மனித மனம் ஆவேசம்!

198

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•10•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(98) மனிதனே புனிதன் –
மனித மனம் ஆவேசம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்களின் இந்தப் பயணத்தில் அவர் தங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அன்புடன் பழகிப் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியதால், மெளனமாகி விடுவார். பொள்ளாச்சிப்பகுதி ஆனைமலையைச் சேர்ந்த சாமியார் ஒருவர், ஆன்மிகத்தில் சம்பந்தமாகப்பல அரிய தகவல்களைப் பயண நேரத்தில் மட்டும் பகிர்ந்து கொண்டார். அருவியின் நீரை எதிர்த்துச் செல்லும் பந்து பற்றியும், ஆயிரங்கால் மண்டபம் பற்றியும் சொல்லியபடியே வந்ததால் கவனமாகக் கேட்டுக் கொண்டார். சற்குரு நாதர் பற்றி அறிந்து கொள்ள அவர் விரும்பினார்.

“பண்பு எனப்படும் சக்திக்குள் இருந்து வெளிப்படும் சகல குணநலன்களும் மிகுத்த படைப்பின் சக்தியாகிய இறையருளே ! எங்களுக்குள் ஆரோக்கியத்தையும், வலிமையையும் தந்து, எங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் இறைவா உமக்கு ஆயிரம் கோடி நன்றிகள்! எமது இதயத்தில் குடியிருந்து ஆற்றல் சக்தியை வெளிப்படுத்தி, உம்மால் எம்மை உயர்த்தும் இறைவா உமக்குக் கோடானுகோடி நன்றி கள் ஆண்டவரே!” இப்படியாகப் பிரார்த்தனை செய்தபடியே பயணித்தார் சுவாமி.

இத்தகைய பிரயாணங்கள் எல்லோர் வாழ்விலும் நடைபெறும். அதில் நாம் நமக்குப் பொழுது போக்கு அம்சங்களை மட்டுமே கருத்தில் கொள்வோம். நமது சுவாமி தமது அனுபவங்களை மனம்விட்டுச் சொல்லாமல் இருந்தால் நமக்குத் தெரிய வருவது ஒன்றுமில்லை. ஆனால் அவர் தமது குருநாதர் உத்தரவின்படியே எல்லா இடங்களிலும் நடந்து கொண்டார். அதன்படியே சில சக்தியின் ஆற்றல்கள் பெற்றுக் கொண்டார் என்றால் மிகையாகாது. ஆனால் யாரிடம் இருந்து என்ன பெற்றுக் கொண்டார்? எப்படி? எந்த வகையில் பெற்றார்? அதனால் என்ன பலன்கள்? அவர்கள் யார்? என்பதெல்லாம் புதிராகவே எனது மனதிற்குப் படுகிறது. எங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டால் கிடைக்குமா? என்ற எனது கேள்விக்கு சுவாமி அவர்கள், “எல்லாம் அப்போது இருக்கின்ற மனநிலையைப் பொறுத்த விஷயங்கள் தான்” என்று சுருக்கமாகச் கூறினார்.

சற்று விளங்கமாச் சொல்லுங்கள் என்றதற்கு சுவாமி இரண்டு வித அமானுஷ்ய அனுபவங்கள் பெற்றதாகக் கூறினார். ஒன்று எலிபெண்டா தீவில் தன்னுடன் வந்தவர்கள் எல்லாம் படகில் புறப்பட்டுச் செல்லும் வரை அங்கேயே தன்னை ஓரிடத்தில் இருத்தி வைத்திருந்ததாகவும், கடைசியில் ஒரு பழைய படகில் ஏற்றி ஜலநீரோட்டத்தினுள் இழுத்துப் போனதாகவும் கூறினார். ‘பல இடங்களில் எரிமலையைப் பொங்க வைத்து அழித்து விடப்போவதாகவும்,’ ‘கிரீன்லாந்தின் அருகே உள்ள நீரோட்டத்தில் போகநாதர் எழுதிய இயந்திர சாதனங்களை கடலுக்குள் மறைத்து வைத்து உள்ளதாகவும்,’ “சம்பந்தா சம்பந்தமின்றிக் கருத்துக்களைக் கூற வருவது போல் தோன்றினாலும், உண்மைகள் அதில் இல்லாமலில்லை! அது காலமாற்றத்தைக் குறிக்கிறது. போகநாதர் எழுதியுள்ள ரகசியக் குறிப்புகள் உள்ள செப்பேடு! 2020 -ம் ஆண்டுக்குள் அதிகமான நில அதிர்வுகளும் தோன்றும் ” எனக் கூறினார். அவர்களை பற்றிக் கருத்துக்கூற மறுத்து விட்டார்.

மற்றும் ஒன்று ‘எல்லோரா குகைக் கோயில்’ செல்வதற்கு முன்பே ஆரம்பித்து விட்டதாம்! இரவு நேரப் பயணத்தில் ஒரு சோதனைச்சாவடியில் கையில் துப்பாக்கியுடன் ஒருவர் பேருந்தில் ஏறினார். தான் ஒரு காவலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வழியில் வழிமறிக்கும் கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து எல்லோரையும் காப்பாற்ற வந்ததாகவும் சொல்லி பேருந்தில் ஏறிக் கொண்டார். ஆனால் காவலர் உடையில் அவரில்லை!

எல்லோரா வந்ததும் அவர் ஓர் குறிப்பிட்ட இடம் நோக்கிச் செல்வதை சுவாமி கண்டார்.சுவாமி சிறிது தூரம் அவர் பின்னால் சென்றிருக்கிறார். நல்ல உயர்ந்த ஆகிருதியான உடல்வாகு உடைய அவர் தலைப்பாகையில் இருந்து தொங்கிய சிறு துணியால் முகத்தை மறைத்திருந்தார். பெரிய பாறையின் பின்புறம் சென்று தலைப்பாகையை நீக்கினார். சுவாமி அதிர்ந்து போனார். பள்ளி வயதில் நீரினுள் கண்ட மனிதனுக்கும் இவருக்கும் அதிக வேற்றுமை உள்ளதாகவும், குகைக்குள் இருந்து அருவி வீழ்ந்து கொண்டிருக்கும் இடத்தினைக் காட்டி ஏதேதோ கூறினாராம். அவர் பேசிய பாக்ஷையில் அநேக சமஸ்கிருத சொற்கள் இருந்ததாம். அவரிடம் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனித்திருக்கின்றார். சில சொற்கள் பேசியதும் கைவிரல்களால் முத்திரைகள் பிடித்துக் காட்ட அது நடனமாது அபிநயம் செய்வது போல் இருக்க, மயக்கம் ஏற்படுவது போன்ற நிலை உண்டாகி உள்ளது.

அதற்குள் ரத்தினம் லாரி புரோக்கர் அலுவலக உரிமையாளரின் தம்பி பாலு வந்து விடவே படி மீது வேகமாகச் சென்று குகைகள் இருக்கும் நீளப்பாதையில் அவர் செல்வதைக் கண்டார். “இங்க தனியா நின்று என்ன பாக்கறீங்க?” என்ற பாலுவின் குரல் சுவாமிக்கு நினைவின் மீட்பைத் தந்தது!

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button