பொன்னம்மாள் பாட்டி.

0 178

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•08•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(35) பொன்னம்மாள் பாட்டி

நமது சுவாமி நாகராஜ் அவர்கள் நினைவுகளில் ஒரு குறிப்பிட்ட செய்தி மட்டும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். அதைப் பொன்னம்மாள் பாட்டியிடம் தனிமையில் விளக்கம் கேட்பார்.அந்த செய்தி, “நான் உனக்குள் வருவேன்” என்பதே. இது புனித செய்தி என்பது மட்டுமே புரிந்தது. செய்தியை யார் அனுப்புகிறார்கள்? என்பது தெரியவில்லை! அதன் காரணமும் புதிர் தான். செய்தி மட்டும் பூமியில் வடக்கில் இருந்து வந்து கொண்டிருந்தது.

பாட்டியும், ” அது உனது இருபத்தி ஐந்தாவது வயதில் புரியும். அப்போது பிரபஞ்ச ரகசியங்களை உனக்கு விளக்கம் தர சூரிய ரிஷியின் தொடர்பு கிடைக்கும். அதன் பிறகு உலகில் ஏதும் அறியாதவனைப் போலவே நடந்து வாழ்ந்து, உனக்கு விதிக்கப் பட்டதை சந்தோஷமாக ஏற்றுக் கொள். உனக்குத் துன்பம் விளைவிக்க எண்ணி வரும் போது அதனை “ஈஸ்வர அர்ப்பணம்” என்று கூறி பஞ்ச பூதங்கள் வசம் ஒப்படைத்து விட்டுக் கவனிப்பது மட்டுமே உனது வேலை! இதன் உண்மையைத் தகுதியுள்ளோருக்கு மட்டுமே சொல்லி வைக்கவும். நமது எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் நடைபெறும் விஷயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் இரு. எதையுமே எண்ணாமல் பார்க்கும் சக்தி கிடைக்கும்! மனதை காலியாக வைப்பதில் அது உதயமாகும். உனக்கு இது போதும்” என்றார். பாட்டி நின்று கொண்டு சூரிய தியானம் செய்யும் காலங்களில் எல்லாம் அவர் காலடிப் பக்கத்தில் நமது சுவாமி அமர்ந்து நிச்சிந்தனையாக இருந்து வரலானார்.

ஆற்றோரம் அரச மரத்தின் கீழே அமர்ந்து இருந்த குருவும், சீடனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். நமது சுவாமி அவரை மானசீகமாக எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டார். இனி அவர்கள் உரையாடல்கள் சுவாமிக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே மிகவும் அருமையும், உபயோகமும் உள்ளது.

பலருக்கும் இந்தக் கதைகள் பிடிக்காது. காரணம் புவியியல் ஞானத்தின் முத்திரையைத் தேடுபவர்கள் மத்தியில், சந்தர்ப்பவசத் தேடலில் மற்றவர்கள் கருத்தைத் தனது கருத்தாகவும், ஏதோ தங்கள் தேடலில் ஞாயம் இருப்பதாகவும் கூறிப் புகழ் தேட முயல்பவர்கள், அல்லது ஆன்மிகம் விஷயம் தங்களுக்கே சொந்தம் என்பது போல் எதிர்க்குரலோ, அறிவுரையோ சொல்வார்கள்.

சிலர் உண்மைகளைப் புரிந்து கொள்ள முயலுவார்கள். சிலர் நமக்கெதற்கு என்ற படி உல்லாசத்தில் மூழ்கி குடும்பத்திற்கு இன்னல் தருவார்கள். நாங்கள் சுவாமியிடம் எங்கள் ஆன்ம சக்தியின் வளர்ச்சிக்கு வழி தேடி வந்த பெரும் கூட்டத்தில் கொஞ்சம் பேர் உண்மையான வர்கள். அது ஆன்ம ஏக்கம். கரை சேர்க்கும் ஓடத்தைப் கண்டு அதில் பயணிப்பவர்கள்! சுவாமி அவர்கள் பொறுத்தருள வேண்டும். எங்களின் தாழ்மையான விண்ணப்பம். உலகில் மக்களுக்காக வாழ்பவர்கள் மத்தியில் தங்கள் நலனை நாடாதவர்கள் யார்? சுவாமி! மாற்றமானது காலத்தில் நிச்சயம் நடைபெறும். நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். இறந்த பிறகு கொண்டாடி உங்கள் பெருமைகளைப் பரைசாற்ற விரும்ப வில்லை. நீங்கள் எங்களுடன் வாழும் காலத்தில் எங்களைப் பற்றியும், உங்களைப் பற்றியும் தெரிந்து, புரிந்து வாழவே ஆசைப் படுகிறோம்.

எங்கள் எண்ணத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் வெளியில் இருந்து வந்து கொண்டிருப்பதைத் தாங்கள் அறியாதவரல்ல! குருஈஸ்வராலய மெய்யன்பர்களாகிய நாங்கள் கேட்பது ஒன்று உண்டு. தாங்கள் எங்களிடம் கூறிய பாடங்கள் என்னைத் தவிரப் பலரிடமும் உள்ளது.தாங்கள் உத்தரவு தந்தால் அவைகளை இந்த வரலாற்றில் சேர்க்க விரும்புகிறேன். தாங்கள் திருவாக்கில் அருளிய செய்திகளை கூடுமானவரை அப்படியே தருகிறேன். அதில் ஏதாவது எனது எண்ணங்களும் பதிவாகி இருக்கலாம். மன்னித்து அருள வேண்டுகிறேன்.நன்றி!
நமது சுவாமி அவரைத் தனது குருநாதர் என்று கூறிக்கொள்ளும் முன், நாங்கள் அவரது அருள் பெற விரும்பியே குருவும் சீடனும் என்று ஆவல் மிகுந்து எழுதுகிறேன். சற்குரு நாதர் நமது சுவாமியிடம், “எதற்காக வீண் சிந்தனை? மாயனின் நோக்கம் தவறல்ல! அவன் ஒன்றை அடைந்து விட முயல்வதும் பாராட்டத்தக்கதே! உன்னை நெருக்குவதில் அவன் நோக்கம் அடிபட்டுப் போகும். இது தானே உனது சிந்தனை? ” என்றார். நமது சுவாமி அதிர்ச்சியில் மெளனமானார். சற்குரு மீண்டும், “மற்றவர்களுக்கு உதவுவது உனது குணம். அது நடக்கட்டும். ஆனால் நீ இதில் யோசிப்பதில் அர்த்தம் இல்லாமலில்லை. அது அவன் விதிப்படிதான் நடக்கும். அறிவை உபயோகப்படுத்து! சரி சென்று வா” என்று ஆசீர்வதித்தார்.

பிறகு சுவாமியிடம் ரிஷிகளின் தவவாழ்வு, குடும்பம், தாய் சக்தி, ரிஷிபத்தினி சக்தி பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். சற்குரு நாதர், “நாகராஜா ஏன் துறவறம் பூண்டு வாழ எண்ணுகிறாய்?” என்று கேட்டதும் சுவாமி கண்கள் கலங்கினார்.
நமஸ்காரம் செய்து விட்டு வீடு திரும்ப பாட்டியும்,”இனிமேல் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொன்னார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button