மிதக்கும் லிங்கம்.

0 195

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•07•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(15)மனிதனே புனிதன்-
மிதக்கும் லிங்கம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீரினுள் இருக்கும் சுயம்பு லிங்கத்தைக் காண ஆவலுடன் நீரினுள் பாய்ந்தவுடன் சுவாமி நெஞ்சில் அடிபட்டது அல்லவா? அது நீரின் மேற்பகுதியில் மிதந்து கொண்டிந்தது ஓர் சிவலிங்கம். அதன் மீது விழுந்து அடிபட்டதும் அடித்த வரை அழைத்தவர் கரங்களில் மிதக்கும் லிங்கம் அகப்பட்டது.

மிதந்த லிங்கத்தைப் பிடித்தபடி நீந்திக் கொண்டு இருந்தவர் அதனைக் கரைக்குக் கொண்டு வந்தார். அந்த லிங்கத்தின் மீது ஏதோ சித்திரங்கள் வடிவில் எழுத்துக்கள் தெரிந்தன. மனதினை மயக்கும் வண்ணம் கரும் பச்சை நிறத்தில் அது இருக்க ‘யார் இதனை ஆற்றில் போட்டார்களோ? என்னை அடித்தவனும் நீதானோ’ என்றொல்லாம் எண்ணியபடியே அதனைத் தூக்க முயல மிகுந்த கனமாக இருந்தது.

மீண்டும் நீரினுள் இட மிதந்தது. அதன் அபூர்வத் தன்மை மனதில் தெய்வீக சிந்தனையைத் தூண்ட, நீரினுள் இருந்தபடியே தோளில் வைத்துச் சுமந்தபடி வீட்டிற்கு வந்து தனது அறையில் வைத்துப் பார்த்த படியே இருந்தார். பாட்டி ஒன்றும் கூறவில்லை.

பேரனின் தவம் பலிக்க வேண்டும். அத்துடன் இல்லறத்தில் அவன் தர்மம் செய்பவனாக இருக்க வேண்டும். இந்த லிங்கத்தின் வரவு தனக்கும் புரியவில்லையே என்றும் நினைத்துப் பேரனிடம் மாற்றம் தெரிகிறது! அது நல்ல மாற்ற மாக இருக்க வேண்டிக் கொண்டார்.

ஆற்றில் இருந்து அன்றைய நாளில் வண்டிகளில் மணல் எடுத்து நகரத்தில் விற்பனை செய்வார்கள். ஊருக்குள் ஓரிடத்தில் சிறிது சிறிதாக மணலைச் சேகரித்து, வண்டி நிறையக் கொண்டு போவார்கள்.
கிராமப் பஞ்சாயத்து அதற்கு ரசீது கொடுத்து வரிவசூல் செய்யும்.

சுவாமிக்கு அந்த ஈர மணலில் கோயில் கட்டி விளையாட ரொம்பவும் பிடிக்கும். அன்றும் கோயில் கட்டி லிங்கம் பிடித்து உள்ளே வைக்கும் நேரத்தில், அழகான காளை மாடு ஒன்று நமது சுவாமியை நோக்கி மிகவும் வேகமாக ஓடி வந்தது.

மணலில் பிடித்த லிங்கத்தைக் கையில் வைத்தபடி ‘ஏ நந்தி என்ன இது?’ என்று சப்தமிடவும் சற்று நின்ற காளை மீண்டும் இவர் அருகே வரவும், பயந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். உடல் நடுங்கினாலும் மணல் லிங்கத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாசலில் போட்டார். அதனுள் இருந்து பளீரென ஒளி வீசிய படி அபூர்வமான ஒரு கல் உருண்டோடியது.

அதனை எடுத்து தனது தகரப் பெட்டியில் உள்ள பொருட்களுடன் போட்டவர், தனிமை பூஜைக்குப் பயன்படுத்தி வந்தார்.மின்சார வசதி கிராமத்திற்கு வராத காலம்.தகப்பனார் கடைக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு இருக்கும். நல்ல ஒளி சூடாக வெளிப்படும்.

வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் வட இந்திய வியாபாரிகள் கிராமத்தில் உள்ள புளியந்தோப்பில் கூடாரம் அமைத்துத் தங்கி இருந்து வியாபாரம் செய்து வந்தார்கள். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தகப்பனாரிடத்தில் அனுபவங்கள் பற்றி பிரமாதமாகப் பேசுவார்கள்.சன்னியாசிகளும் வந்து சாப்பிடுவது வழக்கம்.

இரவு எட்டு மணி சமயம் சுவாமி தியானத்தில் இருந்து வெளியே வந்தவர் கைகளில், சுடரும் பொருளைப் பார்த்ததும் தகப்பனார் வாங்கிக் கொண்டார். சன்னியாசியும், வட இந்திய வியாபாரியும் அதனை வாங்கிப் பார்த்தனர். வாசனை திரவ வியாபாரி கைக்குட்டையால் மடித்து தனது ஜிப்பா பையினுள் போட்டுக் கொண்டார்.

‘வீட்டில் இதனை வைத்திருந்தால் ஆபத்து வரும். இதற்கு பதிலாக நீலக்கல் விலை அதிகம் உள்ளது தருகிறேன். வருமானம் ரொம்ப வரும்’ என்று நீலக்கல் ஒன்றைத்தர தகப்பனார் பெற்றுக்கொண்டார். சுவாமி அவர்கள் அது பூஜைக்கு உரிய பொருள் தந்து விடுங்கள் என்று சொல்வதைக் கேட்பார் யாருமில்லை! மறுநாளே வியாபாரிகள் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள்.

அதே வாரத்தில் பாட்டியின் கனவில் ‘சிவலிங்கம் உரிய இடம் சேர, வந்து கேட்பவனிடம் தந்து விடவும்’ என்று யார் கூறினார்களோ அதன்படியே தேஜஸ் மிகுந்த, சன்னியாசம் பெற்ற வயோதிக பிராமணர் ஒருவர் வந்து வாங்கிப் போனார்.

சுவாமி மனதில் இந்த இரண்டு சம்பவங்களும் பற்றி மதுரைக்கு வந்த போது நாகமலை ஊற்றுக்கு தியானம் செய்யப் போன போது கேட்டேன். ஒரே வரியில் பதில் சொன்னார். “கொடுப்பதற்க்கென்றே பிறந்து விட்டோம்” என்று சந்தோஷமாகக் கூறினார்கள்.

எனக்குள் தோன்றியது ‘இப்படியும் இருக்குமா? அல்லது இப்படித்தான் இருக்க வேண்டுமா?’- என்பதுதான்.

இதற்கு விடை ‘உன்னை சர்பம் தீண்ட இன்று வரப்போகிறது, எப்படி என்று பார்க்க வந்திருக்கிறேன்’ என்ற படி வீட்டினுள் வந்து என்னை தனதருகில் அமரச் சொல்லிய பின்பு நடந்த நிகழ்ச்சியை மறக்கவே மாட்டேன். விடையை சொல்லாமல் புரிய வைத்தார். அதற்கு நன்றி கூறியபடியே இருக்கிறேன்.

இனி நாகதேவதை பற்றி சுவாமி அவர்களின் அனுபவப் பாடத்தைக் கூறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button