பொருட்கள் மறைந்த மாயம்!

223

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•10•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(108) மனிதனே புனிதன் —
பொருட்கள் மறைந்த மாயம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தெய்வீக வழிமுறைகளின் நன்நெறி வெற்றி வாழ்க்கையை மனிதன் வாழ்ந்திட, குருநாதர் கூறும் உபதேசங்களைக் கேட்டுக் கடைப்பிடித்து வரவேண்டும். அதன்படி நடக்கின்ற பக்தனுக்கு வாழ்வில் எவ்விதக் குறைகளும், குற்றங்களும் வந்திடாமல் காப்பாற்றி வருவார். திருவருட் கருணை என்னும் ஞானதீபத்தால், அறிவின் சுடர் கொண்டு வழிகாட்டியும் வருவார். அதனால் இக்கருத்தில் மனமும், மனதில் உறுதியும், திடமும் கொண்டிட வேண்டும் என்பதே உண்மை!

தாய் தந்தையின் அருமையான வளர்ப்பில் வளர்ந்து, இன்பமாக, இனிமையான வார்த்தைகளால் ஆதரவு பெற்று வளர்ந்தோம். சற்குருவின் வழி செல்வதில் நன்மையான காரியங்களை மட்டுமே உலகினுக்குச் செய்வதில் நாட்டம் கொள்வது வரவேற்கத்தக்கதே! அதில் நமக்கும் நன்மைகள் பிறக்க வழியுண்டு. தவநெறி வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு விடாமல், மற்றவர்களையும் மதித்து நடத்திக் கற்றுக் கொள்வதும் நியாயமான காரியமுமாகும். நன்றி!

மார்கோவாவில் அப்போஸ்தலரின் புனித உடல் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தில், நமது சுவாமி அப்புனிதரின் முன்னால் ஜெபம் செய்தபடி இருந்தார். முகத்தின் பொலிவு மகான்களுக்கே உரியது. மேற்கூறிய பிரார்த்தனை சுவாமியின் மனதில் உதயமாகியது! மனிதனின் எண்ணங்களைச் சரி செய்து கொண்டிட, சந்தர்ப்பங்கள் இறையருளால் உண்டாக்கப்படும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்வதே நன்மையாகும்!

மகான்கள் தங்களது மனதினைத் தானாகவே இயக்கும் நிலையிலும், சிந்திக்கும் நிலையிலும் வைத்திருப்பார்கள். அப்போது அவர்கள் எண்ணங்கள் பலிதமாகும். நாம் சற்குருவை எண்ணி நம்முடைய தேவையின் தீவிரமான எண்ணங்களை அனுப்பினால், அவர்கள் ஏற்றுக் கொண்டு அதனை ஜெபத்தில் சங்கல்பங்களாக மாற்றிக்கொண்டு விடுவார்கள். மனதினை அவர்கள் வயப்படுத்தும், வளப்படுத்தவும் சக்தியினைப் பெற்றிருப்பார்கள். நம்முடைய மனதின் ஆழத்தில் பதிந்துள்ள எண்ணங்கள், நம்முடைய சொந்த விருப்புக்கள் ஆகியவைகளையும், நமது சூழ்நிலைகள் எப்படி உள்ளதோ அதற்குத் தக்கபடி இருக்கும், அன்றாட நடவடிக்கைகளால் உண்டாகும் விளைவுகளையும், அவர்கள் நினைத்தால் கட்டுப்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும். விழிப்புணர்வுடன் அவர்கள் சக்தி பெற்ற மனதின் ஆற்றல்களால் சங்கல்பங்களைக் கொண்டு ஆசீர்வாதம் செய்து நமக்குப் பலன்களை உண்டு பண்ணுவார்கள்!

பேருந்தில் மகிழ்வுடன் பிரயாணம் செய்து வந்தபயணக் குழுவினர் ‘ஜோக்ஃபால்ஸ்’ எனப்படும் சில்வர் அருவி சென்றபோது சோதனைக்கு ஆளாயினர். பல பேருடைய கைக்கடிகாரம் மற்றும் பர்ஸு முதலியவை காணாமல் போயிருந்தன. தங்கும் விடுதியில் இருந்த நீண்ட கழிப்பறைகளின் ஜன்னல்களின் மீது பொருட்கள் மற்றும் பணத்தை வைத்து விட்டு, மறந்து போனவர்களுக்குத் திரும்ப ஞாபகம் வந்து தேடிப்போனால், அவைகள் அங்கு இருக்காது. பொருட்களை இழந்தவர்கள் அங்குள்ள காவலாளியிடம் விசாரித்தார்கள். அதற்கு அவர் அங்குள்ள அமானுஷ்ய சக்தியின் வேலைதான் அது எனப் பதில் கூறினார். உடன் வந்த சாமியார் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button