பிரிவுக்குப்பின் வருக உறவே!

224

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•05•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(312) மனிதனே புனிதன் —-
பிரிவுக்குப்பின் வருக உறவே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்கள் ஓம் குரு இல்லத்தை விட்டு வெளியேறு வதைத் தவிர வேறுவழி ஒன்றும் புலப்படவில்லை. தினமும் குழந்தைகளின் தேவைகள் முதல் எல்லாவற்றிற்கும் வீட்டில் தினமும் கேட்டுப்பெற வேண்டிய சூழல். தேவைகளுக்கு ஏதாவது பெறும் பொழுது அதன் காரணத்தை ஒவ்வொருவர் இடமும் சொல்லிப் புரிய வைப்பது இயலாததாக இருந்தது. ஊருக்குச் செல்ல பத்து ரூபாய் மட்டுமே கிடைக்கும். திரும்பி வரும் போது அங்கேயிருந்து பணம் பெற்றுக் கொண்டு வரவேண்டும். இப்போது நாச்சியார் ஊருக்குச் செல்வதற்கு ஒரு மாத காலம் முன்பே அனுமதி பெற்றிருந்தார். அதன்படி பேருந்து சத்தத்திற்குப் பணம் கேட்டபோது ஒரு பிரளயமே நடந்து முடிந்து போனது. “வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தால் பணத்தின் அருமை உங்களுக்குத் தெரியாது. உனது புருஷனை தினக்கூலி வேலைக்குச் சென்று பத்து ரூபாய் சம்பாதித்து அந்தப் பணத்தில் செலவு செய்து பார். இதுதான் கடைசிக் தடவை பத்து ரூபாய் தருவோம். உனக்குத் தேவை என்றால் உம்புருஷனக் கேள். அதைவிட்டு எங்களிடம் செலவுக்கும் பணம் கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லை? ” என்று A.P.சாமி அவர்கள் தமது மருமகளைப் பார்த்து இப்படிக் கூறியவுடன் ‘கொல்லென’ அனைவரும் சிரித்து விட்டனர்.

மாமியார் அவர்கள் ,” உங்கப்பன் கிட்டச் சொல்லி ஏதாவது தொழில் பண்ணி வைக்கச் சொல்லிப் பிழைக்கப்பார். எனக்கும் மூன்று பெண்கள். அவர்களுக்குத்தான் எல்லாமே. நீங்கள் எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்க ளேன் ” என்று கூறியதும் மீனாம்பாள் நாச்சியார், ” மகனுக்கு எந்தத் தொழிலும் சொல்லி வைக்காமல் வளர்த்து விட்டீர்கள். கல்யாண மும் செய்து வைத்துவிட்டீர்கள். குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். ஏதாவது தொழிலுக்கு உதவுங்கள்.” என்று கேட்டதும் வந்தது பிரளயம். அதனை இங்கு எழுத முடியாது. மனிததர்மம் அதற்கு இடம் தராது. வீட்டிற்கு வந்த மருமகளை எவ்விதக் குற்றமும் இன்றிக் கண்ணீர் சிந்த வைக்கும் குடும்பங்கள் என்றுமே வாழ்ந்ததாகச் சரித்திரமே கிடையாது. துன்பமே வாழ்க்கை என்றான பிறகு, யாரை நோவதால் என்ன பலன்?
மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் எதையுமே தாங்கக் கூடிய மனோபலம் உள்ளவர். அதனால் அவரது தெய்வீக எண்ணமும், விடாமுயற்சியுமே அவரை வெற்றிபெறச் செய்தது. அவருக்கு தீயசக்திகளை ஏவிய தம்பனவசியன் குடும்பத்தார் இறையருளால் கடுமையான தண்டனைக்கு ஆளாகி திக்குக்கு ஒன்றாகச் சிதறி ஓடி மீளாத் துன்பங்களுக்கு ஆளாகி்ப் போனார்கள்.

பாட்டி அவர்கள் சொல்படி கேட்டு சிறிது காலம் என்ன தீமைகள் செய்தாலும் பொறுத்துக் கொள்வது என்றும், மனத்துன்பம் எல்லை மீறும் போது பாட்டி அவர்களின் அனுமதி பெற்று வெளியேறிச் செல்வது என்றும் முடிவானது. சிறுவயது முதற்கொண்டு கொண்டே துன்பம் நிறைந்த வாழ்க்கைக்குப் பழகி விட்ட நமது சுவாமியின் குழந்தைகள் சகிப்புத் தன்மை யைப் பெற்றிருந்தனர். செல்வமும், செல்வாக்கும் உடைய குடும்பத்தில் பிறந்தும் துன்பம் அதுவும் இளமையில் துன்பம் என்பது அனுபவித்தோர் அடைந்த அனுபவமே. காலம் என்பது எல்லையற்றது.கடந்த காலமும், எதிர்காலமும் மனிதர்களின் காலம் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்காலமே நமக்கு உரிய காலம். அதனை வீணாக்கக் கூடாது. இதில்தான் மனிதன் சாதனைகள் அடங்கிக் கிடக்கின் றன. கழித்து போய்விட்ட கடந்த காலத்தைப் பற்றியும். இனி வரப் போகின்ற எதிர்காலத்தைப் பற்றியும் நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டே இருக்கும் மனிதன், தற்போது தன் வசமுள்ள நிகழ்காலத்தை வீணாக்குகின்றானே? இன்னும் ஸ்ரீ ஈஸ்வர நீதியில் நம்பிக்கை யைப் பெற்றுவிட்ட சுவாமியின் குடும்பத்தைக் கருணையுடன் காத்திட இறையருள் என்றும் துணை செய்யும் என்ற நம்பிக்கையுடன், சற்குரு நாதரின் வரவுக்காக அவர்கள் பொறுமையுடனும் இறை ஜெபத்துடனும் வேண்டிக் கொண்டிருந்தனர்.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button