பிரபஞ்சம் விரும்பும் உலகம்!

142

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•03•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(244) மனிதனே புனிதன் —
பிரபஞ்சம் விரும்பும் உலகம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அழகான தோற்றமும், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இயற்கைச் சூழலும், எந்த அண்டங்களில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அருமையான பாதுகாப்பும், தெய்வீக சக்திகள் விரும்பும் வண்ணம் இருக்கின்ற படைப்பின் அதிசயமும், அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையும், அறிவை உபயோகப் படுத்தினால் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன அனைத்து தாவர, கனிம செல்வ வளங்களும், கர்மவாழ்வினுக்கு உகந்த எல்லா வசதிகளும் கொண்டு இறை சக்தியினால் உருவகப் படுத்தப் பட்டதே சொர்க்கமாக விளங்கும் புனிதமான இந்த பூமி. வடதுருவ, தென்துருவ அதிசயம் மிக்க பனிப்படலங்களும், உப்பு நீரால் சூழப்பட்ட வடிவமும், பூமியின் மையத்தில் பொங்கிப் பிரவகிக்கும் நீரும், நெருப்பும் சேர்ந்த கலவையும் கொண்ட பிரபஞ்சத்தின் முழு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது இவ்வுலகம்.

பூமியின் மீது ஆதிக்கம் செலுத்த எண்ணம் ஏற்படுவதற்கு மேற்கூறிய காரணங்களே போதுமானது. இந்த கர்ம பூமியில் உயிரினங்களின் படைத்தல் சக்தி வெளிப்படவே, நமது சூரியக் குடும்பத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட கோள்களைத்தான் நாம் நவக்கிரகங்கள் என்று அழைக்கின்றோம். இந்த நவக்கிரகங்களின் சக்தியின் கலவை கொண்டே, உயிரினங்களின் படைத்தல் என்னும் உன்னதமான செயல் நடைமுறைப் படுத்தப்பட்டது. நவக்கிரகங்களை, அவைகளின் சக்தி ஆற்றலை ஈர்க்கும் விதமாகப் பூமி அமைந்திட வேண்டும் என்பதற்காகவே பிரபஞ்ச சக்தி தனது அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தியது. அதனால் பாரதம் உருவெடுத்தது. தென் துருவத்தின் ஒர் தீவைக் கொணர்ந்து வட பால் துருவத்துடன் இணைத்துப் பாரத தேசத்தையும், வடகைலாய மலையையும் இறைவன் கட்டளைப்படி வானவர்கள் உருவாக்கினார்கள். படைத்தல், காத்தல், சம்ஹரித்தல் எனும் முத்தொழில் சக்தியாக வட கைலாயம் உருவாக்கப்பட்டது. இதனைத்தான் திருக்கைலாயம் என்று சத்திய தர்மங்கள் குறிப்பிடுகின்றன.

திருக்கைலாய மலையின் உச்சியில் நவகிரகங்களின் சக்தியை ஈர்க்கும் ஸ்ரீ நாகலக்ஷ்மி தேவதா ஆற்றல் சக்தி உருக் கொண்டது. சூரியக் குடும்பத்தில் நமது பூமியில் அறிவு ஜீவிகளாய் விளக்கப் போகும் ஜீவன்களை உருவாக்க நவகிரக சக்திகள் மிகவும் அவசியம். பூமியில் சிருஷ்டியை துவங்க முதலில் செவ்வாய் கோள் சக்தியும், அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கோள் சக்தியாக திருக்கைலாய மலையின் உச்சியில் ஸ்ரீ நாகலக்ஷ்மி பீடத்தின் வழியே, பூமிக்குள் செல்லுகின்றன. அவை பூமியில் அநேக உயிரினங்களைச் சிருஷ்டி செய்ய உதவின. பிறகு அவைகள் தென் துருவம் வழியாக வெளியேறி மீண்டும் தங்களது கோள்களுக்குத் திரும்பிச் சென்று விடுகின்றன
மீண்டும் அவைகள் பூமியின் வட கைலாசம் வழியே பூமிக்குள் செல்கின்றன. இப்போது அவைகள் தாம் ஏற்கனவே படைத்த ஜீவன்களைக் காக்கும் சக்தியை அருளிப் பூவுலகை விட்டு தென்துருவ வாயில் வழியே மீண்டும் தங்களது கோள் மண்டலங்களுக்குச் சென்று விடுகின்றன. அடுத்து மூன்றாவது முறையாக சம்ஹார சக்தியாக பூமிக்குள் வரும் நவக்கிரக சக்திகள் இப்போது தனது ஆற்றலை முழு வேகத்துடன் செயல்பட்டு ஜீவன்களை அழித்து விடுகின்றன. பரிணாம வளர்ச்சியில் இப்பூமியில் தோன்றிய அநேக ஜீவன்கள், அபூர்வப் பிராணிகள் அனைத்தும் நவக்கிரகங்களின் சம்ஹாரம் கோபத்தில் பலியாகி விட்டன. இனி மனித ஜீவர்களைத் தங்களது இஷ்டம் போல் அழித்து ஒழித்து விட நவ கோள்கள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தன. இப்போது தான் பூமியில் இருந்து ஆறாம் அறிவில் பகுத்தறியும் சக்திகளைப் பெற்று விட்ட மனிதர்களை, நவக்கிரகங்களின் கோரப் பிடியில் இருந்து காப்பாற்றத்தான் ஆதி குரு நாதனைப் போன்று அநேக குருமார்கள் இந்தப் பூமிக்கு வருகை புரிந்தார்கள் என்று திருக்கைலாய சித்தர்கள் வழி வழியாகப் போதித்து வந்துள்ளார்கள்! அதன் விபரங்கள் …?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button