ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
23•03•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(266) மனிதனே புனிதன் —
பிறர் குற்றம் தெரிகிறது, ஆனால்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சொந்தபந்தம் வீடுகளுக்குச், “அப்பா இங்கு வந்தாரா? ” என்று விசாரித்தார்கள். அவர் பழக்க வழக்க நண்பர்களிடம் சென்று, “அப்பாவைப் பார்த்தீர்களா? ” என்று கேட்டார்கள். இல்லை என்ற பதில் வந்தது. பிறகு
ஏதாவது சங்கடத்தினால் ஊரை விட்டுப் போயிருப்பாரோ? என்று எண்ணி, குடும்பத்தினர் கூடிப் பேசிக் கொண்டனர். அப்படி யெல்லாம் போகக் கூடிய மனிதரல்லவே என நினைத்தார்கள். இரயில் பாதையில் யாரோ அடிபட்டுக் கிடப்பதாகத் தகவல் வரவே உறவினர்கள் சென்று பார்த்து வந்தனர். அது யாரோ ஒரு பெண் ரயில் பாதையைக் கடந்து செல்லும் போது, அடிபட்டு இறந்து போயிருந்தார். ஏதாவது கிணறு, குளங்களில் விழுந்து இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பார்த்து விட்டு வந்தனர். இரண்டு நாட்கள் சென்று விட்டன. மாடுகளும் கேட்பாரற்றுப் பரிதவித்துக் கொண்டு இருந்ததால், வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்று பார்த்தால் அவர்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சி. மலை சாய்ந்து விட்டது போல் வாட்டசாட்டமாக அவர் குப்புற விழுந்து கிடந்தார். உடல் விரைந்து, எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தது. துர்வாடை வீசியது. சாப்பிட்ட உணவே விஷமாக மாறி அவரைக் கொன்று விட்டதை வீட்டார் அறிந்திருக்க வில்லை. யாராவது எதிரிகளின் வேலை தான் என்றே எண்ணமிட்டனர்.
என்னதான் தியானம் செய்தாலும், தான் திருந்தி, தனது குடும்பத்தினருக்கும் நல்ல வழி காட்ட வேண்டுமல்லவா? காலசர்ப தோஷம் இருக்கும் போது அதற்குரிய பரிகாரங்கள் செய்து கொண்டு பூமியில் தனது ஆயுள் உள்ளவரை வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும். ஞானம் என்ற பெயரில் அனைவரும் கூடி அமர்ந்து, கற்பனைக் காட்சிகள் பார்ப்பதும், எதிர் மறையாகத் சிந்தித்துக் கொண்டிருப்பதால் உலகினுக்கு அதனால் என்ன உபயோகம்? கட்டுப்பாடான வாழ்வும், களங்கமில்லா உள்ளமும் கொண்டு, இறைசக்தியினை மறவாமல் வாழும் இல்லற தர்மத்தை கடைப்பிடித்து, குடும்பத்தினருக்கு உபகாரமாக இருந்து, மற்றவர்களுக்குச் சேவை மனப்பான்மையுடன் உதவிகள் புரிந்து வாழும் சந்தோஷமான, மனநிறைவான வாழ்வில் தெய்வீக ஆன்மிகம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்! இது உண்மையிலும் உண்மை.
தியானம் செய்து வருகிறோம் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் சமாதி வழிபாடுகள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் சென்று, தியானம் செய்து ஞானசக்தி பெற்ற குடும்பத்தினர் செய்த, அவதூறு பிரச்சாரத்தால் அழிந்து பட்டுப்போனது ஓர் அப்பாவி மனிதனின் குடும்பம். இறைசக்தி வழியில் அவர்கள் காப்பாற்றப் பட்ட சம்பவத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். நமது மன்னிக்கும் மனம் நம்மை ஜாக்கிரதையாக வாழ வழிகாட்டும் அல்லவா? திருப்பூரில் வியாபாரம் செய்து வந்தவர் திரு.குமாரசாமி. அவரது துணைவியார் திருமதி. குன்னாத்தாள். நான்கு ஆண் மக்களும், மூன்று பெண் மக்களும் பிறந்தனர். திருப்பூர் அருகில் உள்ள மங்களம் செட்டி பாளையத்தில், அக்குடும்பம் சிறப்புடன் வாழ்ந்து வந்தது. மூத்த மகளை, சூலூரில் குழந்தை பாக்கியமற்ற குடும்பத்திற்கு இரண்டாம் தாரமாகக் கொடுத்தனர். போனவேளை ஆண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் திரு.குமாரசாமி மரணம் அடைந்தார்.
குடும்பத்தைச் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாவது மகன் மீது விழுந்தது. அவரும் பாடுபட்டு அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். அவரது அக்காள் சூலூரிலேயே பெண் பார்த்து தனது மூத்த தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவரும் வாழைத் தோட்டத்து ஐயன் கோயில் செல்லும் வழியில் உள்ள முக்கியமான ஊரில், ஓர் வீட்டின் முன்புறத்தில் வாடகைக்குக் கடைபிடித்து வியாபாரம் செய்தார். வருவாய் நல்ல படியாக அமைந்தது. சூலூர் செல்லும் வழியில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கி, வீட்டையும் கட்டி முடித்தார். வாடகை வீட்டில் குடியிருந்த குடும்பம் சந்தோஷமாகச் சொந்த வீட்டில் குடியேறியது. அப்போது அந்த வியாபாரிக்குச் சொந்தத்தில் எதிரிகள் உருவானார்கள். நல்ல வருமானம் ஈட்டும் அவரைக் குடும்பத்துடன் ஊரை விட்டு விரட்டிடக் கால நேரம் பார்த்திருந்தனர். அப்போது கள்ளச் சாராயம் பெருகி அமோக விற்பனை செய்து வந்த நேரம் . சாராய வியாபாரி, இவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் கடை நடத்தி வந்தார். சாராய வியாபாரத்தைக் கவனிக்க வீட்டின் முன்னால் வாசலில் அமர்ந்து வசூல் செய்து வந்தார்கள். ஊரில் பேர் பாதி கிருஸ்தவப் பெருமக்கள். காடா நெசவுத் தொழில் கொடிகட்டிப் பறக்கும் ஊர் அது. நெசவுத் தொழிலாளர்கள் கூட்டம் அந்த மதுவின் போதைக்கு அலைமோதத் துவங்கியது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.