ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
02•07•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(367) மனிதனே புனிதன் —
மனிதனும் தெய்வமாகலாம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் தமது ஆத்மார்த்தமான சீடர் நமது நாகராஜன் சுவாமி அவர்களிடம், வேதத்தில் இறை சக்தி கூறி யுள்ள உண்மைகளை, ஐவர் மலையில் தாமரைக் குளத்தின் அருகே அமர்ந்து உபதேசித்துக் கொண்டிருந்தார். அநேக சித்தர் பெரு மக்கள் ஸ்ரீ ஈஸ்வர குரு நாதரிடம் தொடர்பு கொண்டிருந் தனர். நமது நாகராஜன் சுவாமி அவர்களுக்கும் சித்தர்களுடனும், தெய்வங்களுடனும் தொடர்பு கொள்ளும் ரசிய வித்தைகளைப் போதிக்கும் இடத்தையும் தேர்வு செய்திருந்தார். அதனைப் பற்றி பவானியில் நமது சுவாமி வசித்து வந்தபோது, குருநாதர் தந்த பாடங்களையும் அதனு டைய உண்மை செய்திகளை யும் அறிந்து கொள்ளலாம். நமது சுவாமியின் வாழ்வை நெறிப் படுத்த வந்த சற்குருநாதர், காலத்தால் அழியாமல் என்றும் சிரஞ்சீவியாக நாகவனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹனுமனின் பரிகார ஸ்தலத்தை வெளி வரச் செய்த பெருமை சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரபட் சுவாமி அவர்களை யே சேரும். தெய்வசிந்தனை யுடன் இருப்பதும், ஆக்கபூர்வ மான செயல்களில் ஈடுபடுவதும்,
வாழ்க்கையை உணர்ந்து வாழ்வதும், மனதில் என்றும் ஆனந்தத்தை அனுபவிப்பதுமான அனுபவம் உண்டாக வேண்டும் என்பது குருநாதர் அருளிய மேன்மைகள். இறைவனை எண்ணி உணவைத் தருபவன் வாழ்வு காப்பாற்றப் படுகிறதாம். இறைவன் சக்திக்கு உணவைத் தராமல் தானே உண்பவரை இறைவனே உண்டுவிடுவதாக வேதத்தில் இறைவன் உரைத் துள்ளார். எனவே சீடனைக் காப்பதில் குருநாதர் முனைப் பாக இருந்து இறையருள் பெற்றுத் தருகிறார். குருநாதர் உழைப்பது போல் சீடனும் தனது வளர்ச்சியை எண்ணி உழைக்க வேண்டும். குருநாதரைப்போல் ஈடுபாட்டுடன் ஆற்றல் சக்தியை பெற்றிட முயலவேண்டும். குரு நாதரிடம் கற்ற கல்வியானது வாழ்வில் பயனுள்ளதாகச் சீடனுக்கு விளங்கவேண்டும் . எதற்காகவும், எந்தக்காரணத்திற் காகவும், எந்தக் காரியத்திற்காக வும், குரு சீடனையும், சீடன் குருவையும் வெறுக்காமல் அன்பு மாறாமல் இருப்பதுதான் ஞானத்தின் அடையாளமாகும்.”
“இறைவன் ‘பகல்’ காலத்தின் ஆற்றல் சக்தியாக ‘மித்ரன்’ என்ற தேவனைப் படைத்து, அந்த தேவானை மனித உடலில் இயங்கும் ‘பிராண சக்தி’ யில் செயல்படும்படிச் செய்தார். அதைப் போன்றே ‘இரவு’ காலத் திற்கு ‘வருணா’ என்ற தேவனை உண்டு பண்ணி, மனித உடலில் ‘அபானன்’ எனும் ஆற்றலாக விளங்கிடச் செய்தார். ‘சூரியனுக்கு’ அபிமான சக்தியாக ‘அர்யமான்’ என்ற தேவனை உண்டாக்கி, அந்த தேவனின் ஆற்றலை மனித உடலில் ‘கண்களில்’ செற்படச் செய்தார். ‘வலிமை’ க்குத் தேவனாக “இந்திரன்” என்ற அபிமானி தேவனைப் படைத்து, மனித உடலில் ‘கைகளுக்கு’ வலிமையை உண்டாக்கினார். ‘புத்தி’ க்குப் பிரகஸ்பதியைப் படைத்த இறைவன், மனிதனு டைய ‘வாக்கிற்கு’ அந்த சக்தி யைத் தந்தருளினார். தவிர இந்த பிரபஞ்சத்தின் ‘ஓழுங்கு’ முறை உண்மையை, ‘சத்தியத்தின்’ வாயிலாக இயங்கச் செய்தார். பிரபஞ்சம் என்பது அனைத்து இயற்கை சக்திகளின் மொத்த மான ஆற்றலைக் குறிக்கிறது. அத்தனை இயற்கை சக்திகளும் இறையருளால் இயங்கிக் கொண்டு இருப்பதுவும் உண்மை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுபவர்கள் இறையருள் மேன்மையை அடைவார்கள்.”
“ஒரு குருநாதர் சீடனை சுய சிந்தனை உள்ளவனாக ஆக்குகிறார். எதனால் சீடன் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்கின்றானோ, அதில் அவனுக்கு ஆர்வத்தை ஊட்டுகிற பணியைத்தான் குருநாதர் செய்து வந்து உண்மை மனித னாக மாற்றுவார். சீடன் தனது வாழ்வில் ஏற்படும் சகல பிரச்சனைகளையும் தானே தீராத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவனாக மாறி விடுகிறான். அவன் சான்றோனாக விளங்கு கிறான். சான்றோன் என்பவன் யார்? என்ற கேள்விக்கு வேதம் பதில் கூறுகிறது. எக்காரியத் தைச் செய்தாலும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்துப் செயல் படுபவனே சான்றோன். சிறிய வேலையானாலும், பெரிய வேலையானாலும், பதற்றத்துட னோ, ஏனோதானோ என்றோ அல்லாமல் செயலாற்றுபவன் சான்றோன். எந்தத் தீமைகளுக் கும், ஆசைகளுக்கும் அடிபணியா மல், சுதந்திரமாக வேலை
செய்பவன் சான்றோன். குறுக்கு வழிகளை நாடாமல் நேர்வழியில்
செல்பவன் சான்றோன்.மற்றும் சான்றோன் எனப்படுபவன் தூய வாழ்க்கையில் நிலைபெற்று இறை சிந்தனையுடன் வாழ்ந்து வருபவன். இப்படிப்பட்டவர் களுக்கு அபிமானி தேவதைகள் உதவிகள் செய்து வருவார்கள். பிரார்த்தனை செய்யும் போது அது நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் , இறை வனைப் போற்றி, நன்றி பாராட்டுபவன் சான்றோன். இறைவனிடம் நன்றியுணர்வுடன் சான்றோன் வாழ்ந்து கொண்டிருப்பான்.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.