மதுரையில் ஓர் சம்பவம்!

182

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

26•01•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(210) மனிதனே புனிதன் —
மதுரையில் ஓர் சம்பவம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மதுரை தெற்கு மாரட் வீதியில் போலீஸ் லைன் அருகே நமது சுவாமி அவர்களின் மாமா திரு.பிச்சை, அத்தையம்மா திருமதி.தங்கம்மாள் அவர்களும் குடியிருந்தனர். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சுமார் பத்தொன்பது ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் வாடியிருந்தனர். இருந்தும் சொக்கேசரையும், மீனாட்சி அம்மனையும் தினமும் அதிகாலையில் வழிபட்ட பிறகே அவர் TVS கம்பேனியில் வேலைக்குச் சென்று வருவார். வேலைக் காலங்களில் விடுப்பு எடுக்காதவர். கருமமே கண்ணாயினார் அவர் தான்.

நமது சுவாமி சிறுவயது முதற்கொண்டு அங்கு வந்து அவர்களைக் கண்டு ஆசி பெறுவார். இறைவன் அவர்களுக்கு அருட்கடாட்சம் செய்தார். நடுத்தர வயதிற்கு மேல் ஒரு ஆண்குழந்தையைப் மெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து் வந்தனர். ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் அங்கு வந்தால் மாமா திரு.பிச்சை அவர்கள் தனது பணி முடிந்து வந்ததும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு அமர்ந்து இருப்பதில் அவருடைய உள்ளம் அமைதியடைவதாகக் கூறுவார். மீனாட்சி அம்மன் தெப்பக்குளத்தின் அருகே அமர்ந்து ஆன்மிக விஷயங்கள் அனேகம், நமது சுவாமி அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்ணிருப்பார்கள்.

நமது சுவாமியின் ஞான வரலாற்றை எழுத வந்து, வேறு எங்கோ செல்வதாக எண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நமக்கு ஏற்பட்டிருக்கும் அநேக சந்தேகங்களுக்கு இவ்வரலாற்றில் விடைகளும் உண்டு. எனவே நாம் அவர் உலவிய இடங்களில் மானசீகமாக உலவி, வருகின்ற நல்ல அனுபவமும், அதற்குப் பிறகு உண்மை நிலையும் நமக்குப் புரியவரும்.
திரு.பிச்சை, திருமதி.தங்கம்மாள் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டின் ஒருபுறத்தில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த “நாயனா” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர் குடியிருந்தார். நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுக்கு நல்ல நட்பாகவும், தெய்வீக சந்தேகங்களைக் கேட்டு, நிவிர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்வார்.

தோள் வரை வளர்த்த தலை முடியும், தொப்புள் வரை வளர்ந்த தாடியும், கழுத்தில் மணிமாலைகளும், காவி உடுப்புகளும், காவி அங்கவஸ்திரம் அணிந்து எப்போதும் ஸ்ரீ புவனேஸ்வரி விரதமும், பூஜையும் செய்து கொண்டிருப்பார். பக்தியும், பரவசமும் உடையவர்களுக்குத் தானே வாழ்வில் அனேக சோதனைகளும், துன்மங்களும்! அவர் இல்லற வாழ்வில் இருந்து துறவியானவர். யக்ஷசக்தியுடன் நேரிடையாக மோதும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர். ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானவர்.

நாயனா தங்கியிருந்த வீட்டின் அடுத்த பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தாய், தந்தை இவர்களுடன் வசித்து வந்தார். அவர் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்த ஒரு வீர வாலிபர். இவர்கள் எல்லோரும் குடியிருந்த பகுதியில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளி கேரளாவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். சுப்பிரமணியன்கள் இருவரும் ஒரே மில்லில் வேலை பார்த்து வந்து நண்பர்கள் ஆகி விட்டனர். குடும்பத்துடன் வசித்து வந்த சுப்பிரமணிக்குக் சொந்த பந்தங்களின் குடும்பப்பகை ஏற்பட்டு அது தீவிரமான பனிப்போராக மாறி விட்டிருந்தது. அதனால் அவரை அழிக்க ஏவல் செய்து, அவரது வீட்டு வாசலில் வைத்து பீடிக்கச் செய்யப் பலமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன!

வாழ்க்கை என்கின்ற பொம்மலாட்ட நாடகத்தில் மனிதனின் பேராசை குணம் என்ற கயிறுகள், மனித மனத்தின் விருப்பம் போலவே ஆட்டுவிக்கின்றன! நல்ல வழிப்பாதைகளில் இருந்து மனிதனை, திசைமாற்றி அவைகள் கொண்டு சென்று விடுகின்றன. இவற்றிற்க்கெல்லாம் விமோச்சனங்கள் உண்டா?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button