ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
29•01•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(213) மனிதனே புனிதன் —
மார்பில் இருந்து செங்கல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த தினத்தில் தீயசக்தி சுப்பிரமணியத்தைப் பீடித்ததோ அன்று முதல் மில் வேலைக்குச் செல்லமுடியாமல் போனது. குடும்ப வருவாய் நின்று போனது. வாலிப உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் உருமாறி விட்டது. சொந்த பந்தங்கள், நண்பர்கள், சாப்பிட உதவி செய்தனர். ஒரு மாத காலத்திற்குப் பிறகு பேசக்கூடிய நிலைமை அவனுக்குத் திரும்பியது. அதன்பிறகு கொஞ்சமாக உணவு உண்பதும், மாந்திரீக ஜெபம் செய்வதுமாக சுப்பிரமணியம் விளங்கினான். ஏதாவது மாந்திரீக பூஜைகளை அவன் செய்யும் போது எலும்புக்கூடு ஒன்று நடமாடுவது போலவும், பூஜையில் ஈடுபடுவது போலவும்தான் இருந்தது.
மனிதன் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், அது பூஜையோ, யோகமோ, அல்லது தியானமோ உள்ளன்புடன் அதனைப் பெரியதாக மதித்துச் செயல்பட்டால் தான், அந்த நம்பிக்கையும் தேடிய பலனைத் தரும். நமது உடலில் உயிராத்மா இருக்கின்றது, நம்மால் அதனைப் பார்க்க முடியா விட்டாலும் கூட, நமது உயிராத்மாவை எத்துனை பெரியதாக மதித்து நாம் நடக்கின்றோம். அதற்குரிய பலன்களை நாம் பெறுகின்றோம் அல்லவா? காணாதவற்றை நமது செயல்களால் அதனை உணர்ந்து கொள்கின்றோம். நன்மையோ, தீமையோ எதனைக்கருதி நாம் செய்கின்றோமோ, அதே நம்பிக்கையுடன் கூடிய செயலில் அனுபவ உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். பலன்களையும் பெறலாம்!
சுப்பிரமணியத்தை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனக் குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்தனர். இப்போதெல்லாம் சுப்பிரமணி காகிதமும், பேனாவும் கையில் வைத்திருப்பது வழக்கமாக்கிக் கொண்டான். அவனைக் குணப்படுத்த யார் வந்தாலும், தன்னிடம் வைத்திருக்கும் நோட்டுப்புத்தகத்தில், வருபவர் பெயர், விலாசம் எல்லாவற்றையும் எழுதி, “உன்னால் என்னைக் குணப்படுத்த முடியாது,சென்று விடு” என வாக்கியம் முடிந்திருக்கும். குணப்படுத்த வந்த நபர் பயத்துடன் சென்று விடுவார். பெரிய மாந்திரீகர்கள் எனப் பெயர் பெற்றவர்கள் வந்து ஆர்ப்பாட்டமாக, அமர்க்களமாகப் பூஜைகள் செய்வார்கள். அமைதியாக அதனைப் பார்த்துக் கொண்டு சுப்பிரமணி இருப்பான். அப்போது வீட்டின் உத்திரத்தில் தந்தி முறை போன்று தட்டுகின்ற சப்தம் கேட்கும். அந்த சப்தத்தைக் கேட்டு நோட்டுப் புத்தகத்தில் எழுதத் துவங்கி விடுவான். அதை அந்தப் பெரிய மந்திரவாதியிடம் காட்டுவான். “உனது பூஜையில், மந்திரத்தில் பிழையிருக்கின்றது.
நீ யோர் கத்துக்குட்டி! ஓடிப்போ” என எழுதி இருக்கும். அதையும் மீறி வந்த மந்திரவாதி ஆரவாரம் செய்தானென்றால், சுப்பிரமணியின் மார்பு இரண்டாக விரியும். உள்ளே இருந்து செங்கற்கள் அந்த மந்திரவாதி மீது படபடவென்று வந்து விழும்.அவ்வளவுதான் மாந்திரீகன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியே போய் விடுவார். இப்படியே ஒருவருட காலம் சென்று விட்டது. அநேக மாந்திரீகர்கள் முயன்று தோற்றுப் போனார்கள். செங்கற்களால் பலமாக அடிபட்டும் சென்றார்கள். கடைசியாக நமது நாயனா அவர்கள் கிராமத்து பூஜாரி ஒருவரை அழைத்து வந்தார். பூஜாரியைப்பற்றி எழுதி வைத்து இருந்ததோடல்லாமல், இன்னொன்றும் நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது! அது..
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.