பூம்பாறையில் போகர் ரகசியம்!

322

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

31•07•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(396) மனிதனே புனிதன் —
பூம்பாறையில் போகர் ரகசியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° போகநாதர் நவபாஷாணத்தில் முருகனின் விக்ரகத்தைப் புதிரான பழனி மலை உச்சியில் அமைத்து உள்ளது வானியல் அறிவின் உண்மையே. தவிர நிர்விகல்ப சமாதி யோகத்திற்குத் தகுதி பெற்றவர்கள் முருகனின் தொடர்பு இருந்தால், அத்தகை யோர் இங்கு பாதுகாப்பு நிலையில் யோகம் பயிலுகின் றார்கள். தெய்வீகநிலை பெற்றவர்களுக்குப் பழனி மலை, அண்டசராசரங்களைப் படைத்துக் காத்து ரட்சிக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளச் செய்ய உதவும் ஓர் தவக்கல்விசாலை என்றால் மிகையாகாது. பழனி மலை நவபாஷாண முருகனின் கோயிலில் இருந்து, நேர் தெற்கு திசையில் கோடைக்கானல் பூம்பாறையில், தசபாஷாண முருகனின் விக்ரகத்தைப் போகநாதர் ஸ்தாபனம் செய்தார். வடதுருவ, தென்துருவக் காந்தக் கற்கள் ஒன்றை ஒன்று ஆகர்ஷிப்பதைப் போன்றே, இவ்விரண்டு பாஷாண விக்ரகங்களுக்கும் தொடர்பை வானியல் வித்தகர் போகநாதர் ஏன் ஏற்படுத்தினார் என்பதை நிர்விகல்ப யோகியர் மட்டுமே அறிவர். வெறும் விவாதங்கள் செய்து கொண்டி ருப்பதைக் காட்டிலும், செயல்படு திறமையைக் கொண்டிருப்பவர் களே போகநாதர் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். நவபாஷாண, தசபாஷாண விக்ரகங்களின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீரைத் தொடர்ந்து காலை, மாலை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஜென்ம வாசனைகளால் வரும் வியாதிகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை கொண்ட எண்ணம் உடையவர்கள் கண்ட உண்மை என்பதில் சந்தேகமே இல்லை.

சரீர நோய்களை அறவே களைந்திட சித்தர்கள் கைக் கொண்ட ஓர் உபாய முறையை நமது சுவாமி அவர்கள் கூறினார். அது மிகுந்த பலனைத் தந்தது. அதனைத் தருகிறோம். “மழைக் காலங்களில் வாயகன்ற கண்ணாடி ஜாடியில் அதன் வாய்ப் புறத்தை மெல்லிய துணியினால் கட்டி வீட்டின் வெளிப்புறத்தில் வைத்துவிட வடிகட்டிய தூய்மையான நீர் அதில் சேகரமாகும். நமக்குத் தேவையான அளவில் ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர்கள் வரை சேமித்து வைக்கலாம். நல்ல பனிக்காலங்களில் பனிநீரையும் சேமிக்கலாம். மெல்லிய துணியில் வாய்ப்புறம் கட்டப்பட்ட நீரை இரவு நேரத்தில் நிலவொளியில் வைத்து ஜெபம் செய்வதுதான் இந்தப் பாடத்தின் நோக்கம். பெளர்ணமிக்கு ஐந்து நாட்கள் முன்பும், பெளர்ணமிக் குப் பிறகு ஐந்து நாட்களும் ஆக பதினோரு நாட்கள் நிலவில் வைக்கவேண்டும். பகல் பொழுதில் வெளிச்சம் படாமல் கண்ணாடிப் பாத்திரத்தை துணியால் சுற்றி மூடி வைத்து விடவேண்டும். சூரியன் மறைந்து இரவு இருள் சூழ்ந்த பிறகே சுத்த ஜலம் நிறைந்த கண்ணாடி ஜாடியை நிலவொளி யில் வைத்து, காலை ஐந்து மணிக்குள் வீட்டினுள் எடுத்து வந்து விடவேண்டும். சந்திரன் ஒளிபடப்பட, பனிநீர், மழைநீர் அற்புத மின்காந்த சக்தி பெற்றதாக மாறிவிடும். பூஜை அறை, பிரார்த்தனை செய்யும் அறை, தொழுகை அறை, அல்லது இறைவன் நாமத்தை விடாது ஜெபிக்கப்படும் இடங்களில் வைக்கப்பட்டால் அதீத ஆற்றலை அந்நீர் பெற்று விடும். சித்தர் பெருமக்கள் பாஷாணப் பாறைகளில் பெய்யும் மழைநீரையோ அல்லது நவபாஷாண, தசபாஷாண விக்ரகங்களில் அபிஷேக நீரைச் சந்திராமிர்த நீரில் கலந்து கொள்வார்கள். தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி அமிர்த நீரை ஒரு மண்டல உண்டு மனவலிமை, உடல்வலிமை பெற்று விடுவார்கள்.

தவம் பற்றி எதுவும் அறிந்திடாத மக்களுக்கு சந்திரனில் பதினோரு நாட்கள் வைக்கப் பட்ட அமிர்த நீரை இருவேளை சாப்பிடச் செய்திட, மனக் குழப்பம் நீங்கி, இறையருள் நாட்டம் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழப் பெறுவார்கள். குருவருளும், திருவருளும், இறையருளும் நிரம்பப் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள். குருவே துணை.” பயணக் குழு அவரவர்கள் இருப்பிடத்திற்கு செளக்கியமாக வந்து சேர்ந்தார்கள். நமது சுவாமி அவர்களை உலக நலனை முன்னிட்டு வீட்டை விட்டு வெளியேற்றச் செய்வது இறைவன் சித்தம் போலும். கிராமத்தில் தம்பனவசியன் குடும்பத்தார் கட்டைபஞ்சாயத்து செய்பவர்களாக மாறிவிட்டனர். அடிஉதை, குடுமிபிடி சண்டை, கூடும்ப விரோதங்கள், கொடுக்கல் வாங்கல் தகராறுகள் என எல்லாத் துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். அதற்குத் துணையாகத் தீவினை
செய்பவர்கள் தயாராக இருந்தனர். கிராம மக்கள் அனைவரும் சற்று பயத்துடனே வாழும் சூழலையும், அவர்களைக் கண்டால் தலையில் உள்ள முண்டாசை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொள்ளவும் நடைமுறைப் படுத்தி விட்டார்கள். சிலர் இவர்களைக் கண்டால் காலில் அணிந்துள்ள செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு பாதை ஓரமாகச் செல்வதும் உண்டு. காரணம் தம்பன வசியம் மக்கள் பத்தாவது படித்த பிறகு அரசு அலுவலகங்களில் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. நமது சுவாமி அவர்களின் தகப்பனார் இதற்குப் பேருதவி கள் புரிந்தார். ஆனால் நன்றி மறந்து தூசித்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button