போதும், போதும்! துன்பநிறைவு!

174

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•05•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(305) மனிதனே புனிதன் —
போதும், போதும்! துன்பநிறைவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பவானி தியானம் சங்கத்தைப் பற்றி நல்ல எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகிய அருமையான கால கட்டம் அது! தவத்திரு வேணு கோபால சுவாமி அவர்களின் முயற்சி ஆரம்ப காலத்தில் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது. தியான அன்பர் களுக்குள் தமிழக மெங்கும் ஓர் இனம் புரியாத நட்பும், ஆழமான, தெய்வீகமான, உன்னதமான உறவு ஏற்பட்டு இருந்ததை நாங்களும் புரிந்து கொண்டோம். ஜாதி, மதங்கள் கடந்த அந்த நட்பை விவரிக்க இயலாததாக இருந்தது. பவானி தலைமைச் சங்கத்திற்கும், உன்னதமான தியான அன்பர்களுக்கும் இடையே நிலவி வந்த நல்ல இயக்கத்தில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அவர்களைப் பற்றிய தவறான எண்ணம் உண்டாகும் படியாக, யாரோ திட்டமிட்டுக் காரியம் ஆற்றி வந்தனர். பவானி தியானம் சங்கத்தில் இருந்து தவத்திரு வேணுகோபால சுவாமிகளாகிய ஞானகுருவை வெளியேற்றி விடவும், அவரது தலைமையில் புதிய ஆஸ்ரமம் தோற்றுவிக்கவும் ஒரு சாரார் முனைந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தனர். அதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பது புரியவில்லை.

எங்களைப்போன்ற தியான நண்பர்கள் சமமான மன நிலையில் இருந்தோம். தியான சங்கம் ஒன்று தவத்திரு.SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டு, நல்ல நிலைமையில் ஞானக் கூட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது. இந்த சமயத்தில் பண்ணாரியில் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடாகி இருந்தது. நமது சுவாமி அவர்களும் பொள்ளாச்சி தவயோகினி திருமதி. சுந்தராம்பாள் அவர்களின் மூத்த குமாரன் திரு. சண்முகசுந்நரம் அவர்களும் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவினுக்குச் சென்றிருந்தனர். தவத்திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் சங்கம் வெளியிடும் ஞானநூலை வாசித்துக் கொண்டிருந்தார். சிறு குழந்தைகள் முதற் கொண்டு தாய்மார்கள் மற்றும் அனைவரும் ஏதோ ஒரு அபூர்வ சக்தியால் ஈர்க்கப்பட்டு மெளனமாக அமர்ந்திருந்தனர். அதிகமாக சுற்றுப் பிரயாணத்தில் ஞானகுருவையே சந்தித்து வந்த மக்களுக்கு அவர் மீது இனம் புரியாத பக்தி ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். தவத்திரு.SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் தொழில் அதிபராக இருந்தவர். ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை நிருவாகித்து வரும் தொழிலுக்குச் சொந்தக்காரர். அவர் சிறந்த ஞானியாக விளங்கு வது சிலர் மனதை உறுத்தி இருக்கலாம். பண்ணாரி விழா விலேயே கருத்து வேற்றுமை யை விதைத்து வந்தனர். இது பவானி தலைமைச் சங்கத்திற்கு தெரிய வாய்ப்பு ஏற்படவில்லை. சிலர் தலைமைச் சங்கத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் பலர், தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களுக்குத் தனியான ஆஸ்ரமம் ஏற்படுத்தி விட துடிப்பாய் இருந்தனர்.

வளர்ந்து வரும் ஞானசங்கத்தை உடைத்து விட முயல்பவர்கள் யார்? செல்வமும், செல்வாக்கும் மிகுந்த பலர் தவத்திரு வேணு கோபால சுவாமி அவர்கள் அணியில் இருந்தனர். தியான நண்பர்களாகிய அநேகர் இந்த நிலையில் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், சங்கம் உடையாமல் இருக்கப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந் தோம். நல்ல மனம் கொண்ட தவத்திரு.SSM.ஐயா அவர்கள் எதனையும் அறியவில்லை. அவ்வளவு ரகசியமாக ஞானகுரு வைப் பிரித்து வெளியே கொண்டு செல்லக் காரியம் ஆற்றி வந்தனர். பண்ணாரி விழா நமது சுவாமி அவர்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ந்ததாக எண்ணினார். அங்கு தான் சுவாமி அவர்கள் நமது ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை திரு. M.மேகநாதன் அவர்களை முதன் முதலாக பண்ணாரி விழாவில் சந்தித்து ஞானக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் மதுரையில் குடியிருந்தபோது அதே வீதியில் குடியிருந்தார் திரு.மேகனாதனின் தந்தை. மில் வேலைக்குச் சென்றவர்கள் கம்யூனிச பொதுவுடைமைக் கொள்கையின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். மதுரை திரு.மேகநாதன் அவர்கள் சிறுவனாக இருந்த போது தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களின் மடியில் வளர்ந்த பிள்ளை. ஞானகுரு அவர்கள் மீது அன்பும், மரியாதை யும், உயரிய மதிப்பும் வைத்தி ருந்தார். பவானி ஞான சங்கம் துவக்கப் படுவதற்கு முன்னர், சேலத்தைச் சேர்ந்த சில நம்பிக்கையான அன்பர்கள் தவத்திரு. SSM ஐயா அவர்களி டம் ஞானகுரு திரு. வேணு கோபால சுவாமியை அறிமுகம் செய்து வைத்தனர். ஞான குருவின் கருத்துக்களில் பலவும், பகுத்தறிவுப் கொள்கையினால் வளர்ந்து வந்திருந்த தலைவரின் கருத்துடன் ஒத்துப் போயின. தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களைக் குருவாகக் கொண்டு பவானியில் தியான சங்கம் துவங்கப்பட்டது. இந்த சங்கம் மக்களுக்குப் பயன் தர வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன், ஞானக் கருத்துக்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button