ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
16•11•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(139) மனிதனே புனிதன் —
பெண்களின் துணிச்சல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள் வயலுக்குச் சென்றபோது தகப்பனார் வைக்கோல் போர் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டார். அவரிடம் செய்தியைக் கூறினர். வதந்தியைக் கிளப்பிவிட்டு வீட்டைக் கொள்ளை கொண்டிருப்பார்கள் என்று கூறி உடனே வீட்டிற்குப் போகச்சொல்லி துரிதப் படுத்தினார். எல்லோரும் திரும்பும் வழியில் சுங்கம் வந்து சேர்ந்தனர்.
சுவாமியைக் கண்டவுடன், “அந்த ஆளைக் கொல்லு. காரை மேலே விட்டு ஏற்றி நசுக்கிக் கொன்றுவிடு” என மில் அதிபரின் மகன்கள் சப்தமிட்டுக் கூறினர். வாகனங்கள் நமது சுவாமியை விரட்டி வந்தன. சற்குருநாதர் இந்தக் காட்சியை அங்கே இருந்த கைகாட்டி மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு கவனித்துக் கொண்டிருந்தார். சுவாமி கைகாட்டி மரணத்தைத் சுற்றி ஓடினார். காரும் வட்டமடித்துத் துரத்தியது.
அப்போது சேத்துமடையில் இருந்து CTC பேருந்து வந்தது. சுவாமி இப்போது கிராமத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் காரை முந்திக் கொண்டு வாகனத்தை ஓட்டினார். நடத்துனரிடம், “அவரைப் பேருந்துக்குள் ஏற்றிக் கொள்” என சப்தமிட்டார். நடத்துனர் சுவாமியின் கையைப்பற்றி பேருந்துக்குள் இழுத்துக் கொண்டார். சுவாமியின் கடைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி இறக்கி விட்டனர்.
கடையின் முன்பு கிராமக் குழந்தைகள் தங்களைப் பெற்ற தாய்மார்களை அழைத்து வந்து விட்டனர். பெண்கள் கைகளில் துடப்பம், கற்கள், கம்புகள் சகிதம் நின்றிருந்தனர். சிலர் மாட்டு சாணத்தைக் கரைத்து எடுத்து வந்திருந்தனர். குழந்தைகள் கைகளிலும் கற்கள். ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் காரைக் கண்டதும் குழந்தைகள் சபதமிட்டனர். கூட்டத்தைக் கண்ட அந்த கும்பல் வேகமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஓடிப்போனது.
சுவாமி வீட்டிற்குள் போனார். அடிபட்ட பாட்டி சுவாமியைக் கண்டதும் சந்தோஷம் கொண்டார். ஆனால் பாட்டி அவர்களுக்கு சாபம் இட்டு விட்டார். சுவாமி எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. அவர் சாபமும் பின்னாளில் பலித்தது. இறைவன் அதனை நிறைவேற்றி வைத்தார். சுவாமியின் தகப்பனார் பொள்ளாச்சியில் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களையும் சென்று தனித்தனியே சந்தித்துப் பேசினார். நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு அவர்களும் கொதித்துப் போயினர். இருந்தாலும் தங்களைக் கேட்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டுக் காரியத்தில் இறங்கி விட்ட தனது ஆட்களைக் காட்டிக் கொடுக்க இஷ்டப்பட வில்லை.
ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. அவர்களுக்குக் கடும் தண்டனையை இயற்கையே வழங்கி விட்டது. கொடுத்த செல்வத்தை இறைவன் பறித்துக் கொண்டார். வறுமையில் தள்ளினார். இதனைச் சொல்லிக் காட்டுவதல்ல இதன் நோக்கம். அடாது செய்பவன் யாராக இருந்தாலும் இறைவன் தக்க தருணத்தில் தனது தண்டனையை வழங்கத் தவறுவதே இல்லை என்கின்ற இறைவன் நீதி செயல்படுகின்றது. அரசு தண்டனையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கே வந்துற்றது.
திருமணம் செய்து வாழ வேண்டிய வயது. இறைவன் தண்டனைக்கு மேல் அவர்கள் அனுபவிக்க ஏதுமில்லை. பக்கவாதத்தால் தகப்பன். சுவாமி மனது மன்னிக்கும் குணம் கொண்டது. வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.