பூசல்களால் விளைந்த வினை!

189

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•05•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(334) மனிதனே புனிதன் —
பூசல்களால் விளைந்த வினை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிறு வயதில் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுக்கு ஞாபக மறதி அதிகம் என்பது தகப்பனார் திரு.APM.சாமி அவர்களின் கணிப்பு. அதிகாலையில் நான்கு மணிக்கு சுவாமி எழுந்து விட வேண்டும். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் சப்தம் ஒலி பெருக்கியில் கேட்கும். சுவாமி நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கு அருகில் வைக்கப்படும். குழந்தைகள் உறங்கும் நேரத்தில் சுவாமி அன்றையதினம் ஒப்புவிக்கும் வேண்டிய பள்ளிப்பாடம் படித்துக் கொண்டிருப்பார். படித்த பிறகு அப்படியே தூங்கிப் போவார். ஆனால் தகப்பனார் விட மாட்டார். முகம் கழுவி விட்டுப் படிக்க அமர வைப்பார். அவர் தமது பணிகளைக் கவனிக்கச் சென்று பிறகு பாட்டி மெல்ல வந்து அருகில் அமர்ந்து கொள்வார். அதிகாலையில் பாட்டி இறைவனை எண்ணி தியானத்தில் ஆழ்ந்து போவார். சுவாமி தனது பள்ளிக் கடமை களைச் செய்து விட்டு, மிகவும் விரும்பும் இறை ஆத்ம தெய்வீக தியானத்தில் அமர்ந்து விடுவார். தாயார் ஒரு போதும் இதற்குத் தடை விதித்ததில்லை. ஊக்கம் தந்ததுமில்லை. அவருக்குக் குடும்பத்தினர் நலத்தில் அக்கறை அதிகமாக இருந்தா லும் வீட்டுப் பணிச் சுமைகள் அதிகம். தனது கணவன் ஒழுக்க சீலராக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். சில சமயங்களில் கண்டிக்கும் தனது மனைவியின் கருத்தை ஆட்சேபம் செய்வதால், இருவருக்கும் பூசல்கள் வெடித்து விடும். வீட்டுக் குழந்தைகளின் மனம் இதனால் பாதிக்கும் என்று இருவரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. இந்த சமயத்தில் பாட்டி, நமது சுவாமி யுடன் சேர்ந்து தியானத்தில் அமர்ந்து கொள்வார். அதனை விடுத்து சமாதானம் செய்ய யார் சென்றாலும், அவர்களுடைய கோபம் சமாதானத் தூதுவர் மீது திரும்பி விடும். அவர்களே சமாதானம் செய்து கொள்ளட்டும் என்று ஒதுங்கிக் கொள்வதால் ஒரு நன்மை பிறகு கிடைக்கும். அதுதான் உணவு.

பாட்டி அவர்கள் ஒரு சிற்பியைப் போல அணுஅணுவாக மனதினைப் பக்குவம் செய்ய அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பொறுமையும், மன உறுதியும் அவரிடம் இருந்தது. தியானத்தில் அமர்ந்து ஆத்மார்த்தமாக இருக்க நமது சுவாமியைத் தயார்படுத்தும் போது அவர், “குருநாதர் உனக்குக் கிடைக்க வேண்டிக் கொள். பக்குவம் அவர் மூலமே கிடைக்க வழிவகைகள் சொல்வார்” என அடிக்கடி கூறி குருநாதனின் வரவை எதிர் நோக்க வைத்தார். ஆக அவருக்கு நிகர் அவரே தான். நமது சுவாமியின் தகப்பனார் திரு.APM.சாமி அவர்கள் தனது மகன் படிப்பில் சிறந்தவனாக வர வேண்டும் என்ற எண்ணமுடன் அக்கறை காட்டினார்.இயற்கை மருத்துவமுடன், ஆசானாகவும் விளங்கி வந்த திரு.T. முருகானந் தம் அவர்களிடம் கணிதப்பாடம் கற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்தார். அவரும் அக்கறை கொண்டு கணிதம் சொல்லி வந்தார். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருப்பது, பள்ளியில் கண்டிப்பு, பள்ளிக் கூடம் விட்டதும் கணிதப்பாடம் என ஆரம்பமாகி விடும். தியானம் செய்து வரும் காரணத்தால் கவனம் ஒழுங்காக இருந்தது. தன்னை அறியாத ஓர் தியான உறக்கத்தில் ஆழந்து இருந்தபோது கணிதப் பாட ஆசான் பொறுமையுடன் எதிரே அமர்ந்து பார்த்தபடி இருந்தார். சுவாமி கண் விழிப்பதாகத் தெரியவில்லை.

ஆசான் பொறுமையும் எல்லை மீறி விட்டது. இருநூறு பக்கங்கள் கொண்ட நோட்டுப் புத்தகத்தால் சுவாமி தலையில் ஒரு பெரிய போடு ஒன்றைப் போட்டார். அடி பலமாக விழுந்தும் சுவாமி கண் விழிக்க வில்லை. ஆசான் அதிர்ச்சி அடைந்து போனார். அவருக்கு இயற்கையாக எப்போதும் கண்களில் நீர் சுரந்தபடி இருக்கும். தனது தோளில் போட்டிருக்கும் துண்டினால் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பது அவரது வழக்கம். நெற்றியில் வட்டமாக சந்தனம் பொட்டிட்டு, அதன் நடுவே சிறிது குங்குமம் வைத்து, தனது துண்டினால் அதனை அழுத்தி ஈரம் போக்கிப் பளிச்சென நெற்றியில் திகழ இருப்பார். நல்ல உயரமும், ஒடிசலான தேகமும் உடைய ஆசான், தனது கண்களில் வழிந்து கொண்டிருக்கும் நீரைக்கூட துடைக்காமல் இமையாது பார்த்துக் கொண்டே இருந்தார். சப்தம் கேட்டு சுவாமியின் தகப்பனார் ஓடி வந்தவர் அப்படியே நின்று கோபத்துடன் மகனை முறைத்துப் பார்த்தார். உடனே பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு, சுவாமியை அடிப்பதற்கு வேகமாக வந்தார். பிரம்பை ஓங்கியும் விட்டார்.

” APM.சாமி..பொறப்பா பொறு பொறு. என்ன காரியத்தைச் செய்யத் துணிந்தாய் ” என்று கூவியபடி திரு.T.முருகானந்தம் வாத்தியார் சுவாமியின் தகப்பனார் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button