பூமியில் தெய்வீக வடிவங்கள்!

170

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•03•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(245) மனிதனே புனிதன் —
பூமியில் தெய்வீக வடிவங்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“வானுலக குருமார்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தெய்வ நிலையில் சிறந்து விளங்கியவர்களாவர். பராபரத்தின் கட்டளையின் பேரில் அழகு வடிவமான இந்தப் பூமிக்கு, அவதார நோக்கோடு, மானுட ஜீவன்களின் அறிவு வளர்ச்சிக்காக வருகை புரிந்தவர்களே! அதுமட்டுமல்ல இப்பூமியில் நவகிரகங்களால் பஞ்சபூதக் கலவையுடன் படைக்கப்படும் ஜீவர்களை, நவகிரகங்களின் பீடிப்பில் இருந்து காப்பாற்றவும் அறிவு சார்ந்த உபாயங்களைக் கைக்கொள்ளவும், நல்வழிகள் காட்டவுமே, வானவ தூதர்கள் கர்ம பூமியில் காலடி எடுத்து வைத்தார்கள். தங்கள் பால் ஈர்ப்புப் பெற்றவர்களுக்குப் பாட போதனைகள் மூலம் அறிவைப் பெறவைத்தார்கள். உத்தம சீடர்களுக்குத் தங்களது சுய,ரூபா ரூபங்களைக் காட்டி உண்மைகளை மறை பொருளாக்கி வைத்தார்கள்.”

“அத்தகைய சீடர்களை தெய்வீக நிலைப்படுத்தி இப்பூமியின் உத்தம குருமார்களாக உருவாக்கியது பராமரம் என்னும் சக்தி! நாம் காணும் ஆலய ஜீவசமாதிகள் அனைத்தும் வானுலக தெய்வீகர்களால் உருவாக்கப்பட்ட பூலோக குருமார்களே! பூலோக குருமார்கள் தங்களது நன்றி யின் நிமித்தம் தங்களது தெய்வீகப் குருமார்களுக்கு உண்டாக்கியதே நாம் காணும் ஆலயங்களாகும். ஆலய வழிபாடுகள், ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், மந்திர ஒலிகள் அனைத்தும் தெய்வங்களாகிய அவர்களுக்கு நாம் அளிக்கின்ற அவிஸ் எனப்படும் காணிக்கைகளாகும். வானுலக வளங்களுக்கு அவைகள் சென்றால், பூலோக வளங்கள் அபரிமிதமாகப் பெருக்கி அருள் ஆட்சி நடத்துவார்கள் என்பது ரிஷிகளின் வாக்காகும்.”

“ஒர் உயிராத்மா பூமியில் படைக்கப்படும்போது, பூமியின் ஈர்ப்பில் உள்ள நட்சத்திரங்களின் சக்திகளில், அன்று எந்த நட்சத்திர சக்தி பூமியில் பாய்ந்து கொண்டிருக்கின்றதோ, அந்த நட்சத்திர சக்தியும், பஞ்சபூத சக்திகளும், நவக்கிரக சக்திகளும் சேர்ந்து நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஜீவசக்திகளாக உருவெடுக்கிறது. பூமியில் காணும் அனைத்துமே , ஒவ்வொரு பொருள்களுமே, அனைத்து சக்திகளாலும், எல்லாமுமாகச் சேர்ந்து உருவாகியதே!
ஒரு ஜீவாத்மா பூமியில் உருவாகும் போது அந்த ஜீவனுக்குரிய நட்சத்திரம் ஒன்று தனித்தனியே உருவெடுத்து வானில் உதித்து நிற்குமாம்! அந்த ஜீவனின் ஆயுட்காலம் முடியும் போது, அந்த நட்சத்திரமும் மறைந்து விடுமாம்! அநேகம் கோடி ஜீவராசிகள் படைக்கப் படுவதால் அதே அளவிற்கு நட்சத்திரங்கள் உண்டாகி வானில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றனவாம்! ஜீவராசிகள் மறையும் போது கூடவே அந்தந்த ஜீவன்களின் நட்சத்திரங்களும் உதிர்ந்து விழுந்து படைப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துமாம்! இதனை வானியல் நன்கு உணர்ந்து செயற்பட்ட தூயவர்களாகிய ஞானியர்கள் தான் அறிந்து இவ்வுலகில் குறிப்பிட்டனர்.”

“அது மாத்திரமல்ல, நவக்கிரகங்கள் ஒன்று சேர்த்து பூமியில் வாழ்ந்து வந்த மிகப்பிரமாண்டமான உடல் வளர்ச்சியைப் பெற்றுப் பல்கிப் பெருகி விட்ட, மிருக ஜீவ ராசிகளை அழித்தொழித்து விட்டன என்பதையும் தெளிவு படுத்தினர். இதற்கு நவக்கிரகங்கள் பஞ்ச பூத சக்திகளை நன்கு பயன்படுத்திக் கொண்டனராம்! கர்ம பூமியைத் தங்கள் வசமாக்கிய வானுலக குருமார்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு படிப்பினையானது. எனவே அவர்கள் நவக்கிரகங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். வானுலகில் இருந்து நமது பூமிக்குக் கலாச்சார தூதுவர்களாக வந்த, தெய்வீக சக்தி உடைய குருமார்கள், நவக்கிரகங்களில் கால்பதிக்க கடுந்தவத்தினில் ஈடுபடலாயினர். அவர்கள் சூரியன் முதற் கொண்டு எல்லா கிரகங்களிலும் தங்கள் சக்தியால், பராபரத்தின் அருளாசியுடன் கிரக தேவதைகளாக மாறி விட்டனர். அவர்களுக்குப் பூமியில் ஆலயங்கள் அமைத்து வழிபட்ட, அவர்களின் பூலோக சீடர்களாகிய குருமார்கள் (ரிஷிகள், சித்தர்கள்), தங்களது அறிவினை உபயோகப்படுத்தி அபரிமிதமான ஆற்றல் சக்திகளைப் பெற்று விட்டார்கள். தங்களுக்கு மேல் மேம்பட்ட அறிவின் ஆற்றலைப் பெற்று விட்டதால், இவர்களைக் கட்டுப்படுத்த நவக்கிரக தேவதைகளாக மாறி விட்ட வானின் குருமார்கள் தீர்மானித்து, பூமியில் பஞ்சபூத சக்திகளைக் கொண்டு, இயற்கை சீற்றங்களை ஏவிவிட்டார்கள். அதனைத் தடுக்க, சூரியனில் உண்டாகி ஒளிவெள்ளமாய்ப் பரவி, பற்பல கோள்களின் சக்திகளை வளர்த்து வரும் சூரிய சிவலிங்க அணுக்களை, வழிபடு சக்தியாகப் பூமியில், மானுட குருமார்கள் மாற்றிவிட்டனர்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button