த உருவமுடன், பக்தன் முன்னே தோற்றம் தருகின்றார். அவரைப் பக்தன் உணர முடிவதில்லை. இறைவன் ஒருவனேதான் பற்பல தோற்றமாகவும், உலகினில் காணப்படுகின்றார் என்ற உண்மையையும், அதனை உணரும் விவேகத்தையும் சுட்டிட்காட்டக் குருவடிவு தாங்கியும் ஓசை ஒலியின் வாயிலாகவும் உணர்த்து கின்றார். தகுதி வாய்ந்த சீடன் ஒருவருக்கும் குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையும், சீடனைத் தான் உயர்ந்த நிலையில் சர்வேஸ்வர னுடன் ஐக்கிய மாகும் நிலையை யும் உருவாக்குகின்றார். அறியாமை இருள் போக்கி ஞான ஒளியின் அறிவை அறிவால் உணரச் செய்து விடுகின்றார்.
— ஸ்ரீ ஈஸ்வர நீதி.

திரு.பாஸ்கரனும், அவருடைய நண்பர்கள் அனைவரும் தினமும் மாலையில் திரு.சிசுபாலன் கடையில் கூடுவார்கள். கடையின் பின்புறம் உள்ள அறையில் ஞானகுரு அவர்களின் உபதேசப்படி கலசம் அமைத்து பூஜித்து வந்தனர். எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். இது பக்தர்களின் நலன் கருதி அவர்களுக்காக நடைபெற்றது. தவிர தங்களின் ஆன்ம வளர்ச்சிக்காக தனித் தனியாகவும், கூட்டாக வும் தவம் அல்லது தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுவதென்றும் முடிவு செய்து, அப்படியே கடைப் பிடித்து வருவதோடு, சத்தியத்தின் சக்தி நிலை முதல் பாகம் புத்தகத்தைப் தினப்படி சில அத்தியாயங்களை, ஒருவர் படிக்க மற்றவர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டனர். படித்த பிறகு அதனைப் பற்றிய விஷயங்களை, அவரவர் களுக்குத் தெரிந்த அளவில் விளக்கத்தைத் கூறிக் கொள்வதும், ஆன்மிகம் பற்றிய விவாதங்களையும் நடத்தி வந்தனர். இப்படியாகவே தினமும் வேலைக்குச் சென்று திரும்பியதும் இதன்படி நாட்களும் சென்று கொண்டே இருந்தன. மனதில் அமைதியும், சாந்தியும் ஏற்படவில்லை. ஒரு இனிய மாலை வேளைப் பொழுதில், தியான நண்பர்களா கிய (பாஸ்கரன், சண்முகம், மனோகரன், கருப்புசாமி, சிசுபாலன்) ஆகியோர் கூடியிருந் தனர். “வணக்கம்” என்ற குரல் கேட்டது.

” எனது பெயர் நாகராஜன். நான் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வருகிறேன். நீங்கள் அனைவரும் சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி களின் பக்தர்கள் என்று கேள்விப் பட்டேன். உங்களைப் பார்க்க ஆவலாக வந்துள்ளேன். நானும் சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமிகளின் பக்தனும், சீடனுமாவேன்” என்று நமது சுவாமி அவர்கள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். இனி திரு.பாஸ்கரன் அவர்கள் மற்றும் தியான நண்பர்கள் நமது சுவாமியைப் பார்த்தனர். “வந்தவர் நல்ல வெண்மைநிற நிறத்தில் வேட்டியும், அரைக்கை கட்சர்ட்டும் அணிந்திருந்தார். சர்ட் பாக்கெட்டில் வித்தியாச மான டிசைன் போட்டிருந்தது. அளவான உயரமும், அடர்ந்த கருமையான தலைமுடி, பருமனான மீசை, மிகுந்த தேஜஸான உடல், மற்றும் ஒளி பொருந்திய கண்களில் அன்பும், கருணையும் தெரிந்தது. வசீகரமான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.” இப்படியாகத் திரு.பாஸ்கரன் அவர்கள் நமது சுவாமியின் தோற்றத்தை முதன் முதலில் பார்த்தபோது அறிந்ததை எழுதி யுள்ளார். நமது சுவாமிகள் அவர்களைப் பார்த்தவுடன் திரு. பாஸ்கரன் அவர்களுக்கு மனதில் மிகுந்த மகிழ்ச்சியும், அவருடன் ஏற்கனவே நீண்ட நாட்கள் பழகிக் கொண்டிருந்த மாதிரியான உணர்வு அவருக்குள் ஏற்பட்டதாக மனம் திறந்து கூறியிருக்கிறார். “இப்படியாகத் தான் அவருடன் முதல் அறிமுகம் ஆனது. அறிமுகம் என்று சொல்வதைவிட, அவரின் முதல் முதல் அற்புதமான தரிசனம் எனக்குக் கிட்டியது என்று சொல்லலாம். இது எனது பாக்கியம் ” என்று சொல்லி மனம் நெகிழ்ந்து போகின்றார்.

தவத்திரு. ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் சோமனூர் வரும்போது திரு.சிசுபாலன் கடையில் பின்புறமாக உள்ள பிரார்த்தனை அறையில் ஒன்று கூடுவார்கள். அந்த சமயத்தில் நமது சுவாமியை, “மாப்பிள்ளை சுவாமி” அல்லது “பொள்ளாச்சி மாப்பிள்ளை ” என்ற பெயர்க ளாலும் அழைத்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சுவாமி வரும் போதெல்லாம் அற்புதமான, அபூர்வமான ஆன்மிகப் பாடங்களைப் போதித்து வந்தார்கள். பின்பு சுவாமியுடன் அமர்ந்து தியானமும், கூட்டுப் பிரார்த்தனையும் செய்வார்கள். இது சில சமயங்களில் மாலையில் துவங்கி அடுத்தநாள் விடியற்காலை வரை நீடிக்கும்.
சுவாமி அவர்களின் பாட போதனைகள் அவர்களுக்கு ஆச்சரியமானதாகவும், உண்மையானதாகவும், சில சமயங்களில் வித்தியாசமான தாகவும் இருந்திருக்கின்றது. சுவாமிகளிடம் பல கேள்விகள் கேட்பார்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button