ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
12•04•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(286) மனிதனே புனிதன் —
மகிழ்ச்சிக்கும், சுகத்திற்கும் வழி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“1. கடந்த காலங்களில் நடந்து முடிந்து போனது பற்றிய விஷயங்களில் துக்கம், துயரங்களை விட்டுவிட வேண்டும்.
2.வருங்காலத்தைப் பற்றி என்ன நடக்கப் போகின்றதோ என்று கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
3.நிகழ்காலக் காரியங்களில் எல்லாம் மனம் திடத்துடன் இருந்து கொண்டு, நற்குணங்களுடன் கூடிய அறிவுடன் சேர்ந்து அறநெறியில் பிறழாமல் வாழ்ந்து வர வேண்டும். இத்தகைய ஸ்ரீ ஈஸ்வர நீதி வாக்கியப்படி வாழும் எந்த மனிதனும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
திரு.வெங்கிட்டு அவர்கள் கூறிய சில வாக்கியங்கள் அனைவரின் மனதிலும் பதிய, அவரை உற்று கவனிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சாத்தான் வேதம் ஓதுகின்றது எனக் கேலி செய்தனர் .
” எனது தந்தையின் மரணம் உலக மக்களின் வாழ்வின் இயல்பில் செய்யப்பட்ட ஒரு சம்பவம். இதனை நான் இனி துயரம், துக்கம் என நினைத்து அதனை அனுபவிக்க மாட்டேன். நான் எதனையும் இனி அறியாத ஆத்மனல்ல! எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ
வேண்டிய மனித சமுதாய கடமைகளை ஒருகணம் மறந்து விட்டதால் தான் இத்தகைய மனக் கொடுமைகளுக்கு ஆளாகி்ப் போனேன். சத்திய மான பொருளாகிய, இன்ப துன்பமற்ற இறைசக்தியின் பயனை, உள்ளது உள்ளபடிக்கு அறிந்து கொண்டு அவைகளை மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தி வருவேன். எப்போது? எந்த நேரத்தில்? எனக்கு மரணம் சம்பவித்தாலும் எனது ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொண்டு, பரிசுத்தமாக்கி அதை இறைசக்தியிடம் ஒப்படைக்கும் தகுதியை நான் உருவாக்கப் போகிறேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அதனை அடைந்து விடுவேன். மரணத்தைக் கண்டு பயந்து, அதனிடமிருந்து தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இனியில்லை. ஓசை, ஒலியெலாம் ஆன இறை சக்தியை நான் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் கண்டு கொண்டு, அதனை ஆராதிக்கப் போகிறேன். ஒலிவடிவான, ஓசை வடிவான இறைவன் எனது பேச்சில் சத்தியத்தையும், தைரியத்தையும், ஞானத்தையும் வழங்கி என்னை சுகமான ஆத்மாவாகப் பரிமளிக்க நிச்சயமாகக் செய்திடுவார். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை. மெளனமாகவே வாழ்ந்து சந்தோஷமான பயணத்தையும், நிம்மதியையும் பெற்றுப் பேரின்ப வாழ்வினை அடைவதே எனது லட்சியம். இது போதும் எங்களுக்கு!” என்று கூறி நிறைவு செய்தார். இது மஹா வாக்கியமாக இருக்கவே, நமது சுவாமி வெங்கிட்டுவைப் பார்த்துக் கேட்டார், “எங்களுக்கு என யாரைக் குறிப்பிடுகின்றாய்?”
அதற்கு வெங்கிட்டு, “வேறு வேறாய் யாரிருக்க முடியும்? நானும் எனது இறைவனும் தான்! ” நதி மூலம், ரிஷிமூலம் பார்க்காதே, கேட்காதே என்று இதனால்தான் கூறி யிருப்பார்களோ என நமது சுவாமி எண்ணிக் கொண்டார். ஆனால் வெங்கிட்டு வாழ்வு துயரத்தில் தான் முடிந்தது. எண்ணுவதும், பேசுவதும், செயற்படுவதும் தர்மமாயிருங்க வேண்டும்.
திரு.வெங்கிட்டு அவர்கள் சொன்னது போலவே நடந்து கொண்டார். உலக மக்கள் அவரைப் பார்த்த பார்வை வேறு. ஆனால் இறைசக்தியின் எண்ணம் நீதி யுடன் இருந்தது. இதற்கு சற்குரு நாதரின் விளக்கம் சிந்திக்கத் தூண்டுவதாக இருந்தது. “அனுபவிக்கும் ஜென்ம வாசனைகள்” என்ற ஒற்றை வரியில் இருக்கவே, “ஞான தேசிகரே அடியவனுக்கு விளக்கம் தேவை” என சுவாமி கேட்டுக் கொண்டார்.
சற்குருநாதர் பேசினார். “மாபாதகமான ஒரு கொலையை ஒருவன் செய்து, காவலர்களால் கைது செய்யப்பட்டு, வழக்காடு மன்றம் அழைத்து வரப்பட்டான். அவனுக்காக வாதிடும் வழக்கறிஞர் குற்றமற்றவன் என வாதிட்டார். அரசு தரப்பு வக்கீல் குற்றவாளி என வாதிட்டார். நீதிபதி தூக்கிலிட உத்தரவு இட்டார். அதன்படி தூக்கிலும் போடப்பட்டு உயிர் நீத்தான். கொலை செய்ததை யாரும் பார்க்க வில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் குற்றவாளிக்கு எதிராக இருந்தன. இதன் பாவம் யாருக்குப் போய்ச் சேரும்?
இயற்கையின் இயல்பு பற்றி வெங்கிட்டு கூறியதைக் கவனித்தாயா?” எனக்கூறி நமது சுவாமி முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். நமது சுவாமி மெளனமானார். கடைசியில் ஸ்ரீ ஈஸ்வர குருநாதரே விளக்கம் கூறினார்கள்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.