பூமியில் சிவலிங்க வடிவம்!

198

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•03•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(246) மனிதனே புனிதன் —
பூமியில் சிவலிங்க வடிவம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“சூரியன் கோள் நமது பால் வெளி மண்டலத்தில், தனது ஒளியுடன் கூடிய வெப்பநிலை சக்தியினை வெளிப்படுத்துகிறது. இந்த வெப்பத்தைக் கொண்டு சூரியனின் ஈர்ப்பில் உள்ள அனைத்து அண்டங்களும் வாழ்ந்து கொண்டுள்ளன. நமது பூமியும் அப்படியே வாழ்வதில் அதன் தட்பவெப்பம் அநேக ஜீவராசிகளையும், தாவர வர்க்கங்களையும், பூமியினுள் திட, திரவ கனிமப்பொருட்களை உற்பத்தி செய்வதிலும் ஊக்குவித்து வளர்க்கின்றன. அதனைப் போலவே சூரிய மண்டலத்தின் மற்ற கோள்கள் வெளி விடும் சக்திகளைப் பூமி புனிதம் மிக்க வட கைலாயம் வழியே பூமிக்குள் சென்று பூமி வாழ உதவுகின்றன. அது தவிர பூமி தன்னைச் சுற்றிலும் ஆகாயத்தில், வீரியம் மிகுந்த ஓர் பாதுகாப்புப் படலங்களை உருவாக்கித் தன்னைத் தானே தற்காத்துக் கொள்கிறது. நவக்கிரக சக்திகளும், அவை களுடன் ஐக்கியமாகி வாழும், வானின் குருமார்களாகிய அநேக சக்திகளும் சேர்த்து, பூமிக்குள் வந்து வெளியேறும் போது, இந்தப் பாதுகாப்புக் கவசத்தை உடைத்து விடவும் முயற்சிகளை மேற் கொண்டன. பூமியின் மைந்தர்களாகிய மனித சமுதாயம் பெற்று விட்ட, அபரிமிதமான அறிவின் ஆற்றல் சக்திகள் அநேக சாதனைகளைப் பூமியில் உண்டு பண்ணினர். அத்தகைய சாதனைகளில் முதன்மையானது, சூரியன் வெளிப்படுத்திய அணு சக்திகளைக் கொண்டு, லிங்க வடிவைப் புண்ணிய கைலாய மலையில் பிரதிஷ்டை செய்து விட்டதுதான்! இது நவக்கிரக சக்திகள் பூமியில் தீங்கு விளைவிக்காமல் தடுப்பதற்காக, அந்நாளைய அறிவுசால் பூமியின் குருமார்கள் கடைப்பிடித்த உபாயமாகும். இன்று மனிதர்கள் இதனை சிற்றின்ப அடையாளமாக, ஏளனம் செய்வதற்கு உதாரணம் காட்டுகின்றனர்.”

“சூரியன் கோளில் இருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில், சூரியனைப் சுற்றிலும் வெப்பப் படலங்கள் படர்ந்து, படிந்து மிகவும் கனபரிமானம் கொண்டு விளங்கி வருகின்றன. சூரியனின் வெப்பப் புயல்களும், அதன் கதிர் வீச்சுக்களும், இங்கு இருந்துதான் ஆகாயப் பரவெளியில் வீசி எறியப் படுகின்றன. சூரியனுக்குள் உண்டாகும் ஆண், பெண், அலி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, தனது ஆகர்ஷன சக்தியினால் ஒன்று சேர்ந்து பிணைந்து சூரியன் கோளில் உற்பத்தி ஆகின்றன. சூரியனில், அதன் வெப்பக் கனபரிமான படலங்களில், அடிக்கடி ஏற்படும் வெப்பக் கதிர்வீச்சுப் புயல்களில் உண்டாகும் வெப்பப்படல துவாரங்களின் வழியே, இந்த அணுக்கள் வெளிப்பட்டு ஆகாயப் பரவெளியில் பரவுகின்றன. இதன் தோற்றத்தைத்தான், மனதினை நன்றாகப் பழக்கித் தனது வசப் படுத்திக்கொண்டு, உலகத்தின் நன்மையை நாடியவர்களாகிய , நல்லடியார்கள் எனப்படும் பூமியின் குருமார்கள், தங்களது உடலிலும், உள்ளத்திலும் குடி கொண்டு அருள் புரியும் இறைவனாகிய பராபரத்தின் இன்னருளுளைப் பெற்று விட்டதால், அந்த அணுக்களின் சிவலிங்கத் தோற்றத்தினைத் தரிசனம் பெற்று அறிந்து கொண்டனர்.”

“அறிந்து அதனை நவக் கிரகங்களின் அழிவுப் பிடியில் இருந்து மனித குலத்தைக் காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டனர். எத்தகைய இன்பங்களாலும், எத்துணை துன்பங்களாலும், உடலுக்கு உண்டாகும் நோய் நொடிகளினாலும் தங்களது வாழ்வு பாதிப்பை அடைந்து விடாமல் காக்கும் வழிகளை அறிந்து கொண்டனர். நவ கோள்களில் கலந்து வாழும் தங்களது குருமார்களுக்குத் தியானத்தின் வாயிலாக வழிபாடுகள் நடத்தி அருளை வேண்டிக் கொண்டிருந்தனர். அத்துடன் நடுநிலைமை தவறிடாமல நடந்து கொண்டு, மோககுணத்திலாருந்து வெற்றி பெற்றனர். இதனால் அவர்களால் நவக்கிரகப் பீடிப்பினில் இருந்து உலகத்தினைக் காக்க, சீடர்களின் குழுக்களை உருவாக்கித் தங்களுக்கும்
பாதுகாப்பை ஏற்படுத்திக் கவலையற்றுக் கடமைகளைச் செய்து வந்தனர். ஆனால் நவக்கிரக சக்திகள் மனித சமுதாயத்தின் மீது மறைமுகப் போரைத் துவங்கி விட்டனர். இயற்கையின் சீற்றங்களை உருவாக்கிப் பழிவாங்கத் துவங்கினர். நிலநடுக்கம், ஆழிப் பேரலைகள், எரிமலைச் சீற்றங்கள், பெருவெள்ளம் மழை, பஞ்சம் எனத் தங்களின் கைவரிசையைக் காட்டினார்கள். இப்போது பூமியின் குருமார்களுக்கு, நவக் கிரகங்களைச் சமாதானப் படுத்தவும், பூமிக்குள் வந்து செல்லும் நவக்கிரக சக்திகளை வெளியேற்றுவதற்கும், உள்ளே வருவதற்கும் ஓர் ஒழுங்கான அமைவை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமான, கட்டுப்பாடான சூழலை உருவாக்க வேண்டியிருந்தது. இறை அருளால் வானவரின் தெய்வீக சக்திகள் பூமிக்கு வந்து அவர்களுக்கு உதவிகள் புரிந்தனர். நவக்கிரகங்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உபதேசித்தனர். பூமியின் சிவலிங்க அணுக்களை ஆலயம் அமைத்து வழிபடும் முறைகள் காட்டினர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button