ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
21•07•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(18) மனிதனே புனிதன் —
மனதை ஈர்க்கும் வனம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் தகப்பனார் நடத்தி வந்த ஹோட்டலுக்கு பால் கொண்டு வந்து தருபவர்களுள் கெட்டிமல்லன் புதூரைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் ஐயா அவர்கள் சுவாமி நாகராஜ் அவர்களின் தெய்வீக குணத்தால் ஈர்க்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துப் போய், தனது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.சுவாமியின்
தவத்திற்கு ஏற்ற இடம் தோப்பு மலையில் ஏகாந்தமாக உள்ளது. வருவதானால் உங்களை அழைத்துப் போகிறேன் என்று சொன்னார்.
பாட்டியும், “வனத்தில் தேவதைகள் இருப்பார்கள். தீயவர்களின் சக்திகளும் இருக்கும். அவர்களுக்கு உணவுகளை எடுத்துக் கொண்டு போ” என்றார்கள். அவல், கரும்பு சர்க்கரை, தேங்காய், பழங்கள் எல்லாம் எடுத்துச் சென்றார்.
அங்கு இராமர் வனம், தாடகை வனம், விஸ்வாமித்திரர் யாககுண்டம், மராமர நீர், ரிஷிகளின் யாகத்தை அழிக்க தீய சக்திகள் கொணர்ந்து அடுக்கி வைத்திருக்கும் அழகிய உருண்டை வடிவக் கற்கள், பச்சை நிறமுடைய ராஜ நாகங்கள், வாழைத் தோப்பு, செந்நெல்லி மரங்கள், பலா – அதிபலா சக்தி பெற்ற காந்தப் பாறை, ஆவியாக அலைந்து கொண்டிருக்கும் தீயசக்திகள், மற்றும் கொடிய வனவிலங்குகள் என இத்தியாதிகளுக்குத் தாய்வீடு அந்த வனம்.
பக்தர்கள் குழாம் பாடல்கள் பாடிக் கொண்டு மலை அடிவாரத்தில் பிள்ளையார் கோயில், விஸவாமித்திர மகரிஷி தவபீடம் அருகினில் அமர்ந்து இருந்தனர்.
யாத்திரை கடுமையான மலைப் பாறைகள் நிறைந்திருக்கும் பாதையில்தான் செல்ல வேண்டும். நிதானமாக இறைசக்தியை எண்ணியபடியே சுவாமி அவர்களுடன் சென்றார்.
அநேக மூலிகைகள் நிறைந்த வனம்.அந்த மலையில் ஏறியவுடன் அழகிய ஓடையில், நீர் வேகத்துடன் சென்று அருகில் அருவியாய் விழும் காட்சி தென்பட்டது.
அந்த இடத்தில் வைத்து வனதேவதைகளுக்குப் படையல்,
பச்சிலைகளைத் தூவி அருச்சித்தல், தூபதீபம், பாடல்கள் என அமர்க்களமாக உணர்வு பூர்வமான பயபக்தியுடன் திகழ்ந்தது. கிராம மக்களின் பண்பாடு நிறைந்த கள்ளம் கபடில்லா அருள் நிகழ்வுகள், சுவாமி மனதை ஈர்த்தது. அவர்கள் ஓய்வு கொள்ளும் நேரத்தில் சுவாமி தனது எண்ணமற்ற தவத்தில் அமர்ந்திருந்தார்.
பிறகு பயணம் ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் சென்று ஓடையில் நீராடி மகிழ்ந்து சுவாமி சந்நிதியில் பஜன் ஆடல் பாடல் களுடன் நிறைவு பெற்று அன்னதானம் நடந்தது. அன்றைய இரவு அனைவரும் கோயில் மண்டபத்தில் உறங்கினர். இரவு காட்டுப் பன்றிகள் அங்குமிங்கு சப்தமிட்டு ஓடிக்கொண்டும் இருந்ததால் உறக்கம் வராத சுவாமி எழுந்து தியானத்தில் ஆழந்து போனார். அங்கு சித்தர்கள் அமைத்திருந்த ஸ்ரீ வித்யா பீடத்திற்கு மானஸ யாத்திரையாக சுவாமியைக் கூட்டிச்சென்றனர். அவர்கள் இஙகும் அங்கும் நில்லாது மனோ வேகமாக அசைந்தபடியே இருந்தனர். உடல ஒளித்தன்மை மிகுந்திருந்தது. எதுவுமற்ற வெற்றிடமாயுள்ள காந்தபுலம் சூழ்ந்துள்ள இடமாக எல்லாமே ஒன்றாக ஐக்கிய நிலையில் திகழ்ந்தது. மனதின் உருக்கம் அதிகாலையில் எழுந்த பிறகே உண்டானது. தாயும் குழந்தைக்கும் உள்ள இனம்புரியா அன்பில் சந்தோஷம் நிலவிக் கொண்டிருந்தது மனம்!
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.