பேரின்பத்திற்கு வாழ்வின் வழி!

170

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•03•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(249) மனிதனே புனிதன் —
பேரின்பத்திற்கு வாழ்வின் வழி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இன்பத்தை அனுபவித்தல் பற்றிய சற்குருவின் சோதனை வினாவிற்கு வெகு நிதானத்துடன் நமது நாகராஜன் சுவாமி பதில் உரைத்தார்.
” சச்சிதானந்த சற்குருவே, இதன் பதிலை ஸ்ரீ ஈஸ்வர நீதியாய் , மகான்களுக்குத் தாங்கள் கூறிய விளக்கத்தையே விடையாக்குகிறேன். பொறுத்தருள வேண்டும் ஐயனே” என்ற பீடிகையுடன் கூறினார்.
“1.வாழ்க்கையின் உண்மையான நோக்கங்கள் கொண்டு வாழ்வதால், வெற்றியை ஈட்டி விடலாம்.
2.சந்தோஷமான மன நிலையைப் பெறுவது தான் சிறந்த பாக்கியம்!
3. வாழ்வில் இன்பம், துன்பம் எது வந்தாலும் அதனை மிகுந்த தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுதல்.
4. எந்தவித ஆபத்துக்கள் ஏற்பட்டாலும், பயங்கொள்ளாமலும், கலக்கமடையாமலும், கவனமாக இருப்பது தான் அனுக்கிரகம்.
5. மனதினைக் கேடுறுத்தாமல் இருப்பதே தெய்வீகமானது. ”

“6. வாழ்வின் லட்சியம், நோக்கங்கள் கேடுறாமல் அதனைப் பாதுகாக்க முயல வேண்டும்.
7. வாழ்க்கையில் தங்களின் நடுநிலைமை நோக்கில் இருந்து மாறுபடாமல் இருப்பது.
8. நமது பெருந்தன்மையான குணத்தால் உலகில் நன்மைகளை அடைந்து வாழலாம்.
9. எத்தகைய பணியானாலும் அதில் விவேகமுடன் நடந்து கொள்ளவும்.
10. வாழ்வில் திட்டமிடுதலில் ஒவ்வொன்றையும் அறிந்து, ஆராய்ந்து செய்து வர வேண்டும்
11. சத்தியத்தைக் கடைப்பிடித்து நடத்தும் வாழ்வில் சொல்வாக்குப் பெற்றுப் பெருமிதம் அடையலாம்.
12. நமது செயலில் தர்மங்கள் செய்து செழிப்படைந்தால் செல்வாக்குடன் வாழலாம்.
13. எத்தகைய புகழையும் நாம் அடக்கத்துடன் ஸ்ரீ ஈஸ்வரருக்கு அர்ப்பணம் செய்துவிட வேண்டும். காரணம் புகழுக்கு உரியவர் அவரே.
14. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று வாழ்வதால்,
எத்தகைய இன்னல்களையும் தீரமுடன் தாங்கும் மனவலிமை, கிடைக்கும். ”

“15. இறையருள் நம்பிக்கை கொண்டிருப்பதால், வாழ்வின் பரிபூரண சுதந்திரத்தை, மனக்கட்டுப்பாடுடன் அதனை அனுபவிக்க முடியும்.
16.பரிசுத்தமாக உள்ளமுடனும், தெளிவான அறிவுடனும் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவனாகிய ஸ்ரீ ஈஸ்வரர் பக்கத்துணையாயிருந்து நம்மைப் பாதுகாத்து வருவார்.
17. நமது குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வாய்ப்பை, பராபரம் நமக்கு வழங்கியுள்ளது.
18. நம்மைப் பார்ப்பவர்களது வாழ்க்கையில், எல்லா வளமும், நலமும் பெறுவார்கள்.
19. படைத்தலும், கருணையும், அன்பும், அழகும், வளர்ச்சியும், பிறருக்கு உதவுதலும், செல்வ வளத்துடன் வாழ்தலும், ஏற்றுக்கொள்ளுதலும், மன்னிப்பும் ஆகிய நற்குணங்கள் பெற்று வாழ்வாங்கு வாழும் வாழ்வே இன்பம்” என ஸ்ரீ ஈஸ்வர நீதி வாக்கின்படி, மகான்கள் உணர்ந்து செயற்பட்ட உண்மைகளைக் கூறினார்.

அதனைக் கேட்டு மென்மை யாகச் சிரித்த சற்குருநாதர் பொன்னம்மாள் பாட்டியிடம், ” என்ன காரியமாக வந்துள்ளீர்கள்?” எனக் கேட்டார். பாட்டி அவர்களோ சுற்றிலும் படுத்துக் கொண்டிருக்கும் நாய்களைப் பார்த்தார். அதனைக் கவனித்த சற்குருநாதர ஸ்ரீ ஈஸ்வரர் பாட்டியிடம், “வருங்காலத்தில் நீங்கள் காணும் அபூர்வ இனங்களாகிய இவைகளை மனிதர்களே கொன்று ஒழித்து விடுவார்கள். தங்களது உணர்வுகளால் இவை களுக்கும் உண்மை புரியும். இவைகள் இனத்திற்குச் சாபம் தீர ஆசீர்வாதம் பெறக் காத்திருக்கின்றன” என்று கூறியபடி, மேல் உத்திரியத்தை எடுத்துச் சுழற்றி காற்று வருமாறு செய்தார். நாய்களைப் பார்த்து, “நல்லா இருங்கள்” எனக்கூறி பலமாகச் சிரித்தார். எல்லா நாய்களும் மெளனமாக எழுந்து ஓடிப் போய் விட்டன.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button