மாந்திரீகமும் – தாந்திரீகமும்.

0 241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•07•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(22) மனிதனே புனிதன் —
மாந்திரீகமும் – தாந்திரீகமும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மந்திர ஒலிகளுக்குக் கட்டுப்பட்டு காரியங்களைச் செய்து தரும் தேவதைகளைப் பற்றிக் கூறவேண்டும் என்று சுவாமிகளிடம் எனது மகன் அருணேஸ்வரராய் கேட்டார்.

நானும் அவரும் பொள்ளாச்சி சென்ற சமயம் இக் கேள்வி கேட்கப்பட்டது.

உடனே சுவாமி மெளனமாகி விட்டார். அருண் புன்சிரிப்புடன் இளைஞனுக்கே உண்டான கெத்துடனும் இருந்தவன் என்னையும் பார்த்து அருண் சிரித்தார்.

நானும் ஏடாகூடமாகக் கேட்டு விட்டாரோ? என்னவோ ஏதோ என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.

சுவாமி மெதுவாகக் கண்களைத் திறந்து அருணைப் பார்த்து நிறைய சிந்திக்கிறாய் நன்றி எனக் கூறிவிட்டு அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் நீண்ட பெருமூச்சை விட்டார். சர்ப மூச்சுப் பயிற்சி என்பது பிறகு தெரிந்து கொண்டேன்.

சுவாமியின் வரலாறு படிக்கும் போது அநேகக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லி இருப்பதை ஊன்றி கவனித்தால் தெரியவரும்.

தனது வாழ்வையே அர்பணித்து விட்டுக் காசு, பணம் என்று அலையாமல் உலக மக்கள் நலம் வாழப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் இறைவன் நேசர்களுள் அவரும் ஒருவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில் மனிதனின் மனதினுள் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி விடும். சுவாமியின் பாடங்களில் அதுவும் ஒன்றுதான். எப்படி?

சந்திரன் சக்தி நமது உடலில் குறைந்து விட்டால் பிறரை கேலி செய்யும் குணம் மிகுந்து விடும். அதனால் தோஷம் மிகும்.

கேலியும், கிண்டலும், அவதூறான செய்கைகளும் அந்த நேரத்தில் பொழுது போக உதவும். இதன் பலன் பின்பு நமது காரியத்தில் தடை செய்யும் யோகத்தைத் தந்து விடும்.

இது கணபதி சித்தரின் பரிகாரம் பாடம் படித்த நமது சுவாமி கூறியுள்ளார். அதனை சந்நியாசி சாப நிவிர்த்தியில் கற்றுக் கொள்ளலாம்.

சுவாமியின் வரலாறு கூறும் முன்பு அருண் அவர்கள் கேட்ட வினாவிற்கு சுவாமியின் பதில் தெரிந்து கொள்வோம்.

ஒலி ஒளித் தன்மையில் இதன் சக்தி மாறிமாறி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மாந்திரீகச் சொற்களுக்கு வலிமையை அன்றே ஏற்படுத்தி விட்டார்கள். அதைத்தான் இன்று வரையிலும் பயன்பாட்டிற்கு வைத்துத் தான்வாழப் பொருள் பெறும் நிலைக்கே செயலாகிறது.

மந்திரத்தைத் தாந்திரிக வழியில் உயிர் கொடுக்க அனாதைகளாக இருக்கும் சிறிய ஆண், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களும், வயோதிகர்களும் உபயோகப் படுவார்கள்.

தத்தெடுக்கப்ப்ட அவர்கள் தனி இடங்களில் தங்க வைக்கப்பட்டு தேவைகள் அனைத்தையும் செய்து தருவார்கள்.

ஆடைகள், ஆபரணங்கள், விதம் விதமான உணவுகளை வைத்து, பிரியம் உள்ளதை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள்.

பிறகு ஒவ்வொரு குழந்தையும் விரும்பும் உணவு, வண்ண உடை, இவைகளைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரித்து வைப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி மந்திரத்தையும் அதனை அழகாக உச்சரிக்கும் முறையைப் போதிப்பார்கள்.

உண்டு, உடுத்து சந்தோஷமான மனநிலையில் மந்திரம் ஜெபித்து வர உதவி செய்வார்கள். ஆனால் அவர்கள் பிரியப்பட்ட உணவுகள், உடைகள், ஒரே மந்திரத்தை விடாமல் ஓதிக்கொண்டே இருப்பது மட்டுமே நடை பெறும்.
இக்கால கட்டங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்க விடாமல், ஏகாந்தமாக தனி இடங்கள் கொடுக்கப்படும்.

அவர்கள் பம்பை, உடுக்கை, உருமிமேளங்கள் என அடித்து ஒலி எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ச் செய்து வருவார்கள்.

தனிமையில் இருக்கும் குழந்தைகள் உணவு உண்ணும் போது சிறிது சிறிதாக போதை வஸத்துக்களைக் கலந்து உண்ணச் செய்து, அந்நிலையில் மந்திரத்தை ஓதிக்கொண்டே குதித்து ஆட விடுவார்கள். வாத்திய இசையும் ஆட்டத்திற்கு ஒப்ப ஒலித்துக் சுருதி கூட்டும்.

தொடர்ந்து இப்படியே பழக்கப் படுத்தப்பட்ட குழந்தைகள் நிலை எப்படி இருக்கும்? அது சந்தோஷ போதையில் இருக்கும்!

பழக்கப்படுத்திப் பக்குவம் பெற்றவர்களை நெருப்பு குண்டத்தில் முன்பு அமரச் செய்து மந்திரம் ஜெபிக்கச் செய்வர்.

இந்நிலையில் மந்திரம் ஒரு போதையைத் தருவதாக எண்ணச் செய்து அதிலேயே லயிக்கச் செய்யும் சூழல் இயல்பாகவே உருவாக்கப் பட்டது போல் செய்து விடுவார்கள்.

அடுத்ததாக உச்சகட்ட நிகழ்வுகள் நடக்கும். அதையும் எழுதுகிறேன்.

சுவாமி எதையுமே தான் சொல்வதாகக் கூற மாட்டார். சொல்லி இருக்கிறார்கள் என்று தான் கூறுவார். எல்லாம் நம்பத்தக்க உண்மையாக இருக்கும்.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button