பிரம்மத்தின் விளக்கம்?

123

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•11•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(146) மனிதனே புனிதன் —
பிரம்மத்தின் விளக்கம்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஆகாயத்தில் படர்ந்திருக்கும் தூசிப்படலம், காந்தபுல சக்தியால் ஈர்க்கப்பட்டு, தனது சுவாசத் துடிப்பால் ஒன்று சேர்ந்து உருக்கொண்டு கோளங்களாகவும், நட்சத்திர மண்டலங்களாகவும் மாறுகின்றன. சில நெருப்புக் கோளங்களாகவும் மாறுகின்றன். அவற்றின் மீது நீரமிலத் தன்மைகள் மோதுகின்றன. நீரமிலத்தன்மைகள் குளிர்ந்து, நெருப்புக் கோளத்தில் மழையாகப் பொழிகின்றன. நெருப்புக் கோளத்தில் விழும் மழைநீர் உடனே ஆவியாகி மேல் நோக்கிச் சென்று மீண்டும் குளிர்ந்து நீராகி மழையாகப் பொழிந்து கொண்டே இருக்கின்றது. நீரும், நெருப்பும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள், நீர் ஆவியாகவும், குளிந்து மழையாகவும், நெருப்பின் மோதலில் இடைவிடாது தனது செயலில், தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருப்பது பிரம்மம்” என்று பதில் கூறினார் தவத்திரு. வேணு கோபால சுவாமி.

எல்லோருக்கும் மாலையில் சூடாக வாழைக்காய்பஜ்ஜி, மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. மறுபடியும் எல்லோரும் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவரும், சங்கத்தின் குருவும் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்தபடி எல்லோரும் அமர்ந்தனர். தவத்திரு.வேணு கோபால சுவாமி “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொனனார். எல்லோரும் உரத்த குரலில் திருப்பிச் சொன்னார்கள். இப்படி மூன்று தடவை சொல்லி முடித்துக் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்து விட்டனர். பத்து நிமிடங்கள் சென்றபிறகு தவத்திரு.வேணு கோபால சுவாமி அதே மந்திரத்தைக் கூற, எல்லோரும் திருப்பிச் சொல்லி தியானத்தை நிறைவு செய்து கொண்டார்கள். மீண்டும், மீண்டும் தியானக் காட்சிகளும், அதற்கான விளக்கங்களும் பற்றிப் பேசினர். தியானத்தில் தோன்றும் ஒரு காட்சிக்கு ஆறு வகையான விளக்கங்கள் உள்ளது என கூறப்பட்டது. அவரவர்கள் ஆன்மபலத்திற்கு ஒப்ப, ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஒப்ப, தியானக் காட்சிகளுக்கு ஆன்மிக விளக்கங்கள் மாறுபடும் என்று வலியுறுத்தி, தவத்திரு. வேணும் கோபால சுவாமிகள் கூறினார்கள்.

தியானக் கூட்டம் நிறைவு அடைந்த பிறகு, பக்தர்கள் தங்களது குருவைச் சூழ்ந்து கொண்டார்கள்! ஆசீர்வாதம் கேட்டார்கள். அநேகம்பேர் எலுமிச்சம் பழங்கள், புதிய விபூதிப் பொட்டலங்கள் அவரிடம் கொடுத்தனர். விபூதிப் பொட்டலத்தைத் திறந்து அதனுள் தனது ஆள்காட்டி விரலை நுழைத்து மந்திரித்துக் கொடுத்து, ஒவ்வொரு பக்தர்களுக்கும் நெற்றியில் விபூதி பூசிவிட்டு, நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கூறினார். சிலர் எலுமிச்சை கனியைக் கொடுத்தனர். அதனை அவர்கள் நெற்றியில் வைத்து ஜெபம் செய்து கொடுத்துப் பத்திரமாக வைத்திருந்து, காரியம் ஆகவேண்டி ஜெபித்து எடுத்துக் கொண்டு போனால் வெற்றி நிச்சயம் என்றார். சிலருக்கு அதனைப் பிழிந்து சாப்பிட்டால் வியாதிகள் தீரும் என்றும் கூறி ஆசீர்வாதம் செய்தார்.

நமது சுவாமி இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தனது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரரை எண்ணி தியானத்தில் அமர்ந்து விட்டார். பொள்ளாச்சி தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் மகனை அனுப்பி நமது சுவாமியை அழைத்து வரச் செய்தார். சுவாமி மெளனமாகச் சென்றார். அவர்கள் அநேகம் பேர் அங்கு நிலவும் குளிரில் இருந்து தப்ப தனியறைகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். சுவாமியும் மற்றும் சிலர் மட்டுமே மண்டபத்தில் தங்கி இருந்தனர். காடு, மலைகளுக்குச் சென்று தவம் செய்து வந்த நமது சுவாமி கடும் குளிரையும் தாங்கும் யோகம் கற்றவர். அதனால் அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அங்கு நமது சுவாமி அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button