மணி ஐயரின் அன்புக் கண்ணீர்.

242

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•07•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(377) மனிதனே புனிதன் —
மணி ஐயரின் அன்புக் கண்ணீர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் கண் விழித்து எழுந்த போது சரணகோஷம் காதுகளில் விழுந்தது. எழுந்தவுடன் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போனார். மார்ச்சநாயக்கன் பாளையம் சுங்கத்தில், ஆழி ஆற்றுப் பாசன வசதிக்காக ஓடும் இரண்டு வாய்க்கால்கள் அருகே, ஆரியபவன் என்னும் சிறிய ‘பிராமணாள் கபே ‘ உணவு விடுதி ஒன்று இருந்தது. அதனை மணிஐயர் என்பவர் நடத்தி வந்தார். இரண்டு வாய்க்கால் களுக்கு நடுவில் உள்ள இடத்தில் ‘புடுதலி சின்னத்தம்பி ‘என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். மணிஐயர் தலைமை யில் சபரிமலைக்குச் செல்ல விரத மணிமாலைகள் அணிந்து கொள்ளும் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. கணபதிக்கு அபிஷேகம் செய்வித்த நீர் வழிந்து நமது சுவாமி தியானம் செய்து கொண்டு இருந்த இடத்தைக் கடந்து வெள்ளமென ஓடியது. நீரை சுத்தம் செய்ய வந்த இரு ஐயப்ப சுவாமிகள் நமது சுவாமியின் நிலை கண்டு மணிஐயர் இடத்தில் கூறினார் கள். அவருக்கு ஒரு கண் மாறு கண், சற்று தாட்டியான உடம்பு. நல்ல சிவந்த நிறம் ஆனால் குழந்தை மனசு. நமது சுவாமி யிடம் மனம் விட்டுப் பேசுவார். அவருக்கு அந்த கிராமத்தில் ஏனோ வசிக்கப் பிடிக்க வில்லை?

விரத மணிமாலை யினை இட்டுக் கொள்ளப் போகும் கன்னி சாமிகளை அமைதி காக்கும்படி சொல்லி விட்டு, “நாகராஜன் சுவாமி ” என்று குரல் கொடுத்தபடியே வந்தவர், சுவாமி யின் அருகில் ஒரு குழந்தை போன்று பவ்யமாக அமர்ந்து கொண்டார். எல்லோரும் நிசப்த மாக நின்று கொண்டிருந்தனர். நமது சுவாமி கண்விழித்த போது அது வரையில அங்கு நிலவிய சூழ்நிலையில் பரபரப்புத் தோன்றி விட்டது. ” நமஸ்தே நாகு சுவாமி , உங்களைப் பார்த்தே அதிக நாட்கள் ஆகி விட்டது. நான் குடும்பத்துடன் பம்பாய் சென்று விடுவதென முடிவு செய்து விட்டேன். எனது ஆன்மிகக் கடமைகளை ஆற்ற, இந்த கிராமத்தில் உதவிகளை விட உபத்ரவம் அதிகமுள்ளது சுவாமி. புனிதமான எங்கள் பயணத்தின் நடுவே இங்கே, ஒரு சாமியார் தவறான பாதையைப் பக்தர்களுக்கும் வழி காட்டி வருகிறார். அநேக பக்தர்கள் சாமியார் வழியில் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாய்ப் போய் விட்டார்கள். தெய்வத் திற்கு உகந்தது என்று அவர் கூற கஞ்சா விற்பனை ஜோராக நடை பெறுகிறது. பக்தர்கள் பக்தியுடன் புகைக்கின்றார்கள். எனது உணவு விடுதிக்கும் கஞ்சா சாமிகள் வருவதும், வந்து சாப்பிட்டு விட்டுச் செல்வதும், அதற்கு உரிய பணம் தராமல் கேலி செய்வதும், கிஞ்சித்தும் மரியாதை என்பதே என்ன விலை? என்று கேட்கின்றார்கள். எனவே எனது உணவு விடுதிக்கு மூடுவிழா நடத்தியாயிற்று. ஏதோ நமக்குச் சொந்தக்காரார் அங்கே மாதுங்காப் பகுதியில் இருக்கிறார். அவரிடமிருந்து நமக்கு அழைப்பு வந்து விட்டது. எனவே நான் விடை பெற்றுக் கொள்கிறேன் சுவாமி. உம்மைக் காணவே ஒருமாத காலமாகப் பிரயாணத்தை ஒத்தி வைத்தி ருக்கிறேன். விடை பெற்றுக் கொள்கிறேன் ” அவர் பேசும் போது கண்களில் கண்ணீர் பெருகியது. நமது சுவாமியின் கைகளைப் பற்றிக கொண்டார். பூஜைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

நமது சுவாமி அருகில் உள்ள ஆழியாறில் இறங்கி ஸ்நானம் செய்து விட்டு, மடியாகக் கோயில் சன்னதி சென்றார். விஸ்தீரமான கணபதி பூஜையைக் கண்டு விட்டு, அன்புடன கொடுத்த பிரசாதங்க ளை உண்டு பசியாறி விட்டு அமர்ந்து கொண்டார். மணி ஐயரின் இரண்டாவது மகன் நமது சுவாமியின் அருகில் அமர்ந்து கொண்டான். விஸ்வ நாதன் என்ற பெயர் கொண்ட அவர் சில விஷயங்ஙளை நமது சுவாமியிடம் கூறிவிட்டுப் பிரார்த்தனை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். மலையாள தேசத்தில் இருந்து குடி வந்த தச்சு வேலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவன் வேலாயுதன் என்னும் பெயர் கொண்டவன். சுவாமி க்கும் அவனைத் தெரியும். அவன் பள்ளிக்கூடம் போகும் போதுகூட எப்போதும் ‘வராகிமாலை’ புத்தகத்தைப் கையில் வைத்துக் கொண்டபடி செல்வான். கொஞ்ச காலத்திற்குள் அவனுக்கு மனநிலையில் ஏற்பட்டது. பித்தன் போன்றும் சித்தன் போலும் அவன் நடந்து கொண்டான். குங்குமத்தை தனது நெற்றி நிறையப் பூசிக்கொண்டான். பிறகு அவன் ஒரு நாள் நமது சுவாமியைத் தேடி வந்தான். வராகி மாலை படித்த பிறகு தனக்குத் தெய்வக் காட்சிகள் புலப்படுகிறது என்றான். கொஞ்ச நாட்களில் மாந்திரீகர்கள் தொடர்பில் கண்டது கற்றுப் பண்டிதனானான் பிறகு பெண்களை வசீகரம் செய்து பழகி தன்னுடன் பள்ளிக் கூடத்திற்குக் கல்வி கற்க வந்த பெண் பிள்ளை யுடன் ஊரை விட்டே மறைந்து போனான். பிஞ்சிலே பழுத்தது வெம்பி வீணானது என்ற வார்த்தைக்கு உயிரூட்டினான். இந்த வேலாயுதனால் மணிஐயர் குடும்பத்திலும் ஏதோ மாந்திரீ கத் தொல்லைகளை ஏற்படுத்தி இருக்கிறான்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button