ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
30•10•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(113) மனிதனே புனிதன் —
மர்மத்துறவியின் அழைப்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மும்பையில் இருந்த பொழுது தமிழ்நாட்டில் புயல் மழை என்ற தகவல் வந்தது. பயணிகளில் கொஞ்சம் பேர் இதனைக் கேட்டதும் ஊர் திரும்பி விடலாம் என்று கருத்து தெரிவித்தனர். அங்கு பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்து, வாங்க வேண்டியது எல்லா வற்றையும் வாங்கிக் கொண்டனர். மகாலக்ஷ்மி கோயில், கடலுக்குள் இருக்கும் ஆலயம், எலிபெண்டா தீவு இன்னும் இரவு விடுதிகள் எல்லாம் பயணிகள் சென்று வந்தனர். இரவு நேரத்தில் ஆடம்பரமாகச் சென்று வந்தனர். நமது சுவாமி மற்றும் ஆனைமலை சாமியார் இருவரும் அறையில் பொருட்களுக்காகக் காவல் இருந்தனர். “எங்கள் குரல் அல்லாமல் வேறு யார் வந்து கூப்பிட்டாலும், கதவைத் திறக்கக் கூடாது” என்று உத்தரவிட்டுச் சென்றனர். பேருந்தில் இடம் இருக்கும் அளவிற்கும்மேல் பொருட்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக எல்லாவற்றையும்!
திரும்பும் வழி ஆந்திர மாநிலம் வழியாக என்று பாலு முடிவு செய்தார். ஏனோ சிலர் சோர்வாகக் காணப்பட்டனர். சிலர் உடல் நலிவுற்று அயர்ந்து ஆயாசப் பட்டனர். வேறு சிலர் உடம்பில் துர்நாற்றம் வீசத் துவங்கி இருந்தது. அவர்களின் உடல்நிலை குறித்து அன்புடன் விசாரித்தார் சுவாமி. “புனிதமான உங்கள் கரங்களால் எங்களைத் தொட்டு உங்களை மாசுபடுத்திக் கொள்ளாதீர்கள் ” என்று அன்புக் கட்டளை இட்டனர். ஆனாலும் சுவாமி தனது கடமையைச் செய்தார். எல்லோருடைய மனதிலும் சுவாமி இடம் பிடித்து விட்டார்.
எல்லோரா அதிசயமானது !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாள் முழுவதும் எல்லோரா குகையில் இருந்த போது நிம்மதி பிறப்பதையும், சகதியின் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் சுவாமியால் நன்றாக உணரமுடிந்தது. மனதின் இயக்கத்தில் திடீரென வேறுபாடு ஏற்படுவதையும், அது ஒழுங்காக இயக்கம் பெறுவதையும், பிராணசக்தி ஆன்மிக ஒளியைப் பிரகசிக்கச் செய்வதையும், அவ்வான்ம ஒளியானது இறையருளைப் பெறவே வழி காட்டி வந்திருக்கிறது என்பதையும் உணரச் செய்தது.
செய்யத் தூண்டுவதும், செயல் பட வைப்பதும் ஆத்மாண்டவனே என்ற உண்மையையும்உறுதி செய்தது. மனிதனுள் ஆன்மாவாக விளங்கிக் கொண்டிருப்பது எதுவோ? அதுவே, இறைவன்.
சாமியாரும் நமது சுவாமியிடம் , சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதன் அபிஷேகநீர் பூமியில் மறைவாகச் செல்லும் இடத்தில் நின்று, “தனிமையில் தியானம் இருப்போம்” என்று கூறியபடியே சென்று விட்டார். சுவாமியும், மலையில் உற்பத்தி ஆன நீர் அருவியாகக் குகைமீது அழகாக விழும் இடம் வரையில் நடை பாதையில் சென்று கொண்டிருந்தார். புத்தன் என்று பெயர் பெற்ற அநேகர் உருவச் சிலைகள் குகைக்குள் இருக்கும் கர்பகிரகத்தினுள் பிரமாண்டமாகவும், சில சிறியவையாகவும் அமைக்கப்பட்டு இருந்தன. சில அறைகளில் விக்கிரகங்கள் இல்லாத இடத்தில் அமானுஷ்யமான குளிர்ச்சி உண்டாவதை உணர்ந்து கொண்டார். ‘சரி, அவர்கள் இருக்கின்றார்கள்’ என்று முதலில் முடிவு செய்து கொண்டார்.
அருவி விழும் இடத்தில் காற்றின் வேகத்தால் சாரல் சுவாமி மீது விழவும், அதனால் உண்டான குளிர்ச்சிக்கும் அந்த அறைக்குள் அமானுஷ்யக் குளிர்ச்சிக்கும் வித்தியாசம் நன்றாகச் சுவாமிக்குத் தெரிந்தது. அந்த சமயத்தில் கிளீனர் சேட்டு சுவாமியைக் கடந்து போனவர் தானாகப் பேசியபடியே போனார். அது, “எதுக்காகடா இம்புட்டுப் பெருசு பெருசாக் கட்டியிருக்கானுக! என்ன காரணத்துக்காகடா இப்படியெல்லாம் பண்ணியிருக்கீங்க? ஒண்ணும் புரியலையே! ஏதாவது கல்வெட்டில் பதிஞ்சு வெச்சா என்னவாம்? என்ன மாதிரி ஆளுக்கு யாரப்பா புரிய வப்பாங்க? ” என்று சேட்டு பேசிய பேச்சில் ஏதோ இருப்பதாகவே சுவாமிக்குப் பட்டது.
துறவி போன்ற ஒருவர் ஒரு அறைக்குள் இருந்தார். அவரைச் சேட்டும் பார்த்தார். அவர் சுவாமியைப் பார்த்து சைகையால் அழைத்தார். சேட்டு தன்னைத்தான் அழைப்பதாக நினைத்துக் கொண்டு, “அடபோங்கப்பா! எங்க போனாலும் வரச் சொல்லிப் பணங்காசு கேக்கறது. காசு போடாட்டா, விரல் நகத்த வச்சுக் கையில, கழுத்துல கீறிக்காயம் வேறு பண்றது. ஏற்கனவே எங்கையப் ‘பண்டா’ ஒருத்தன் கிழுச்சுட்டான். இனி ,நீ வேற ஒருத்தன. நாம்போறேன்” என்று சொல்லி கன்னத்தில் குழி விழும்படி சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.
இதே சேட்டுதான் ‘ஹளபேடு’ மதில் சுவர் நடைபாதைத் திண்ணையில் செதுக்கப்பட்டு இருந்த வாழ்க்கைச் சூத்திரச் சிலைகளைப் பார்த்து விட்டு, “அடங்கொப்பா! இத வேற செதுக்கி வச்சா , எம்மனசும் கெடுதே!” என்று பாடியே ஆதங்கப்பட்டவர். எல்லோரும் வேறு இடங்களைப் பார்க்கப் போன பிறகு சுவாமியை மீண்டும் சைகையால் அழைத்துவிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.