மரணத்தில் விடுதலை.

238

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•12•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(166) மனிதனே புனிதன் —
மரணத்தில் விடுதலை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எங்கும் நிறைந்துள்ளதும், என்றென்றும் நிலையாக உள்ளதும், அழிவற்ற தன்மையை உடையதுமான, பிரம்மம் எனப்படும் பரம்பொருள் மனிதனுள் அவனது வினைகளுக்கு ஏற்ப ஆத்மாவாகப் பரிமளிக்கிறது. தனது ஆத்மாவை தானே படைத்துக் கொள்ளும் ஆற்றல் அதுவே இறைசக்தியின் ஆற்றல். உணர்வு, மனம், உயிர், அறிவு, மண், நீர், காற்று, வெளி, ஒளி, இருள், ஆசை, அமைதி, கோபம், அன்பு, புண்ணியம், பாவம், நன்மை, தீமை, நெருங்கிய பொருள், தூரத்துப் பொருள் என்பவைகளால் மனிதன் வினைகளுக்கு ஏற்ப தன்னை ஆத்மாவாகப் படைத்துக் கொள்கிறது. ஆத்மாவே இறைவனது சக்தி என நமது ஞானியர்கள் கூறியவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நன்மை, தீமை செயல்களால் ஏற்படும் வினைகள் அனைத்திற்கும் அடிப்படை ஆசையே.

செயல்களைச் கொண்டும், அறிவைப் கொண்டும் வாழ்பவர்கள் இருளில் வீழ்கின்றனர் என்றும், இன்பமே இல்லாத காரிருள் சூழ்ந்த உலகங்களுக்கு அவர்கள் மரணத்தின் பின் சென்று விடுகின்றனர் என்றும் கூறிய ஞானியர்கள், நம்முள் உள்ள ஆத்மாவே பரம்பொருளின் அம்சம் எனத்தெரிந்து (கண்டு) கொண்டு, தனது ஒளியினில் விழிப்புணர்வு கொள்பவன் எவனோ, அவனே படைப்பின் ஆற்றலுக்கு உண்டானவன் ஆகின்றான். எல்லா உயிர்களிடமும் உள்ள ஆத்மா அவனுக்கே உரியதாகிறது. ஏன்? இவ்வுலகம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள சகல உலகங்களும் அவனே ஆகிவிடுகின்றான்.

ஆகவே, மனிதன் தன்னுள்ளே இருக்கும், இனியும் தன்னுள்ளே தொடர்ந்து இருக்கப்போகும், ஆத்மாண்டவனை அறிந்து கொண்டால், இந்தப் பிறவியிலேயே தன்னுள் ஞானஜோதியைக் கண்டு என்றும் அழியாத ஆனந்தப் பெரு நிலையை அடைந்து மகேஸ்வரனாக, ஆனந்த மகேஸ்வரனாகவே ஆகிவிடலாம். ஞான ஒளியினைக் காணாது, அறியாமை இருளில் மூழ்கியவர்கள், நீங்காத துயரில் , துக்கத்தில் என்றும் கிடந்து வாழ்பவர்களாயினர்.

தன்னுள் ஆத்மஜோதியை அறிந்து கொள்பவன் காலடியில் காலச் சக்கரம் என்றுமே சுழன்று கொண்டிருக்கும். அந்த ஒளியாத்மனைத்தான் தேவாதி தேவர்களும் போற்றி வணங்குவர். தன்நிலை உணர்ந்து தன்னையே உயர்த்திக் கொண்டிடும் பக்குவத்தைப் பெறவே ஆன்மிக வழிவகைகள் ஞானியர்களால் உணர்த்தப்பட்டன! மலைக்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், திருவண்ணாமலை கிரிவலம் வருதலும், வெள்ளிங்கிரி மலையின் மேல் நீண்ட பயணம் போவதும் ஆன்மிக உண்மையை உள்ளபடி அறிந்து, கடைப்பிடித்து உயர்நிலை பெறவும்தான். வாழ்க்கையின் பாதையில் அதன் பயணத்தில் மனிதன் எப்படி நடந்து கொண்டு செயல்படுகின்றானோ அப்படியே அவன் ஆகின்றான்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button