ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
27•12•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(180) மனிதனே புனிதன் —
மனிதனோ, மாயவனோ?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தன் கண்முன் நடந்து கொண்டிருக்கும் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நடராஜா சுவாமிக்கு, உடன் வந்த நண்பர் “சுவாமி, சுவாமி “எனப் பலமாக சப்தம் கொடுத்ததும் சற்குருநாதர் இவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவரைப் பார்த்த திரு.நடராஜா சுவாமி கையை உயர்த்திக் “குருநாதா குருநாதா ஸ்ரீ ஈஸ்வர பட் குருநாதா” எனத் தாய் முகம் கண்ட குழந்தை போல்ப் பரவசமானார். கண்முன் இன்னும் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சமாது இரண்டாகப் பிளந்து சற்குருநாதரை உள்வாங்கிக் கொண்டு இருந்தது. கையை உயர்த்தி ஆசீர்வாதம் தந்தபடியே “சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி” சமாதியின் உள்ளே சென்று
கொண்டிருந்தார்.
திரு.நடராஜா சுவாமி கைகளை நீட்டியபடியே “சுவாமி நில்லுங்கள் சுவாமி. மீண்டும் சமாதுக்குள் போகாதீர்கள் சுவாமி ” என்று குரல் கொடுத்தபடியே அவரை நோக்கி ஓடினார். அதற்குள் புன்முறுவல் சிந்தியபடியே வலது கையை உயர்த்தி ஆசீர்வாதம் தந்தபடி, “கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஈஸ்வரர்” மறைந்து போனார். வாய் பிளந்து அவரை விழுங்கிய சமாது அமைதியாய் இருந்தது. சமாது மண்மீது திரு.நடராஜா சுவாமி ஆற்றமுடியாது புரண்டு தேம்பி அழுதார். குரு சிஷ்யன் மனோபாவனை எப்படி இருக்கும் என்று அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். மனதை பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியில், தவத்திரு. நடராஜா சுவாமியின் குழந்தை போன்ற மனது என்னபாடு பட்டிருக்கும் என்பதை தாய்மை உள்ளத்துடன் பார்ப்பவர்களுக்கே அது புரியும்.
சிலர் தவறுதலாக ஸ்ரீ ஈஸ்வர பட்டர் என்ற சித்தர், ஐவர் மலையில் தான் ஜீவசமாதி அடைந்தார் என்று, தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றார்கள். உடன் இருந்து உண்மையை உணர்ந்து அனுபவித்த பலர் இன்னும் இருக்கின்றார்கள். அறியாத மக்களை ஏமாற்ற முடியும். அறிந்தவர்கள் என்றுமே ஏமாற மாட்டார்கள்! இன்று பழனியில் இடும்பன் மலையின் அடிவாரத்தில், எழில்மிகு தோற்றத்துடன் எங்களின் சற்குருநாதர ஸ்ரீ ஈஸ்வர பட் ஆண்டவரின் சமாது ஆஸ்ரமம் துலங்கிக் கொண்டிருக்கின்றது. தவத்திரு. நடராஜா சுவாமியின் மகன் “குட்டி ஈஸ்வரபட்” என்பவர் நல்லபடியாக வழிநடத்திச் கொண்டு இருக்கின்றார். தனது குருநாதரின் ஞாபகார்த்தமாக தமது மகனுக்கு அப்பெயரினைச் சூட்டி இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நமது தவத்திரு.
நாகராஜா சுவாமியின் மீது தனது தந்தையைப் போலவே தனயனும், அன்பு பாராட்டி வருவது அவரின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. உண்மையான சமாது பழனியில் என இடத்தினை அறிந்து கொண்ட பக்தர்கள், சென்று தரிசித்து சற்குருநாதரின் அருளுக்குப் பாத்திரமாகி வரலாம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.