ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•08•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(402) மனிதனே புனிதன் —
போகநாதரின் வரவும், விளக்கமும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
போகநாதர் சோழமன்னன் முன் தோன்றினார். தங்கக்கட்டிகளை அரசன் முன்பு வைத்த போக நாதர், “ஏ ராஜனே, இதனைப் பெற்றுக் கொண்டு எனது சீடன் கருவூராரை என்னுடன் அனுப்பி வை “என அதிரடியாகக் கூறவும் அரசன் அதிர்ந்து போனான். போகநாதரின் தாழ் பணிந்த அரசன் குற்றம் பொறுக்கக் கூறிக் கருவூராரை விடுதலை செய்தான். ” ஐயனே, கருவூரார் செய்த செயல் முறையானது தான் என்று எண்ணுகின்றீர்களா? ” என்று வினாவினான். அதற்கு போகர், “ராஜனே, உனக்கு சிவனருள் உள்ளதால் ஆடல்வல்லானின் திருஉருவம் சமைத்திட நினைத்தாய். அதனால் அகம் மகிழ்ந்தோம். சொக்கத் தங்கத் தால் விக்ரகம் செய்து வழிபடும் பொழுது, நாளடைவில் கண்ஒளி மங்கிவிடும். அதனைத் தவிர்க்க செம்பு சேர்த்துத் தங்கவிக்ரகம் சமைப்பது வழக்கம். இதனை எனது சீடன் கருவூரார் நன்கு அறிந்தவர். மக்களின் நலனைக் கருதி அவர் செய்த செயல் முறையானது தான். உனக்கு செம்பு கலந்த நடராஜர் தேவை இல்லை என்றால் நான் கொண்டு செல்கிறேன். அதற்கு ஈடாக இந்தத் தங்கத்தை ஏற்றுக் கொள். எனது சீடனை என்னுடன் அனுப்பி வை” என்று கூறியதும், கருவூராரைப் போகருடன் அனுப்பி வைத்தார். சொர்ண விக்கிரக நடராஜர் சிதம்பரம் என்று அழைக்கப்படும் தில்லை யில் விதிமுறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆடல் வல்லான் நடராஜர் பூஜா விதியைப் போகநாதர் ஏற்படுத்தி வைத்தார். அத்துடன் என்னிடம் ஓர் உண்மையை வெளிப்படுத்தி னார்.”
“நான் பிறந்த கருரில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் எனக்கு ஜீவ சமாதி அமையும் என்றார். மகிழ்ச்சி கொண்ட எனக்கு குரு பரிபூரண ஆசிகள் நல்கி மறைந்தார். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கம் ஸ்தாபிக்க அஷ்டபந்தனத்துடன் எனது உமிழ்நீரைச் சேர்த்ததை அறிந்த தஞ்சை மன்னன் என்மீது கருத்து வேற்றுமை கொண்டான்.
ஆனால் அதனை வெளிப்படுத்த வில்லை. எனக்கு என்று மகாமேரு ஆலயத்தில் ஜீவ சமாதி கட்டப்படும் என மன்னன் அறிவித்த போது மட்டும் எனது எதிர்ப்பைத் பணிவுடன் தெரிவித்துக் கொண்டேன். மகா மேரு கோயிலின் பின்புறத்தில் கன்னிமூலை தவிர்த்து சமாதி
கட்டப்பட்டது. அங்கு சமாதி ஆகவிரும்பாத காரணத்தினால் அரசருடன் ஏற்பட்ட வாங்கு வாதத்தில் ஒருவர்க்கொருவர் அகால மரண சாபங்களைக் கொடுத்துக் கொண்டோம். நான் கரூர் திரும்பிய பிறகு எனக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு அளவே இல்லாமல் போனது. தர்மம் செய்தவன் உயர்ந்த ஜாதி, தர்மமே செய்யாதவன் தாழ்ந்த ஜாதி என்ற கொள்கை உடைய என்னை, அனாச்சாரன் என்றே தூற்றினர். எனக்கு ஏற்பட்ட அகால மரணம் பற்றி எதையும் கூற நான் விரும்பவில்லை. அது மிகவும் கொடுமையானது. நான் சிவனது திருவடி நிழலில் அடைக்கலமானேன். அன்று முதல் இன்று வரை சாப நிவர்த்திக்குப் பிரார்த்தனை செய்து வருகிறேன் ” என்று கூறி நிறுத்தினார்.
ஜேதிடநிபுணர், ” பரிகாரம் ஏதாவது ராஜதுறவி கேட்டு வரச் சொன்னார். …” என்று கூறியதும் கரூர் சித்தர் பலமாகச் சிரித்து, “ஜோதிடரே, உம்மிடம் பரிகாரம் கேட்கச் சொல்லியவர் ராஜ துறவி அல்ல! உண்மையில் அவர் தான் ஆவியாக அலைந்து கொண்டிருக்கும் அரசன். என்னைச் சந்திக்கும் சக்தி பெற்ற உங்களால் அவருக்கு சாப நிவர்த்தியும், குருதோஷப் பரிகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார். அதனைப் பற்றிக் கூறுகிறேன் கேள். குருதோஷம் அல்லது குரு சாபத்துடன் அகால மரணம் அடைந்து ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் இப்பூவுலகில் வித்தைகளைக் கற்றுக் கொடுத்த நல்ல ஆசான்களுக்குத் துரோகம் செய்தவர்கள், மற்றும் குரு பத்தினிக்குத் துன்பம் இழைத்தவர்கள், கற்றுக் கொடுத்த ஆசானுடைய உயிருக்கு இன்னல் நினைத்தவர் கள், பொதுவாகக் குருத் துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மனம் திருந்தி விமோசனம் வேண்டினால் மட்டுமே இந்தப் பரிகாரம் நிச்சயமாகப் பலிதமாகும் அரசன் முதல் ஆண்டி வரை யாவரும் குரு தோஷப் பரிகாரம் செய்து சாப விமோசனம் பெற்றிடலாம் ” என்று உவப்புடன் கூறினார். அத்துடன் , “அப்பா ஷண்முகம் நீ இந்தப் பரிகாரத்தை ராஜதுறவி அவர்களுக்குச் செய்ய நினைத்தால் நாகலக்ஷ்மியின் அவதாரம் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீ வித்யா பீடத்திற்குச் சென்று வர வேண்டும். பொள்ளாச்சி அருகே அது மறைக்கப்பட்ட சக்தியாக விளங்கி வருகிறது. ஆழி யாற்றின் கரையோர கிராமத்தில் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமியின் வளர்ப்புப்பிள்ளை இருக்கிறான். என்னுடன் தொடர்பு கொள்பவன். நான் இந்தப் பரிகாரத்தை உனது காதில் நான் சொல்ல, நீ மனதில் வாங்கிக கொள். அவன் பெயர் நாகராஜன். அவன் கூறுவதையும் , நான் உன்னிடம் கூறுவதையும் ஒப்பு நோக்கு. ராஜகுருவிற்குப் பரிகாரம் செய்திடப் போகும் நீ முதலில் பரிகாரம் செய்ய வேண்டும். கவனம்…” என்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.