மகிழ்ச்சியுடன் இறைவனிடம் கேட்போம்.

226

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•07•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(381) மனிதனே புனிதன் —-
மகிழ்ச்சியுடன் இறைவனிடம் கேட்போம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே உலகத்தின் அமைப்புக்கு அனுகூலமாகவே இறைவனால் படைக்கப்பட்டு உள்ளன. எல்லையற்றதாக விளங்கும் பிரபஞ்ச சக்தியானது சகலவிதமான செளபாக்கியங்க ளுடன் விளங்குகிறது. எங்கும் பரவிப்படர்ந்துள்ள இதனைத் தான் பிரபஞ்சத்தின் மனம் என்று ஞானியர்கள் கூறினார்கள். சக்தி பெற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மனத்தின் வாயிலாகத்தான் ஜீவராசிகளினுடைய சகலவிதக் கருத்துக்களும், அவைகள் காண்கின்ற காட்சிகளும், சுவைகளும், மணங்களும் , நிறங்களும், குணங்களும், ஜீவராசிகளின் ஆரோக்கியமும், உலகத்தில் காணப்படும் தட்ப வெப்பம், இடி – மின்னல் – அதிர்வுகள் மற்றும் இன்ப உணர்வுகள் அனைத்தும் நடை பெற்றுக் கொண்டே இருக்கின் றன. இவைகளை ஒருவருடைய மனதினுள் இருந்து மற்றொருவர் மனதிற்குள் அனுபவிக்க வைக்கும் சாதனை யை அல்லது வித்தையை அறிந்து கொண்டிருப்பவர்களை தெய்வீக ஞானம் பெற்ற ஞானியர்கள் என்று போற்றுகின் றனர். ஆற்றல் பெற்று அகால மரணம் அடையும் அமானுஷ்ய சக்திகளும் இக்காரியங்களைச் செய்து வருகின்றனர். அதற்கு உரிய விளக்கங்களை மனிதன் முழுமையாக அறியாததால் அதனைப் புரியாத புதிர் என்கின் றனர். இறந்தவரின் ஆத்மா சாந்தி பெறாத நிலையில் மற்ற தாதுக்களுடன் தனது தாதுவை இணைத்துக் கொண்டு தனது நிறைவேறாத ஆசையை நிறை வேற்றிக் கொண்டிடச் செயற்பட முறையிலும் நடைபெறத்தான் செய்கிறது.

நமது சுவாமியின் தகப்பனார் தனது பூமியை வாங்கிய விலைக்கே விற்பதற்கு முடிவு செய்ததற்கு அமானுஷ்ய சக்தி காரணமாக வில்லை. மனிதனின் தந்திர குணமும், திட்டமிட்டுச் செயற்படுத்திய சதியும்தான் காரணமாகியது. ஆனால் ஒரு விஷயம் நமது சுவாமி அந்த அகால மரணம் அடைந்த தோட்டத்துப் பாட்டியைப் பார்த்தார். அத்துடன் நமது சுவாமியின் தகப்பனாரிடம் தோட்டத்தை கொடுத்த விலைக்கே திரும்பப் பெற்ற வெங்கிடு சுவாமியும் அந்த அமானுஷ்யத்தைப்பார்த்து அதிர்ந்தே போனார். இந்த நிகழ்ச்சி தொடர்கதையாகப் போனதால், வெங்கிடுசாமி தான் விவசாயம் செய்ய வாங்கிய பூமியில் பயிர்த் தொழில் செய்ய முடியாமல் மனம் குமைந்து போனார். இறந்து போன பாட்டி தனது பெயரில் இருந்த விவசாய பூமியைத் தனது மகளின் பெயரில் உயில் எழுதித் தந்து இருந்தார். அதனால் அந்தப் பூமியின் அருகில் இருந்த வெங்கிடுசாமி திரும்பி வாங்கிய பூமியை அதே விலைக்கே வாங்கிக் கொண்டார், இறந்து போன பாட்டியின் மருமகன். வெங்கிடுசாமியின் ஆசையும் நிராசையானது. சுவாமி அவர்கள் வீட்டாரின் நிலையோ, எந்தவித முன்னேற்றமும் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்தது. காரணம் சுவாமியின் தகப்பனார் தனது வருமானம் முழுவதையும், மற்றவர்கள் உதவிகள் கேட்கும் பொழுது உடனே தந்து விடுவார். அதனால் அவர் குடும்பத்தினர் தேவைகளுக்காகச் செலவிட வட்டிக்குப் பணம் தருபவர்களி டம் வாங்குவதும், திருப்பிச் செலுத்துவதுமாகத் தனது வாழ்வை நடத்த வேண்டிய சூழலில் அகப்பட்டுக் கொண்டார். பிறகு அவர் அதிலிருந்து விடுபடவே இயலாமல் போய் விட்டது.

இவரிடம் உதவி பெறுபவர்கள் நல்ல நிலமையில் உயர்ந்து கொண்டுதான் இருந்தனர். அவர்கள் முன்பு இவரால் தலைநிமிர்ந்து நடந்து வரும் நிலமை இவரது எதிர் மறையான ஆட்டத்தால் தகர்ந்து போனது. கையில் பணம் இருந்து கொண்டே இருந்தால் மற்றவர் கள் முன்பு சந்தோஷமாக உலவி உதவிகள் செய்து, வலம் வரும் திரு.APM சாமி அவர்கள் தனது கையில் பணம் இல்லாத போது படுக்கையில் படுத்துக் கொண்டு துக்கப்படுவதும், குடும்பத்தி
னரைக் கோபிப்பதும் மற்றும் நமது சுவாமி அவர்களைப் பார்க்கும் போதெல்லாம், “இவன் பிறந்த வேளை எனது செல்வம் எல்லாம் இழந்து வரும் நிலைமை உண்டானது. எனது துன்பத்திற்கு இவன்தான் காரணம்” என ஏச ஆரம்பித்து விடுவார். சுவாமி உடனே அமைதியாக மனதை ஏற்படுத்திக, சகஜ நிலை பெறத் தியானத்தில் அமர்ந்து கொள்வார். நமது சுவாமி அவர்களின் மனம் உயர்ந்த லட்சியம் கொண்டதாக உருவாக்கப்பட தியானம் செய்து வருவது அவசியமானதாகிப் போனது. பொள்ளாச்சியில் தியான சங்கத்தை உருவாக்கி, செளண்டம்மன் கோயிலில் நடத்தி வருபவர்கள் நமது சுவாமி அவர்களின் வரவை எதிர் நோக்குபவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த ஆசான்களிடம் வேத வேதாந்தம் கற்றறிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஏற்படும் அநேக சந்தேகங்களுக்கு நமது சுவாமி அவர்கள் விளக்கம் அளிப்பவ ராக இருந்ததால் அவரை அனைவரும் தமது சங்கத்தில் வரவேற்று உபசரித்து வரத் துவங்கியிருந்தனர். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்து ஞானயோகினி திருமதி. சுந்தரம்மாள் அவர்கள் தலைமையில்தான் இது துவங்கி இருந்தது. இந்த சமயத்தில் தான்..

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button