பேருந்தின் கப்பல் பயணம்!

177

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•10•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(110) மனிதனே புனிதன் —
பேருந்தின் கப்பல் பயணம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆனைமலை சாமியாரைப் பற்றியோ, நமது நாகராஜன் சுவாமி அவர்களைப் பற்றியோ, ஆன்மிக விஷயங்களைபு பற்றியோ, பேருந்தில் பயணம் செய்யும் வியாபாரப் பெருமக்கள் எந்தவிதக் கருத்தையும் கூறாமல் வந்தது சாமியாருக்கு மிகவும் செளகரியம் ஆயிற்று! பணம் கட்டிய ஒருவருக்கு மாற்றாக அவர் வந்திருந்தார் என்பது மட்டும் பயண ஏற்பாடு செய்தவர்களுக்குத் தெரியும். இவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். நமது சுவாமிக்கு அநேக பாடபோதனைகளைக் கூறுவதற்காக வந்தவர். அவ்வளவுதான் நமக்கும் தெரியும். ஆனால் இதன் பின்னணியில் நமது சுவாமியின் குருநாதர் நிச்சயமாக இருக்கின்றார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அவர் தனது போதனைகளைக் கூறிவிட்டு வந்த சுவடுகள் தெரியாமல் மறைந்து விடப்போகின்றவர்.

கோவா செல்வதற்கு அக்காலத்தில் வாகனங்களை ஏற்றிச் செல்ல சிறிய கப்பல்கள் சேவைகள் புரிந்து வந்தன. சேவைக்கட்டணம் என்று ஒரு சிறிய துகை பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பின்பு பேருந்து கப்பலில் ஏற்றப்பட்டது. சிறிய ரக, பெரியரக வாகனங்கள் ஏற்றப்பட்ட தேர்ச்சியும், அழகும் அவர்களுக்கு இருந்த பொறுப்பு எத்தகையது என்பது புரிந்தது! கோவாவில் தங்கிக் கொள்வது என்றும், பிறகு மற்ற இடங்களுக்குச் செல்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இளம் பிரயாணிகளுக்கு இரண்டு முக்கிய கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தைத் காட்டினார்கள். ஆனைமலை சாமியார் மற்றும் சுவாமி இருவரும் தங்களுடைய அறிவின் விருத்தியிலேயே கவனமாக இருந்தனர்.பயணிகள் தங்களுடைய பெட்டி படுக்கைகளை விடுதியின் வாசலில் வைத்து விட்டு, ஏதோ தங்களுடைய சொந்த வீட்டிற்கு வந்தது போல நடந்து கொண்டனர்.

இங்கு யாரையுமே குறை கூறுவதற்காக எழுதப்பட வில்லை. இறைசக்தி அறிவினை அள்ளிக் கொடுத்து அனுபவிக்கவே அனைத்தையும் படைத்தது. உழைத்து அனுபவிப்பதால் படைப்பின் மேன்மை புரிந்தது. மிகுந்த ஆற்றல் சக்தியை மனிதன் உபயோகப்படுத்தி உள்ளன்புடன், ஈடுபாட்டுடன் உழைப்பதால் மட்டுமே அதன் பயனை நன்றாக அனுபவிக்க முடியும். இதில் விருப்பம் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது. யாரையும் வெறுக்கவோ, மற்றவர்களுடைய செயல்களைப் பற்றிய விமரிசனங்களால் மனதில் வெறுப்பை உண்டாக்கக் கூடாது.
இங்கு விடுதியில் அவர்கள கலாச்சாரப்படி குடும்பத்துடன் உணவுண்டு, மதுவருந்தும் பழக்கம் உண்டு. இது பயணிகளின் தகாத விமர்ச்சனத்துக்கும், கேலிக்கும் ஆளானது. தன்நிலை மறந்து பிறர் நிலையை அறிவது என்பதன் காரணம் பற்றி நமது சுவாமியும் அவரது நண்பரும் (சாமியார்) உரையாடிக் கொண்டிருந்தனர். விடுதியின் முன்பு நமது ஆட்கள் கலவரத்துடன் பேசிக்கொண்டு இருந்தனர். பலருடைய பிரயாணப் பெட்டிகள் காணப்படவில்லை. அவைகள் களவாடப்பட்டு விட்டன. பணம் மட்டும் அவரவர்கள் வசத்தில் இருந்ததால் உற்சாகம் தப்பித்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button